பொட்டாசியம் குளோரைட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் குளொரைட்டு
| |
இனங்காட்டிகள் | |
14314-27-3 13898-47-0 (மூலம்) | |
ChemSpider | 8466227 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | 67063160 |
பப்கெம் | 23669246 |
| |
UNII | 71K32L1LFJ |
பண்புகள் | |
KClO2, ClKO2 | |
வாய்ப்பாட்டு எடை | 106.55 கி/மோல் |
தீங்குகள் | |
GHS pictograms | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் குளோரைட்டு (Potassium chlorite) என்பது KClO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குளோரசு அமிலத்தினுடைய பொட்டாசியம் உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது. வெள்ளை நிறத்தில் தூளாக காணப்படுகிறது. பொட்டாசியம் குளோரைட்டின் நீரற்ற வடிவம் வெப்பம் அல்லது கதிர்வீச்சு (குறிப்பாக காமா கதிர்கள்) முன்னிலையில் எளிதில் சிதைவடைகிறது.[1]
பண்புகள்
[தொகு]பொட்டாசியம் குளோரைட்டு என்பது நிறமற்ற நீருறிஞ்சும் படிகமாகும். காற்றில் கரையும். வெப்பப்படுத்தும்போது இது பொட்டாசியம் குளோரைடு மற்றும் ஆக்சிசனாக சிதைந்து, ஒளியை வெளியிடுகிறது.
- KClO2 -> KCl + O2
பொட்டாசியம் குளோரைட்டு cmcm இடக்குழுவில் நேர்சாய்சதுரப் படிகங்களாக உருவாகிறது. அறை வெப்பநிலையில் சில மணிநேரங்களில் சிதைந்து போகிறது.[1][2] இது ஒரு ஆக்சிசனேற்ற முகவருமாகும்.
தயாரிப்பு
[தொகு]பொட்டாசியம் குளோரைட்டு தயாரிப்பதற்கான சில முறைகள்:
பொட்டாசியம் குளோரேட்டை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி பொட்டாசியம் குளோரைட்டு தயாரிக்கப்படுகிறது.
- 2KClO3 -> 2KClO2 + O2
பொட்டாசியம் ஐதராக்சைடும் குளோரிக்கு அமிலமும் வினை புரிந்தும் பொட்டாசியம் குளோரைட்டு உருவாகும்.
- HClO2 + KOH -> KClO2 + H2O
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Boyd, George E.; Brown, Larry Clyde (1970). "Thermal and radiolytic decomposition of anhydrous crystalline potassium chlorite" (in en). The Journal of Physical Chemistry 74 (8): 1691–1694. doi:10.1021/j100703a006. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3654. https://pubs.acs.org/doi/abs/10.1021/j100703a006.
- ↑ Smolentsev, A. I.; Naumov, D. Yu (2005-02-15). "Two alkali metal chlorites, LiClO2 and KClO2" (in en). Acta Crystallographica Section C: Crystal Structure Communications 61 (2): i17–i19. doi:10.1107/S0108270104032482. பன்னாட்டுத் தர தொடர் எண்:0108-2701. https://scripts.iucr.org/cgi-bin/paper?S0108270104032482.