மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம்
பலகலைக்கழகத்தின் இயந்திரவியல் கட்டிடம் | |
முந்தைய பெயர் | Kolej Universiti Kejuruteraan Utara Malaysia |
---|---|
குறிக்கோளுரை | அறிவு, நேர்மை, மேன்மை (Knowledge, Sincerity, Excellence) (Ilmu Keikhlasan Kecemerlangan) |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | சூலை 25, 2001[1] |
வேந்தர் | துவாங்கு சையது பைசுதீன் புத்ரா[2] |
துணை வேந்தர் | சுலைமான் சவுலி (Lt Kol Prof. Ts. Dr. Zaliman Sauli) |
மாணவர்கள் | 14,000 |
அமைவிடம் | , 6°26′50″N 100°14′39″E / 6.44722°N 100.24417°E |
வளாகம் | பல வளாகங்கள் |
சேர்ப்பு | ASAIHL[3] பன்னாட்டு U8 கூட்டமைப்பு[4] மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக குழுமம் |
இணையதளம் | www |
மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம் (ஆங்கிலம்:(Universiti Malaysia Perlis; மலாய்: Universiti Pahang Malaysia) (UniMAP) என்பது மலேசியா, பெர்லிஸ், கங்கார்; ஆராவ் நகரங்களில் உள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம்; மற்றும் பல்துறை தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும்.
தொடக்கத்தில் இந்தப் பல்கலைக்கழகம் வடக்கு மலேசிய பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (ஆங்கிலம்:(Northern Malaysia University College of Engineering; மலாய்: Kolej Universiti Kejuruteraan Utara Malaysia) (KUKUM) எனும் பெயரில் நிறுவப்பட்டது.[5]
பின்னர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகத் தகுதி உயர்த்தப்பட்டது.
பொது
[தொகு]இந்தப் பல்கலைக்கழகம் 25 சூலை 2001 அன்று மலேசியாவின் உயர் கல்விக்கான 17-ஆவது பொதுக் கல்வி நிறுவனமாக (வடக்கு மலேசிய பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி) நிறுவப்பட்டது.
7 பிப்ரவரி 2007 அன்று, வடக்கு மலேசிய பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி ஒரு முழு அளவிலான பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு அதன் தற்போதைய மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம் எனும் பெயரைப் பெற்றது.[6]
வரலாறு
[தொகு]2 மே 2002 அன்று பெர்லிஸ் ஆராவ் நகரில் உள்ள ஒரு தற்காலிக வளாகத்தில் அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது. சிறிது காலத்திற்குப் பிறகு, பாடத்திட்ட மேம்பாடு, கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாணவர் சேர்ப்பு நடவடிக்கைகள் தொடங்கின. 2002/2003 கல்வி அமர்வுக்கு 119 மாணவர்களின் முதல் சேர்க்கை 20 சூன் 2002 அன்று தொடங்கியது.
தொடக்கத்தில் இரண்டு பாடத் திட்டங்களை வழங்கிய மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம்; தற்போது ஏறக்குறைய 10,000 மாணவர்களுக்கு கல்வி வசதிகளை வழங்கி வருகிறது. ஆறு பட்டையத் துறைகள், 37 இளங்கலை பட்டப்படிப்புகள், 20 முதுகலை பட்டப்படிப்புகள், பன்னிரண்டு தத்துவவியல் ஆய்வுகள்; ஆகியவற்றை வழங்கி வருகிறது.
தீபகற்ப மலேசியாவின் வடக்கில் அமைந்துள்ள மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம்; பெர்லிஸ் மாநிலத்தின் 30 இடங்களில் தன் துணைக் கல்வி வளாகங்களைக் கொண்டுள்ளது.
தரவரிசைகள்
[தொகு]ஆண்டு | தரநிலை | மதிப்பீட்டாளர் |
---|---|---|
2013 | 201-250 | ஆசிய பல்கலைக்கழகத் தரவரிசை |
2014 | 201-250 | ஆசிய பல்கலைக்கழகத் தரவரிசை |
2015 | 201-250[7] | ஆசிய பல்கலைக்கழகத் தரவரிசை |
2016 | 201-250[8] | ஆசிய பல்கலைக்கழகத் தரவரிசை |
2017 | 221-230[9] | ஆசிய பல்கலைக்கழகத் தரவரிசை |
2018 | 221[10] | ஆசிய பல்கலைக்கழகத் தரவரிசை |
2019 | 201[11] | ஆசிய பல்கலைக்கழகத் தரவரிசை |
2020 | 701-750[12] | ஆசிய பல்கலைக்கழகத் தரவரிசை |
இணைப் பல்கலைக்கழ்கங்கள்
[தொகு]- மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம் (UTHM)
- மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (UTeM)
- மலேசிய பகாங் பல்கலைக்கழகம் (UMP)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Background
- ↑ "The Chancellor - UniMAP". Chancellor of Universiti Malaysia Perlis. பார்க்கப்பட்ட நாள் 30 October 2014.
- ↑ "The Association of Southeast Asian Institutions, of Higher Learning". பார்க்கப்பட்ட நாள் 17 July 2015.
- ↑ "GU8 Member Institutions". Global U8 Consortium. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
- ↑ "Background". www.kukum.edu.my. Archived from the original on 27 October 2005.
- ↑ "Majlis Pelancaran UniMAP" (PDF).
- ↑ "Universiti Malaysia Perlis". Quacquarelli Symonds. பார்க்கப்பட்ட நாள் 17 September 2015.
- ↑ "Universiti Malaysia Perlis". Quacquarelli Symonds. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.
- ↑ "Universiti Malaysia Perlis". Quacquarelli Symonds. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.
- ↑ "Universiti Malaysia Perlis". Quacquarelli Symonds. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.
- ↑ "Universiti Malaysia Perlis". Quacquarelli Symonds. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.
- ↑ "Universiti Malaysia Perlis". Quacquarelli Symonds. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.