பொன்னம்பலம் குமாரசுவாமி
பி. குமாரசுவாமி P. Coomaraswamy | |
---|---|
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் தமிழ் உறுப்பினர் | |
பதவியில் 1892–1898 | |
முன்னையவர் | பொன்னம்பலம் இராமநாதன் |
பின்னவர் | டபிள்யூ. ஜி. ரொக்வூட் |
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் | |
பதவியில் 1873–1879 | |
பதவியில் 1885–1889 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 திசம்பர் 1849 |
இறப்பு | 7 சூன் 1906 கொழும்பு, இலங்கை | (அகவை 56)
முன்னாள் கல்லூரி | மாநிலக் கல்லூரி, சென்னை |
தொழில் | வழக்கறினர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
முதலியார் பொன்னம்பலம் குமாரசுவாமி (Ponnambalam Coomaraswamy, 7 டிசம்பர் 1849 – 7 சூன் 1906)[1] என்பவர் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும் இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]1849 டிசம்பர் 7 இல் பிறந்த இவர்[2][3] யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாயைச் சேர்ந்த கேட் முதலியார் அ. பொன்னம்பலம் என்பவருக்குப் பிறந்தார்.[2] சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோர் இவரது சகோதரர்கள் ஆவர்.[2]
குமாரசுவாமி கொழும்பு றோயல் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[2]
பணி
[தொகு]தனது பட்டப் படிப்பை முடித்துக் கொண்ட குமாரசுவாமி வழக்கறிஞர் தொழிலில் இணைந்து கொண்டார்.[2]
அரசியலில்
[தொகு]கொழும்பு மாநகர சபையில் சனவரி 1873 முதல் அக்டோபர் 1879 வரையும், பின்னர் நவம்பர் 1885 முதல் டிசம்பர் 1889 வரையும் உறுப்பினராகப் பதவியில் இருந்தார்.[4] 1893 இல் இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவையில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக சேர் பொன். இராமநாதனிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.[2][5]
யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் தலைவராக இருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நிறுவுவதற்கு முன்னின்று உழைத்தார்.[2] கொழும்பு கொம்பனித் தெருவில் முருகன் கோவில் ஒன்றையும் நிறுவினார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Martyn, John H. (1923). Notes on Jaffna – Chronological, Historical, Biographical. தெல்லிப்பழை: American Ceylon Mission Press. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1670-7.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 ஆறுமுகம், எஸ். (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 43.
- ↑ Martyn, John H. (1923). Notes on Jaffna – Chronological, Historical, Biographical. தெல்லிப்பழை: American Ceylon Mission Press. pp. 283–284. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1670-7.
- ↑ Hulugalle, H. A. J. (September 1965). Centenary Volume of the Colombo Municipal Council (1865 - 1965). Colombo Municipal Council. p. 55.
- ↑ Gooneratne, Brendon (31 சனவரி 2009). "Sir Ponnambalam Arunachalam: True nationalist and patriot of Ceylon". டெய்லிநியூஸ். http://archives.dailynews.lk/2009/01/31/fea14.asp.