உள்ளடக்கத்துக்குச் செல்

மணிகண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிகண்டா
இயக்கம்செல்வா
தயாரிப்புகே. தண்ட்டபாணி
கதைஜி. கே. கோபிநாத் (உரையாடல்)
இசைதேவா
நடிப்புஅர்ஜுன்
ஜோதிகா
உமா
பசுபதி (நடிகர்)
வடிவேலு (நடிகர்)
ஆஷிஷ் வித்யார்த்தி
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புரகுபோப்
கலையகம்மலர் கம்பைன்ஸ்
வெளியீடு23 மார்ச் 2007
ஓட்டம்133 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மணிகண்டா (Manikanda) என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்திய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். செல்வா இயக்கி இப்படத்தில் அர்ஜுன் தந்தை, மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்தார். 2002 ஆம் ஆண்டில் தயாரிக்கத் தொடங்கிய இப்படம், அதிக காலம் தயாரிப்புப் நிலையிலேயே தேங்கி இருந்து, இறுதியாக 2007 இல் வெளியிடப்பட்டது. ஜோதிகாவின் "கடைசிப் படம்" என விளம்பரப்படுத்தப்பட்டது. இது 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படமான ஜெயம் மனதேராவின் மறு ஆக்கம் ஆகும். மணிகண்டா கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.[1]

கதை

[தொகு]

ராஜா ( அர்ஜுன் ) தனது தந்தையுடன் ( சந்திரசேகர் ) மும்பையில் வசித்து வருகிறார். தெய்வீதக் தன்மைவாய்ந்த பெண்ணின் ஆசியைப் பெறுவதற்காக மகாலட்சுமி ( ஜோதிகா ) மும்பைக்கு வருகிறார். ஆனால் உடனடியாக மாதாஜியைச் சந்திக்க முடியாததால், அவர் 10 நாட்கள் மும்பையில் தங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். ராஜா நடத்தும் விருந்தினர் இல்லத்தில் வாடகைக்க் அறை எடுத்து தங்குகிறார். இக்காலத்தில் ராஜாவுக்கும் மகாவுக்கும் இடையில் காதல் மலர்கிறது, அவள் தனது கிராமமான மணியூருக்குத் திரும்பிய, சில நாட்களுக்குப் பிறகு அவளுடைய அழைப்பின் பேரில் ராஜா அந்த கிராமத்துக்கு வந்து சேர்கிறான். அங்கு வந்து சேர்ந்த பிறகு, அவனுக்கும் அந்த கிராமத்துக்குமான தொடர்பை அறிந்துகொள்கிறான்.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

முன்னதாக அர்ஜுனைக் கொண்டு "கர்ணா" படத்தை இயக்கிய செல்வா இந்த படக் குறித்து 2003இன் நடுப்பகுதியில் அறிவித்தார். ரிதம் படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக அர்ஜுனுடன் ஜோதிகா இணைந்து நடிக்கும்படமாக இது அமைந்தது. பி. வாசு, பசுபதி, ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் எதிர்மறை பாத்திரங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். படத்தின் தலைப்பு "நண்பா" என்று மாற்றப்படும் என்று வதந்திகள் பரவின. ஆனால் பின்னர் அது உண்மையில்லை என்று நிரூபிக்கப்பட்டது.[2] படத்தின் கதை கீரிபட்டி என்ற கிராமத்தில் நடக்கிறது, அங்கு பல ஆண்டுகளாக தேர்தல்கள் நடத்தப்படவில்லை.[3] எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் புகழ்பெற்ற பாடலான "மாமா மாமா" இந்த படத்தில் மறுகலவை செய்யப்பட்டது.[4] நிதி நெருக்கடி காரணமாக படம் கொஞ்ச காலம் நிறுத்தப்பட்டது. இதனால் செல்வாவும், அர்ஜுனும் ஆணை படப் பணிகளுக்குச் சென்றனர்.[5] அதே நேரத்தில், செல்வா (சத்யராஜ் மற்றும் சிபிராஜ் உடன்) "மா.மு" அதைத் தொடர்ந்து "தோட்டா" (ஜீவன் மற்றும் ப்ரியாமணி), நவ்தீப்பைக் கொண்டு நெஞ்சில் போன்ற படங்களை முடித்தார்.[6] கதைக்களத்தை மாற்றி படத்தின் பணிகளானது 2006 இல் மீண்டும் தொடங்கப்பட்டு, இறுதியில் நிறைவடைந்தது.[7]

வெளியீடு

[தொகு]

படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் ராஜ் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டன.[8]

விமர்சன வரவேற்பு

[தொகு]

படம் குறித்து "காலாவதியானது" என்று இந்து எழுதியது.[9] "காட்சிகள் முரண்பாடாக உள்ளன, மேலும் சீரான தன்மையும் மென்மையான ஓட்டமும் படத்தில் இல்லை. இது முடிவில் மட்டுமே உள்ளது " என்று சினிஃபுண்டாஸ் எழுதியது.

இசை

[தொகு]

படத்தில் இடம் பெற்ற பாடல்களை பிறைசூடன், நா. முத்துக்குமார் , கபிலன் ஆகியோர் எழுத, பாடல்களுக்கு தேவா இசையமைத்தார்.[10]

எண். பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள்
1 "ஏய் முகுந்தா" கார்த்திக், பாப் ஷாலினி நா. முத்துக்குமார்
2 "இஞ்சி முரப்பா" திப்பு, அனுராதா ஸ்ரீராம்
3 "மதிப்புக்குரிய" மாணிக்க விநாயகம், ஜெயலட்சுமி பிறைசூடன்
4 "மாமா மாமா" திப்பு, அனுராதா ஸ்ரீராம் நா. முத்துக்குமார்
5 "பாண்டிச்சேரி" சங்கர் மகாதேவன், அனுராதா ஸ்ரீராம் கபிலன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-01. பார்க்கப்பட்ட நாள் 2021-02-01.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-04-19. பார்க்கப்பட்ட நாள் 2021-02-01.
  3. http://www.behindwoods.com/News/26-5-05/keeri.htm
  4. http://www.behindwoods.com/News/15-3-05/arjun_manikanda.htm
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-05-11. பார்க்கப்பட்ட நாள் 2021-02-01.
  6. http://www.behindwoods.com/tamil-movie-news/may-06-02/11-05-06-nenjil-jil-jil.html
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-05-11. பார்க்கப்பட்ட நாள் 2021-02-01.
  8. "Manikanda on Friday 14,10:30 PM on Raj TV November". Burrp TV Guide. 14 November 2014. Archived from the original on 11 March 2016. பார்க்கப்பட்ட நாள் 10 August 2015.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-05-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-01.
  10. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000696

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிகண்டா&oldid=3709971" இலிருந்து மீள்விக்கப்பட்டது