மம்மன் மேத்யூ
மம்மன் மேத்யூ | |
---|---|
2015 நவம்பர் 26, 2015 அன்று புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மலையாள மனோரமா ஆசிரியர் மம்மன் மேத்யூவிடம் இருந்து, "த எய்த் ரிங்" என்ற புத்தகத்தின் முதல் நகலை குடியரசுத் தலைவர் [பிரணப் முகர்ஜி]] பெற்றார். | |
பிறப்பு | செப்டம்பர் 20, 1944 |
தேசியம் | இந்தியன் |
பணி | செய்தித்தாள் ஆசிரியர், பத்திரிகையாளர் |
அறியப்படுவது | பத்மசிறீ (2005) |
மம்மன் மேத்யூ (Mammen Mathew) (பிறப்பு: 1944 செப்டம்பர் 20) இவர் தற்போது மலையாள மனோரமாவின் தலைமை ஆசிரியர். அதன் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் 2010 ஆகத்து 1 வரை மலையாள மனோரமாவின் தலைமை ஆசிரியராக இருந்த, மறைந்த கே.எம். மேத்யூவின் மூத்த மகன் ஆவார். மேத்யூ வெளியீட்டுத் துறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றுள்ளார்.[1]
தொழில்
[தொகு]மேத்யூ இடைக்கால இந்திய வரலாற்றில் தில்லியில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலையும் முதுகலையும் முடித்தார், பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பயிற்சியாளராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, மலையாள மனோரமாவில் அதன் தில்லி நிருபராக சேர்ந்தார். 1968 ஆம் ஆண்டில், இவர் ஐக்கிய இராச்சியத்தில் கார்டிஃப் நகரில் உள்ள வெஸ்டர்ன் மெயில் (வேல்ஸ்) பத்திரிக்கையின் நிருபரானார். ஹரோல்ட் எவன்ஸின் கீழ் லண்டனில் உள்ள சண்டே டைம்ஸிலும் பணியாற்றினார். [2] மேத்யூ ஓக்லஹோமா சிட்டி டைம்ஸில் சேர்ந்தார். பின்னர் தி டெய்லி ஓக்லஹோமாவில் 1969 இல் நிருபராக பணியாற்றினார். [3] 2010 இல், இவர் தனது தந்தை கே.எம். மேத்யூவுக்குப் பிறகு மலையாள மனோரமாவின் தலைமை ஆசிரியராக ஆனர்.
விருதுகள்
[தொகு]- 2005 - இலக்கியத்திலும் கல்வித் துறையிலும் பணியாற்றியதற்காக பத்மசீ விருதினை இந்திய அரசு வழங்கியது. [4]
- 2014 - கேசரி - மகாராட்டா அறக்கட்டளையால் நிறுவப்பட்ட பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கிய லோக்மாண்ய திலக் தேசிய விருது. [5]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Mammen Mathew chosen for prestigious journalism award". The Hindu. PTI (New Delhi). January 1, 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/mammen-mathew-chosen-for-prestigious-journalism-award/article5524841.ece. பார்த்த நாள்: 16 January 2014.
- ↑ "Mammen Mathew is new Chief Editor of Malayala Manorama". August 18, 2010. பார்க்கப்பட்ட நாள் 16 January 2014.
- ↑ "Mammen Mathew to be Malayala Manoram chief editor". Times of India. PTI. August 17, 2010 இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116204932/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-17/thiruvananthapuram/28287364_1_commonwealth-press-union-mammen-mathew-k-m-mathew. பார்த்த நாள்: 16 January 2014.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "Mammen Mathew chosen for prestigious journalism award". Business Standard. December 31, 2013. http://www.business-standard.com/article/pti-stories/mammen-mathew-chosen-for-prestigious-journalism-award-113123100976_1.html. பார்த்த நாள்: 16 January 2014.