உள்ளடக்கத்துக்குச் செல்

போத்தீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போத்தீஸ்
நிறுவுகை1923[1]
நிறுவனர்(கள்)கே.வி.போத்தி மூப்பனார்
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
தொழில்துறைபட்டுப்புடவைகள்
சேவைகள்பட்டுப்புடவைகள், ஆயத்த ஆடைகள், துணி வகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள், வாழ்க்கை நளின பொருட்கள்
உரிமையாளர்கள்கே.வி.பி.சடையான்டி மூப்பனார்
பிரிவுகள்தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, நாகர்கோவில், பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், திருவில்லிபுத்தூர், சேலம்
இணையத்தளம்www.pothys.com

போத்தீஸ் என்பது தென்னிந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களில் அமைந்துள்ள சங்கிலித் தொடர் துணிக்கடை ஆகும். துணிகள் மட்டுமல்லாது வீட்டு உபயோக பொருட்கள், பலசரக்கு பொருட்கள், காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும். முதலில் அவர்கள் பட்டுப் புடவைகளை பிரத்தியேகமாக விற்றனர், ஆனால் இன்று துணிகள் மட்டுமன்றி அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் விற்கப்படுகின்றன.

போத்தீஸ் நிறுவனத்தின் கிளைகள் தனது சேவையை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, நாகர்கோவில், பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், திருவில்லிபுத்தூர், சேலம்ஆகிய முக்கிய நகரங்களில் அமைத்துள்ளது. அதுமட்டும் அல்லாது பிற மாநிலங்களான கேரள மாநிலம் திருவனந்தபுரம், எர்ணாகுளம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

போத்தீஸ் நிறுவனம் 1923 ல் கே.வி. போத்தி மூப்பனார் என்பவரால் நிறுவப்பட்டது [2] [3] [4] [1] [5]ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த கே.வி.போத்தி மூப்பனார் நெசவாளர் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

1977 ஆம் ஆண்டில், அவரது மகன் கே.வி.பி.சடையாண்டி மூப்பனார் சில்லறை வணிகத்தை செய்து தனக்கென வாடிக்கையாளர்களை உருவாக்கி பல்வேறு கிளைகளை உருவாக்கினார். 1986 இல் திருநெல்வேலியில் இரண்டாவது பெரிய கிளை திறக்கப்பட்டது.

சேவைகள்

[தொகு]

ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி, மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நாகர்கோவில், புதுச்சேரி, பெங்களூரு, திருவனந்தபுரம் , எர்ணாகுளம் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் போத்தீஸ் தனது சில்லறை வியாபார கடைகளைக் கொண்டுள்ளது. கொச்சின் மற்றும் குரோம்பேட்டில் விரைவில் புதிய கடைகள் வர உள்ளன. எல்லாவற்றிலும் மிகப்பெரியது பெங்களூரு ஷோரூம். சென்னையில் மொத்தம் மூன்று கிளைகள் உள்ளன 1) போத்தீஸ் ட்ரடீஸ்ணல் 2) போத்தீஸ் ஹைபர் 3) போத்தீஸ் பொட்டிக் ஆகியனவாகும். தி.நகரில் உள்ள போத்தீஸ் பாரம்பரிய ஆடைகளின் தொகுப்பையும், போத்திஸ் பொட்டிக் நவநாகரீக ஆடைகளையும் கொண்டுள்ளது. போத்திஸ் டிரடீஸ்ணல் கிளையிலிருந்து இருந்து போத்தீஸ் பொட்டிக் கிளைக்கு செல்ல இலவச வாகன வசதிகளை இந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. போத்தீஸின் சூப்பர் மார்க்கெட்டை தொடங்கியதின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான வீட்டு உபயோகப் பொருட்களையும் விற்று தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Silk sarees online".
  2. 1923 Madras Presidency Legislative Council election
  3. "History". பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
  4. "Silk sarees: Wedding silk sarees / Kanchipuram silk sarees / Arani Silks / Online shopping for silk sarees / Silk sarees in Chennai". www.pothys.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
  5. "Tamil Nadu Government Portal". www.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போத்தீஸ்&oldid=3947030" இலிருந்து மீள்விக்கப்பட்டது