உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நுட்பியல் ஒற்றைப்புள்ளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்கீரன், சில மாற்றங்கள் செய்துள்ளேன். சரி பார்க்கவும்.--செல்வா 03:34, 22 மார்ச் 2008 (UTC)

செல்வா, நீங்கள் time span between changes என்பதையே இடைவெளி மாற்றங்கள் என்று குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். மாற்றங்களின் வேகம் மடக்கை ரீதியில் அதிகரிக்கின்றன என்பதும் சரியாக இருக்கும். மாற்றங்கள் நன்றே. --Natkeeran 03:53, 22 மார்ச் 2008 (UTC)

நற்கீரன், பலரும் "ரீதி" என்று ஒரு சொல் பயன்படுத்துகின்றனர். அதன் பொருள் என்ன? "மடக்கை ரீதி" என்றால் என்ன? "மாற்றங்களின் விரைவை மடக்கை முறையில் கணித்தால் அதிகரிக்கின்றது" என்று கூறலாம். "ரீதி" என்பதை இடத்திற்கு ஏறார்போல "கோணம்", "நோக்கில்", "பார்வையில்" "கணக்கில்", "அடிப்படையில்" என்று கூறுவதால் பொருள் தெளிவாக விளங்கும் என்று நினைக்கிறேன். --செல்வா 04:22, 22 மார்ச் 2008 (UTC)

மேலும், "தற்போதைக்கு நுட்பியல் ஒற்றைப்புள்ளி பல நுட்பியலாளர்களும் அறிவியலாளர்களும் முன்வைக்கும் ஒரு கருதுகோளே (hypothesis)." என்ற வசனத்தை நீக்கியுள்ளீர்கள். இது ஒரு scientific theory ஆக கருத முடியாது, ஒரு வித speculation தான். இந்த வாசகம் முக்கியம் இல்லையா?--Natkeeran 03:56, 22 மார்ச் 2008 (UTC)

நான் தவறுதலாக நீக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். மன்னிக்கவும். மீண்டும் சேர்த்துவிடுங்கள் (போதிய நேரமில்லாமல் செய்த மாற்றம்).--செல்வா 04:22, 22 மார்ச் 2008 (UTC)

Start a discussion about நுட்பியல் ஒற்றைப்புள்ளி

Start a discussion