உள்ளடக்கத்துக்குச் செல்

மங்களூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 12°52′N 74°52′E / 12.87°N 74.87°E / 12.87; 74.87
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்களூர் சந்திப்பு


Mangaluru Junction
இந்திய இரயில்வே station
மங்களூர் சந்திப்பு (2014-ல்)
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்குத்லா சந்திப்பு
அமைவிடம்தர்பார் மலை, பதில், மங்களூர், 575007, கருநாடகம்
இந்தியா
ஆள்கூறுகள்12°52′N 74°52′E / 12.87°N 74.87°E / 12.87; 74.87
ஏற்றம்24 m (79 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்இந்திய இரயில்வே
தடங்கள்Shoranur–மங்களூர் பிரிவு

மங்களூர் சந்திப்பு-மகங்களூர் மத்தி

மங்களூர் –அசன்–மைசூர் வழித்தடம்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்7
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைAt Grade
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுMAJN [1]
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) பாலக்காடு
வரலாறு
மின்சாரமயம்Yes
சேவைகள்
முந்தைய நிலையம் இந்திய இரயில்வே அடுத்த நிலையம்
தொக்கூர்
towards ?
Southern Railway zone நேத்ராவதி
towards ?
பதில்
towards ?
மங்களூர் மத்தி
towards ?
அமைவிடம்
Mangalore Junction is located in கருநாடகம்
Mangalore Junction
Mangalore Junction
கருநாடகம் இல் அமைவிடம்


மங்களூர் சந்திப்பு தொடருந்து நிலையம் (முன்னர் கங்கநாடி தொடருந்து நிலையம்) (நிலையக் குறியீடு: MAJN) என்பது தெற்கு இரயில்வே மண்டலத்தின் பாலக்காடு இரயில்வே பிரிவில் உள்ள ஒரு என். எசு. ஜி.-3 வகை இந்திய இரயில்வே தொடருந்து நிலையமாகும்.[2][3] இது கொங்கண், மேற்குத் தொடர்ச்சி மலை (மங்களூர் ஹாசன் மைசூர் பாதை), மலபார் இரயில்வே ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கியமான தொடருந்து நிலையமாகும். தர்பார் மலை, பாடில் அமைந்துள்ள, இது துறைமுக நகரமான மங்களூருக்கான நுழைவாயிலாகும். இந்த நிலையம் மங்களூர் மத்தியத் தொடருந்து நிலையத்தைத் தெற்கில் கேரளா, வடக்கில் மகாராட்டிரா/கோவா, மங்களூர் துறைமுகம், கிழக்கில் பெங்களூரு-சென்னை ஆகியவற்றுடன் இணைக்கும் ஒரு சந்திப்பாகும். வடக்கு, தெற்கே செல்லும் அனைத்துத் தொடருந்துகளும் இந்த நிலையத்தின் வழியாக மங்களூரைத் தொடுவதால், இப்பகுதியில் மிகவும் பரபரப்பான தொடருந்து சந்திப்பு இதுவாகும்.

நகரத் தொடருந்து நிலையம் மங்களூர் தொடருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டபோது இது கங்கநாடி தொடருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் பெயர்க் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக இரண்டுமே முறையே மங்களூர் சந்திப்பு, மங்களூர் மத்தியத் தொடருந்து நிலையம் என்று மறுபெயரிடப்பட்டன.

கொங்கன் இரயில்வே மண்டலத்திற்குப் பிறகு தெற்கு இரயில்வே மண்டலத்தில் உள்ள முதல் நிலையம் இதுவாகும். இது வடக்கே முந்தைய நிலையமான தோக்கூரில் முடிவடைகிறது. நிலையத்தை ஒட்டியுள்ள இரயில்வேக்குச் சொந்தமான 60 ஏக்கர் நிலப்பரப்பில் மங்களூர் சந்திப்பை உலகத் தரம் வாய்ந்த நிலையமாக மேம்படுத்த இரயில்வே விரும்புகிறது.[4]

சேவை

[தொகு]

மும்பை, கொச்சி, புது தில்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இந்தத் தொடருந்து நிலையம் தினசரி சேவையினைக் கொண்டுள்ளது.

திருவனந்தபுரம் ராஜதானி விரைவுவண்டி, புது தில்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் தொடருந்து நிலையத்துடன் மங்கள லட்சத்தீவு விரைவுவண்டி, கேரள சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி போன்ற பிற தொடருந்துகளுடன் சேவையினை இணைக்கிறது.

திருநெல்வேலி-காந்திதம் ஹம்சாபர் விரைவுவண்டி, மருசாகர் விரைவுவண்டி, கொச்சுவேளி-ஸ்ரீ கங்காநகர் சந்திப்பு விரைவுவண்டி ஆகிய தொடருந்துகள், ஜபல்பூர்-கோயம்புத்தூர் அதிவிரைவு வண்டி, கொச்சுவேளி லோகமான்ய திலக் முனையத்தின் கரீப் ராத் விரைவுவண்டி, நேத்ராவதி விரைவுவண்டி, மும்பை அதிவிரைவு வண்டி, நேத்ராவதி விரைவுவண்டி, மங்களூரு மும்பை சி. எஸ். எம். டி. எஸ். அதிவிரைவு வண்டி பிற முக்கிய தொடருந்துகளாகும்.

இடம்

[தொகு]

அருகிலுள்ள முக்கிய போக்குவரத்து மையங்கள்

  • அருகிலுள்ள வானூர்தி நிலையம்: மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் (11 கி. மீ.)
  • அருகிலுள்ள துறைமுகம்: புதிய மங்களூர் துறைமுகம் (14 கி. மீ.)
  • அருகிலுள்ள பேருந்து நிலையங்கள் ஹம்பன்கட்டா (6 கி. மீ) மற்றும் லால்பாக், மங்களூர் (8 கி. மீ.)
  • அருகிலுள்ள பேருந்து நிறுத்தம்: நாகுரி (200 மீ) பாதில் (500 மீ) பஜல் குறுக்குச்சாலை (100 மீ)
  • மங்களூர் மத்தியத் தொடருந்து நிலையத்திலிருந்து 6 கி. மீ. தொலைவில் உள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/coaching/pdf/Station_code.pdf [bare URL PDF]
  2. "Station Code Index" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 2023–2024. p. 7. Archived from the original (PDF) on 16 February 2024. Retrieved 25 March 2024.
  3. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 2. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 23 March 2024.
  4. "Mangalore Junction to be a world class station". தி இந்து. 17 September 2014. http://www.thehindu.com/news/cities/Mangalore/mangalore-junction-to-be-world-class-station/article6418746.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]