உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வலையமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வலையமைப்பு
Malaysian Technical University Network
Rangkaian Universiti-Universiti Teknikal Malaysia
சுருக்கம்MTUN
உருவாக்கம்மார்ச்சு 2006; 18 ஆண்டுகளுக்கு முன்னர் (2006-03)
தலைமையகம்மலேசியா
உறுப்பினர்கள்
4 பல்கலைக்கழகங்கள்
வலைத்தளம்mtun.uthm.edu.my
முன்னாள் பெயர்
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரிகளின் வலையமைப்பு
(Technical University College Network of Malaysia) (TCUN)

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வலையமைப்பு (மலாய்: Rangkaian Universiti-Universiti Teknikal Malaysia; ஆங்கிலம்: Malaysian Technical University Network) (MTUN) என்பது மலேசியாவின் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் ஒரு வலையமைப்பைக் குறிப்பிடுவதாகும். தற்போது மலேசியாவில் உள்ள நான்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் இந்த வலையமைப்பில் உறுப்பியம் பெற்றுள்ளன.[1]

முன்னர் இந்த அமைப்பு மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரிகளின் வலையமைப்பு (Technical University College Network of Malaysia) (TUCN) என்று அழைக்கப்பட்டது. இந்த அமைப்பு 2006-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.[2]

பொது

[தொகு]

பிப்ரவரி 2007 இல், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரிகளின் வலையமைப்பு என்பது மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வலையமைப்பு என மாற்றம் கண்டது.

2007-ஆம் ஆண்டில் மலேசியாவில் இயங்கிய நான்கு தொழில்நுட்பக் கல்லூரிகளின் தரநிலைகள், பல்கலைக்கழகத் தகுதிக்கு தரம் உயர்த்தப்பட்டதால், அவை ஒன்றிணைந்து இருந்த வலையமைப்பின் பெயரிலும் மாற்றம் ஏற்பட்டது.[3]

தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள்

[தொகு]
கல்விக் கழகம் மாநிலம் நாடு
மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம்
(Universiti Tun Hussein Onn Malaysia) (UTHM)
ஜொகூர் மலேசியா
மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம்
(Universiti Malaysia Perlis) (UniMAP)
பெர்லிஸ் மலேசியா
மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
(Universiti Teknikal Malaysia Melaka) (UTeM)
மலாக்கா மலேசியா
மலேசிய பகாங் பல்கலைக்கழகம்
(Universiti Malaysia Pahang Al-Sultan Abdullah) (UMPSA)
பகாங் மலேசியா

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Official Web Portal of Malaysia Technical University (MTU)". mtun.uthm.edu.my. பார்க்கப்பட்ட நாள் 19 July 2024.
  2. "History And Establishment Of MTUN". mtun.uthm.edu.my. பார்க்கப்பட்ட நாள் 19 July 2024.
  3. "Makluman Penawaran Kemasukan Ke Program Ijazah Sarjana Muda Teknologi Kejuruteraan Dengan Kepujian Di Malaysian Technical University Network (MTUN) Dan Ijazah Sarjana Muda Pendidikan Vokasional Dengan Kepujian Di UTHM Bagi Lepasan Diploma Kemahiran Malays". www.dsd.gov.my. பார்க்கப்பட்ட நாள் 19 July 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]