உள்ளடக்கத்துக்குச் செல்

மம்தா குல்கர்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மம்தா முகந்து குல்கர்னி (Mamta Mukhund Kulkarni )
பிறப்புஏப்ரல் 20, 1972 (1972-04-20) (அகவை 52)
மும்பை , இந்தியா
பணிமாதிரியுரு மற்றும் நடிகை

மம்தா முகந்து குல்கர்னி (Mamta Mukhund Kulkarni )(பிறப்பு:20 ஏப்ரல் 1972) ஓர் இந்தியா மாதிரியுரு மற்றும் நடிகையாவார்.[1] பெரும்பாலும் இவர் இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஆசிக் ஆவாரா (1993), வஃகத் கமாரா கை (1993), க்ராந்திவீர் (1994), கரன் அர்சுன் (1995), சப்சே படா கிலாடி (1995), ஆந்தோலன் (1995), பாசி (1996), சைனா கேட் (1998), மற்றும் சுபா ருசுதம் (2001) ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றியை தந்தன. ஆசிக் ஆவாரா (1993) திரைப்படத்தில் இவரது நடிப்புக்காக லக்சு (Lux) புதிய முகத்திற்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார். ராகசு ரோசன் இயக்கி குல்கர்னி மற்றும் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த கரன் அர்சுன் (1995) திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்றது.[2]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

இந்தியாவில் உள்ள மும்பையில் மம்தா குல்கர்னி பிறந்தார். ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணான மம்தா கவர்ச்சி உலகில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் அவளுடைய தாயின் விருப்பத்தால் இவர் திரைத்துறைக்கு வந்தார்[2]

திரைப்படத் துறை

[தொகு]

தமிழ் திரைப்படம் நண்பர்கள் வழியாக மம்தா அறிமுகமானார். இத்திரைப்படம் மேரா தில் தேரே லியே என்ற பெயரில் இந்தியில் வெளியிடப்பட்டது, எஸ். ஏ. சந்திரசேகர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். 1992 ஆம் ஆண்டு திரைப்படம் திரங்கா மூலமாக பாலிவுட்டில் மம்தா அறிமுகமானார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு மேரா தில் தேரே லியே என்ற பெயரில் வெளியானதின் மூலம் மம்தாவை பாலிவுட்டுக்கும் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இருப்பினும் 1992 இல் வெளியான திரங்கா திரைப்படத்தின் மூலம் மம்தாவிற்கு நாடு தழுவிய அங்கீகாரம் கிடைத்தது.[2] இவர் நடித்த ஆசிக் ஆவாரா (1993), வஃகத் கமாரா கை (1993), க்ராந்திவீர் (1994), கரன் அர்சுன் (1995), சப்சே படா கிலாடி (1995), ஆந்தோலன் (1995), பாசி (1996), சைனா கேட் (1998), மற்றும் சுபா ருசுதம் (2001) ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றியை தந்தன. ஆசிக் ஆவாரா (1993) திரைப்படத்தில் இவரது நடிப்புக்காக லக்சு (Lux) புதிய முகத்திற்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார். ராகசு ரோசன் இயக்கி குல்கர்னி மற்றும் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த கரன் அர்சுன் (1995) திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்றது.

சர்சைகள்

[தொகு]

1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு பிரபலமான இந்திய சினிமா பத்திரிகையான ஸ்டார் டஸ்ட் இன் மேலட்டையில் (Stardust cover) மேலாடையின்றி அவரது கைகளால் மார்பகங்களை மறைத்தபடி வெளிவந்த நிழற்படத்தால் பெரும் சர்ச்சைக்கு உள்ளானார் மம்தா.[3]

திரைப்படப் பட்டியல்

[தொகு]
இந்தி திரைப்படம்
ஆண்டு தலைப்பு இயக்குநர் இதர குறிப்புகள்
1992 மேரா தில் தேரே லியே எஸ். ஏ. சந்திரசேகர் தமிழில் வெளிவந்த நண்பர்கள் என்ற திரைப்படத்தின் மறுவுருவாக்கம்
1992 திரங்கா

தமிழ் திரைப்படம்

[தொகு]
தமிழ் திரைப்படம்
ஆண்டு திரைப்படம் இயக்குநர்
1991 நண்பர்கள் எஸ். ஏ. சந்திரசேகர்[2]

தெலுங்குத் திரைப்படங்கள்

[தொகு]
தெலுங்குத் திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் இயக்குநர்
1992 தொங்கா போலீசு
1992 பிரேமசிக்காரம்

புற இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mamta Mukhund Kulkarni". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2024-09-30.
  2. 2.0 2.1 2.2 2.3 "Missing: Mamta Kulkarni has gone places, Bollywood to Kenya to Dubai to where?". 15 June 2020. 2020-06-15. பார்க்கப்பட்ட நாள் 2024-10-01.
  3. "Mamta Kulkarni (Stardust Magazine, 1992)". பார்க்கப்பட்ட நாள் 2024-10-02.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்தா_குல்கர்னி&oldid=4122195" இலிருந்து மீள்விக்கப்பட்டது