உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:திருக்குறள் சுகாத்தியர் உரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்குறள் சுகாத்தியர் உரை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


குறிப்பு

[தொகு]

இப்பக்கத்தில் இவரைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒரு கீற்று: //திருக்குறளின் மூல பாடத்தைப் பதித்து, அதற்கு உரை எழுதிய சுகாத்தியர் என்னென்ன மாற்றங்களைப் புகுத்தினார் என்பதை முனைவர் கு. மோகனராசு விரிவாக விளக்கியுள்ளார். அவரது ஆய்வு முடிவுகள் கீழே தொகுத்துத் தரப்படுகின்றன.// என்பதாக உள்ளது. தமிழ் அறிஞர்களால் கூறிய உரைகளை, இங்கு தொகுக்கலாமா? திருக்குறளின் மாண்பை குறைப்பதான சுகாத்தியர் உரை குறித்த, பிறரின் கருத்துரைகளை எப்படி தொகுப்பது?--≈ உழவன் ( கூறுக ) 06:48, 7 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

  • தகவலுழவன், நீங்கள் கேட்ட கேள்வி எனக்குச் சரியாகப் புரியவில்லை. விக்கியில் வந்த செய்தியை ஒருவர் எடுத்து எழுதியுள்ளார். விக்கியிலிருந்து செய்தி பெறப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். அதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. விக்கியில் நான் தொகுத்த கட்டுரை திருக்குறள் பற்றியது. திருக்குறளுக்கு எழுதப்பட்ட பல உரைகளைக் குறிப்பிட்டேன். அந்த உரைகளுள் ஒன்று சுகாத்தியரால் எழுதப்பட்டது. அது பற்றிய விவரங்களை மோகனராசு தொகுத்துள்ளதால், மோகனராசின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் வழங்கிய செய்திகளை விக்கியிலும் பதிவுசெய்தேன். விக்கி ஒரு கலைக்களஞ்சியம் ஆதலால், நாம் வழங்கும் செய்திகளுக்கு ஆதாரம் காட்டுவது பொருத்தமே. எனவே, தங்கள் ஐயப்பாடு எனக்குச் சரியாக விளங்கவில்லை. விளக்கம் தந்தால் நானும் விளக்கம் தருகிறேன். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 12:55, 7 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]