பொன்னி அரிசி
பொன்னி அரிசி (Ponni rice) 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வகை அரிசி ஆகும். இஃது அதிகமாக இந்தியாவில் தமிழ்நாட்டுப் பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது. இது டைய்சங் 65 மற்றும் மயாங் எபோஸ் 6080/2 இன் கலப்பின அரிசி ஆகும். தமிழ் இலக்கியங்களில் காவேரி ஆறு பொன்னி என அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக இவ்வரிசிக்கும் பொன்னி எனப் பெயரிடப்பட்டுள்ளது.[1] காவேரி படுகைகளில், அரியலூர், திருச்சி, மதுரை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி [2] ஆகியப் பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு அரிசியிலும் ஐந்து கிலோ கலோரி அடங்கியுள்ளது. பொன்னி, சோனா மேரா ஆகிய நிறுவனங்கள் இவ்வரிசியைச் சந்தைப்படுத்தும் மிகப்பெரிய நிறுவனங்கள் ஆகும். இந்த அரிசியானது சுத்தமான நீரினை உடைய எந்த வகையான நிலத்திலும் விளையும். இது காவேரி ஆற்றின் நீரில் நன்கு விளையும். சுத்தம் செய்யப்பட்ட அரிசியானது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது எளிதில் செரிக்கக்கூடிய மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chakra (2010-08-19). "பொன்னி அரிசி பெயரைப் பயன்படுத்த மலேசிய நிறுவனத்துக்கு தடை!". https://tamil.oneindia.com. Retrieved 2021-11-08.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ "பொன்னி அரிசி விலை சரிவு". Dinamalar. 2019-02-14. Retrieved 2021-11-08.