மருத்துவர் விஜய் பால் நினைவு நூலகம்
மருத்துவர் விஜய் பால் நினைவு நூலகம் | |
---|---|
நாடு | இந்தியா |
வகை | பொதுநூலகம் |
தொடக்கம் | 1975 |
அமைவிடம் | மனை எண் 8, உள்ளூர் வணிக மையம், பகுதி சி-7, கேசவபுரம், தில்லி-110035 |
கிளைகள் | 2 |
இணையதளம் | www.vpml.in |
மருத்துவர் விஜய் பால் நினைவு நூலகங்கள் (Dr. Vijay Pal Memorial Library) புதுதில்லியில் உள்ள மருத்துவர் விஜய் பால் நினைவு அறக்கட்டளையால் நடத்தப்படுகின்றன. சங்கங்கள் பதிவுச் சட்டம் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் ஒரு தொண்டு நிறுவனமாக இந்த அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்டுள்ளது. பொது நூலகம் ஒன்றும் மேற்கோள் நூலகம் ஒன்றும் என இரண்டு நூலகங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயங்குகின்றன.
வரலாறு
[தொகு]பொது நூலகம் 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அனைத்து பிரிவினரும் இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். பொது நூலகம், தில்லி, கேசவ் புரம், பிளாக் சி-7 இல் உள்ள சமுதாயக் கூடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ளது.[1]
மேற்கோள் நூலகம் 1993 ஏப்ரல் 11 அன்று தொடங்கப்பட்டது. இந்த குளிரூட்டப்பட்ட நூலகம் மனை எண். 8, உள்ளூர் சந்தை மையக் கட்டிடத்தில் சி-7, கேசவ் புரம், டெல்லி -110035 இல் அமைந்துள்ளது. இந்நூலகத்தினை சுமார் 450 வாசகர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். வாரத்தின் அனைத்து நாட்களிலும் நூலகம் காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, பட்டயக் கணக்கறிஞர், பொறியியல், நிறுவனச் செயலர், விலை மதிப்பீட்டுக் கணக்கர், மருத்துவம், வங்கியியல் போன்ற போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில்முறைத் தேர்வுகளுக்குத் தேர்வாகும் மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் பெரும்பாலும் இதனைப் பயன்படுத்தும் வாசகர்கள் ஆவார்கள். இவர்கள் வடக்கு தில்லி, மேற்கு தில்லி மற்றும் பிற தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் கூட வருகிறார்கள். வாசகர்களுக்கு நூலகத்திலேயே குறிப்பு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-02-10. பார்க்கப்பட்ட நாள் 2022-02-10.