உள்ளடக்கத்துக்குச் செல்

இறைவன் (திருக்குறள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இறைவன், அகப்பார்வை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவள்ளுவர் தம் திருக்குறளில் தாம் கண்ட இறைவனைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஐம்புலனுக்கும் எட்டாமல் பொறிவாயில் ஐந்தும் அவித்து ஆளும் இறைவனை முதல் பத்துப் பாடல்களில் குறிப்பிடுகிறார். நம் கண்ணுக்குத் தெரிந்து நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இயங்கி உதவும் மழையை அடுத்த பத்துப் பாடல்களில் தெய்வமாகத் திறந்து வைக்கிறார். நம் கண் முன்னே நம்மோடு வாழ்ந்து நாம் வாழ வழிகாட்டும் நீத்தாரை மனித உருவில் வாழும் தெய்வமாக மூன்றாவது பத்துப் பாடல்களில் காட்டுகிறார். தனி மனிதன் நெறியில் நில்லாமல் சமுதாயம் இயங்கும் ஆறாகிய அறநெறியை நான்காவது தெய்வமாக நான்காவது பத்துப் பாடல்களில் வலியுறுத்துகிறார்.

கண் முன்னே நம்மை ஆளும் அரசாகிய 'இறை' போன்று, நம் புலன்களுக்குத் தெரியாமல் நம்மையும், நாம் அல்லாத அனைத்தையும் ஆள்வது 'இறை'.

'இறைவன், வள்ளுவர் பார்வை'
இறைவன், அகப்பார்வை | ஆதிபகவன் | வாலறிவன் | மலர்மிசை ஏகினான் | வேண்டுதல் வேண்டாமை இலான் | பொறிவாயில் ஐந்து அவித்தான் | தனக்கு உவமை இல்லாதான் | அறவாழி அந்தணன் | எண்குணத்தான் | இறை வணக்கம் | நீத்தார் | தெய்வம் | ஊழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறைவன்_(திருக்குறள்)&oldid=4132324" இலிருந்து மீள்விக்கப்பட்டது