பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள்
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள் Pirates of the Caribbean: The Curse of the Black Pearl | |
---|---|
இயக்கம் | கோர் வெர்பின்ஸ்கி |
தயாரிப்பு | ஜெர்ரி ப்ரூக்ஹெய்மர் |
மூலக்கதை | கரீபியக் கடற்கொள்ளையர்கள் படைத்தவர் வால்ட் டிஸ்னி |
திரைக்கதை |
|
இசை |
|
நடிப்பு | |
ஒளிப்பதிவு | Dariusz Wolski |
படத்தொகுப்பு |
|
விநியோகம் | பியூனா விஸ்டா பிக்சர்ஸ் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் |
வெளியீடு | சூன் 28, 2003(டிஸ்னிலண்ட் உல்லாச விடுதி) சூலை 9, 2003 (United States) |
ஓட்டம் | 142 நிமிடங்கள்[1] |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $140 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $654.3 மில்லியன்[2] |
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள் (Pirates of the Caribbean: The Curse of the Black Pearl, தமிழில் கரீபியக் கடற்கொள்ளையர்கள் 1 - கறுப்பு முத்தின் சாபம்) என்பது 2003 ஆண்டைய அமெரிக்க கனவுருப்புனைவு திரைப்படமாகும். படத்தை கோர் வெர்பின்ஸ்கி இயக்கியுள்ளார். மற்றும் இந்தப்படமானது பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத் தொடரில் முதல் படமாகும். இப்படமானது வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் மற்றும் ஜெர்ரி ப்ரூக்ஹெய்மரால் தயாரிக்கப்பட்டது. இப்படமானது டிஸ்னி தீம் பார்க்கில், வால்ட் டிஸ்னியின் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் சவாரியின் அடிப்படையில் அமைந்துள்ளது .[3] இந்த கதையானது கொல்லர் வில்டர்னர் (ஆர்லாந்தோ புளூம்) மற்றும் கடற்கொள்ளையன் கேப்டன் ஜாக் ஸ்பேரோ (ஜானி டெப்) ஆகியோர் இணைந்து கடத்தப்பட்ட எலிசபெத் ஸ்வான் (கீரா நைட்லி) இங்கிலாந்து கவர்னர் மகளை பிளாக் பெர்ல் கப்பலின் கேப்டன் ஹெக்டர் பர்போசா (ஜியோஃப்ரே ரஷ்) விடம் இருந்து மீட்பதை அடிப்படையாகக் கொண்டது.
ஜெய் வோல்பெர்ட்டால் 2001 ஆம் ஆண்டு தீம் பார்க் சவாரி அடிப்படையிலான ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டது, மேலும் ஸ்டோர்ட் பீட்டி 2002 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதை மீண்டும் எழுதினார். அந்தக் காலகட்டத்தில், தயாரிப்பாளர் ஜெர்ரி ப்ரூக்ஹெய்மர் இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டினார்; அவர் டெட் எலியட் மற்றும் டெர்ரி ரோஸியோ ஆகியோரையும் இந்தத் திரைக்கதையில் ஈடுபடுத்தி, கதைவடிவில் சிறப்புக்குரிய சாபப் பகுதியைச் சேர்த்தார். 2002 அக்டோபர் முதல் 2003 மார்ச் வரை செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடின்கள் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோடிப்புகளிலும் (செட்), படப்பிடிப்பு நடந்தது. இது எம்.பீ.ஏ.ஏ வின் பிஜி -13 மதிப்பீடுடன் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் பதாகையின் கீழ் வெளியான முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படமானது 2003 சூன் 28 அன்று கலிஃபோர்னியாவின், அனாஹெமில் உள்ள டிஸ்னிலேண்ட் பார்க்கின் திரையுலகில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. படமானது உலகளவில் $ 654 மில்லியனுக்கும் மேல் வசூலித்தது வெற்றியடைந்தது. பலர் இந்த வரிசை படத்தில் சிறந்த துவக்கம் என்று கருதுகின்றனர். ஜானி டெப் முதன்மைப் பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதை வென்றார், மேலும் அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது, முதன்மைப் பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான பிஏஎப்டி (BAFTA) விருது மற்றும் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது - மோசன் பிக்சர்சின் இசை அல்லது நகைச்சுவை விருது ஆகியவற்றைப் பெற்றது. பிளாக் பெர்லின் சாபம் நான்கு ஆஸ்கர் விருதுகளுக்கும் பிஏஎப்டிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தத் தொடரின் அடுத்தடுத்தப் படங்களான டெட் மேன்ஸ் செஸ்ட் மற்றும் அட் வேர்ல்ட்ஸ் எண்ட் ஆகியவை 2006 ஆம் ஆண்டு மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக வெளிவந்தன. அதன்பிறகு ஸ்ட்ராங்கர் டைட்ஸ் மற்றும் டெட் மென் டால் நோல் டேல்ஸ் ஆகிய இரண்டு தொடர் படங்கள் 2011 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pirates of the Caribbean – The Curse of the Black Pearl". British Board of Film Classification. July 10, 2003. Archived from the original on October 18, 2015. பார்க்கப்பட்ட நாள் February 7, 2015.
- ↑ 2.0 2.1 "Pirates of the Caribbean: The Curse of the Black Pearl (2003)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on May 9, 2013. பார்க்கப்பட்ட நாள் May 21, 2007.
- ↑ "Pirates of the Caribbean: The Curse of the Black Pearl (2003)". New York Times இம் மூலத்தில் இருந்து August 24, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110824024810/http://movies.nytimes.com/movie/281052/Pirates-of-the-Caribbean-The-Curse-of-the-Black-Pearl/credits. பார்த்த நாள்: October 15, 2012.