பொறிவாயில் ஐந்து அவித்தான்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன நமது அறிவை இயக்கும் பொறிகள். இந்த அறிவுகளை இறைவன் நமக்குள் இயங்க வைத்துவிட்டு, தனக்குள் அவித்து வைத்துக்கொண்டான். அவித்த கரிக்கட்டை போலவும், அவித்த பயறு போலவும் வைத்துக்கொண்டுள்ளான். உலகைப் பார்ப்பது பொய்-ஒழுக்கம். உலகைக் கண்டும் காணாமல் இருப்பது ‘பொய்தீர் ஒழுக்கம்’.
உரையாசிரியர்கள் பார்வை
[தொகு]- மணக்குடவர் – மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வழியாக வரும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் ஐந்தின்கண்ணும் செல்லும் மனநிகழ்ச்சியை அடக்கியவன்
- தாமத்தர் – ஐந்து ஆசைகளையும் அறுத்தவன்
- நச்சர் – ஐம்புலன்களையும் வென்றவன்
- தருமர் – ஐம்பொறிகளையும் அகத்து அடக்கிய இறைவன்.
- பரிமேலழகர் – ஐந்து அவாவினையும் அறுத்தவன்
- புலவர் குழந்தை – ஐம்புலன்களையும் அடக்கியவன்
இறைவனையும், மனிதனையும் வேறுபடுத்திக் காட்டுகிறது, இந்தக் குறள்.