உள்ளடக்கத்துக்குச் செல்

மணிமுத்தாறு (ஊர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிமுத்தாறு
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் அம்பாசமுத்திரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

12,351 (2011)

70/km2 (181/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 176.43 சதுர கிலோமீட்டர்கள் (68.12 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/manimuthar

மணிமுத்தாறு (ஆங்கிலம்:Manimutharu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில், மணிமுத்தாறு ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

மாவட்டத் தலைமயிடமான திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்த மணிமுத்தாறு பேரூராட்சிக்கு, கிழக்கில் 7 கி.மீ. தொலைவில் கல்லிடைக்குறிச்சி; மேற்கில் 15 கி.மீ. தொலைவில் விக்கிரமசிங்கபுரம், வடக்கில் 10 கி.மீ. தொலைவில் அம்பாசமுத்திரம் அமைந்துள்ளன. அருகில் உள்ள தொடருந்து நிலையம் கல்லிடைக்குறிச்சி ஆகும்.

சிறப்புகள்

[தொகு]

இப்பேரூராட்சி, தன்னகத்தே மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை ஆகிய மலைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. தமிழக அரசிடமிருந்து, 'பாம்பே பா்மா டிரேடிங் காா்ப்பரேஷன் நிறுவனம்', இப்பேரூராட்சியில் தேயிலை பயிரிடுவதற்கு, நிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது. மலைப்பகுதியி்ல் மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து ஆகிய தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

176.43 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 62 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி), திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,141 வீடுகளும், 12,351 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. மணிமுத்தாறு பேரூராட்சியின் இணையதளம்
  4. மணிமுத்தாறு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Manimutharu Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிமுத்தாறு_(ஊர்)&oldid=3001783" இலிருந்து மீள்விக்கப்பட்டது