வாருங்கள் George46, உங்களை வரவேற்கிறோம்!விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
வருக! நல்வரவு! --செல்வா 03:28, 31 மார்ச் 2010 (UTC)
அண்மையில் சில நாட்களாக முதற்பக்கத்தில் கிறித்தவம் வலைவாசல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கவனித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இம்மாத கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு கிறித்தவம் தொடர்பான தலைப்புகளை மேம்படுத்த வேண்டுகிறேன். பரிசு வெல்வதற்காக இல்லை என்றாலும் இதன் மூலம் கிறித்த வலைவாசலுக்கான நல்ல உள்ளடக்கத்தை வளர்த்தெடுக்கலாம் என்று கருதுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 19:17, 2 செப்டம்பர் 2013 (UTC)
சரி, இரவி, நல்ல கருத்து. இயன்ற அளவு பங்களிக்க முயல்கிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 04:11, 3 செப்டம்பர் 2013 (UTC)
கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி என்ற கட்டுரையை பார்க்கவும், நிறைய லத்தீன், இத்தாலிய, கிரேக்க , துருக்கிய சொற்கள் அதில் உள்ளன. பெயர்களுக்கு பக்கத்தில் அதன் ஆங்கில பெயரை எழுதியுள்ளேன். அவற்றை சரிபார்க்கமுடியுமா?--குறும்பன் (பேச்சு) 00:23, 24 செப்டம்பர் 2013 (UTC)
விரைவில் சரிபார்க்கிறேன். நல்லதொரு கட்டுரை இடுகை செய்ததற்குப் பாராட்டுகள்!--பவுல்-Paul (பேச்சு) 01:45, 24 செப்டம்பர் 2013 (UTC)
ஜெயரத்தின மாதரசன், Pope Adrian/Hadrian இரண்டுமே வழக்கத்தில் உள்ளன. ஹேட்ரியன் என்பது இலத்தீன் மற்றும் ஆங்கிலத்தோடு அதிகமாகப் பொருந்திப் போகிறது. எனவே, தமிழிலும் "ஹேட்ரியன்" என்பதைக் கட்டுரைத் தலைப்பாக வைத்துக்கொண்டு, "ஏட்ரியன்" என்பதை மாற்றுவழியாகக் கொடுக்கலாம் என்பது எனது கருத்து.--பவுல்-Paul (பேச்சு) 18:52, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ--01:50, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
திரு. பவுல், நிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு மிக்க நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வாக்களிக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன்\உரையாடுக03:50, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஆன்டன், மரியாவின் கணவரான புனித யோசேப்பை கத்தோலிக்க திருச்சபை "புனிதர்", "குலமுதல்வர்", "இறைவாக்கினர்" என்று பல சிறப்புப் பெயர்களால் அழைக்கிறது. எனவே, கத்தோலிக்க புனிதர் வரிசையில் அவரை "குலமுதல்வர்" என்ற பகுதியில் சேர்ப்பதில் யாதொரு சிக்கலும் இல்லை. (காண்க: திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் புனித யோசேப்பை திருச்சபையின் பாதுகாவலராக அறிவித்தல்.
பழைய ஏற்பாட்டு குலமுதல்வர்களாக ஆபிரகாம், ஈசாக்கு, யோசேப்பு (இசுரயேல்) என்போர் குறுகிய பொருளில் புரிந்துகொள்ளப்படுகிறார்கள். விரிந்த பொருளில் அப்படியில் மிக நீண்டதே (ஆதாமில் தொடங்கி...) (காண்க: ஆங்கில விக்கி)
Patriarch என்னும் சொல்லின் தமிழாக்கமாக "குலமுதல்வர்" என்னும் சொல்லே வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. "பெருந்தந்தை" என்பது அரிதே. கத்தோலிக்க திருச்சபையிலும் மரபுவழி திருச்சபைகளிலும் சில ஆயர்கள் (பேராயர்கள், கர்தினால்மார்) Patriarch என அழைக்கப்படுகின்றனர். அதன் தமிழாக்கமாக மறைமுதுவர் என்னும் சொல் பயன்படுகிறது (காண்க: திருச்சபைச் சட்டம்). அதுவே "மறைமுதல்வர்" எனவும் வருவதுண்டு.
நட்கீரன், உங்கள் வேண்டுகோளை ஏற்க இயலாமைக்கு வருந்துகிறேன். வரும் சில வாரங்களில் என் தமிழ் விக்கிப் பங்களிப்பு பணிப்பளு காரணமாக சற்று குறைவாகவே இருக்கும்.--பவுல்-Paul (பேச்சு) 03:40, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஐயா, வணக்கம்!
பகுப்பு:காணொளி கோப்பு உள்ள கட்டுரைகள் எனும் பகுப்பினை அண்மையில் துவக்கியுள்ளேன். காணொளி கோப்பு என்பது சரியா? அல்லது காணொளிக் கோப்பு என்பது சரியா? தெளிவுபடுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:12, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
செல்வசிவகுருநாதன், ககரம் மிகும் என்றே கருதுகிறேன். ஒளிக் கற்றை, ஒளிக்கதிர், ஒளிப் பிழம்பு என்னும் எடுத்துக்காட்டுகளைக் கருதுக. "ஒளி கோப்பு" என்றால் "ஒளிகின்ற/ஒளிந்த/ஒளியும் கோப்பு" என்று பொருளாகிவிடும்!--பவுல்-Paul (பேச்சு) 03:27, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தகவலுழவன், வேதநாயகம் பிள்ளையின் நூல்கள் தற்பொழுது என் கைவசம் இல்லை. வாய்ப்புக் கிடைக்கும்போது, அந்நூல்களின் தலைப்புகள், பதிப்பு விவரங்கள் குறிப்பாக, பதிப்பிட்ட ஆண்டு, பக்கங்கள் போன்றவற்றைத் தொகுத்து அளித்தால் நன்றாக இருக்கும்.--பவுல்-Paul (பேச்சு) 03:49, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி, நட்கீரன். உண்மையிலேயே அரிய தகவல்களைக் கொண்ட ஆவணங்கள் தரங்கம்பாடி மறைத்தள ஏடுகளில் உள்ளன. ஆய்வாளர்களுக்கு மிகப் பயன் நல்கும் உசாத்துணையும் மூலமும் கிடைப்பது சிறப்பு.--பவுல்-Paul (பேச்சு) 04:32, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
வணக்கம், பவுல். செயல்பாட்டில் இல்லாத நிருவாகிகளைப் பொறுப்பில் இருந்து விலக்குவது குறித்து இது வரை கொள்கை ஏதும் இல்லை. முன்பு முனைப்பாக இல்லாத ஓரிரு நிருவாகிகள் தாங்கள் மீண்டும் பங்களிக்க வரப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியதை அடுத்து அவர்கள் ஒப்புதலுடன் நிருவாக அணுக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தேனி சுப்பிரமணி நவம்பர் 2014 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கவில்லை. ஆனால், தொடர்ந்தும் விக்கிப்பீடியா தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். சர்ச்சைக்குரிய கட்டுரை இடம்பெற்ற அவரது இதழ் தொடர் தற்போது நூல் வடிவம் பெறுவதாகவும் தெரிகிறது. நன்றி.--இரவி (பேச்சு) 06:19, 4 மார்ச் 2014 (UTC)
பவுல், "Cathedral" என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் என்ன? விக்சனரியில் "பேராலயம்" என்று தரப்பட்டுள்ளது. நானும் சில கட்டுரைகளில் "பேராலயம்" என்றே பயன்படுத்தினேன். ஆனால் இப்போது "Basilica" என்பதற்கான சொல்லாகப் "பேராலயம்" என்று விக்கியில் பல கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டேன். இது பற்றி உங்கள் கருத்து என்ன? ---மயூரநாதன் (பேச்சு) 17:25, 11 மார்ச் 2014 (UTC)
மயூரநாதன், Cathedral, Basilica என்னும் இரு சொற்களுக்கும் “பெருங்கோவில்” என்பது பொருந்தும். நான் வழக்கமாக “ஆலயம்” என்னும் சொல்லுக்குப் பதிலாக நல்ல தமிழ்ச் சொல்லாகிய கோவில் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறேன். பெரும்பான்மையான கிறித்தவ மக்களும் “கோவில்” (அல்லது கோயில்) என்றே கூறுவர். Basilica என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கோவிலுக்குத் திருத்தந்தை வழங்குகின்ற சிறப்புத் தகுதியைக் காட்டும் பெயர் ஆகும். வழக்கமாக Basilica இருவகைகளைச் சாரும்: major and minor. இவற்றுள் major basilica-க்கள் எல்லாம் உரோமை நகரில் உள்ளன. வேறு அனைத்து basilica-க்களும் minor ஆகும். வழக்கமாக minor என்பதை அழுத்திச் சொல்வதில்லை. Cathedral என்பது ஒரு மறைமாவட்டத்தின் தலைவராக இருக்கின்ற ஆயரின் இருக்கை/பீடம்/ஆதீனம் (இலத்தீன்: cathedra; ஆங்கிலம்: chair) இருக்கின்ற, மறைமாவட்டத்தின் தலைமைக் கோவில் ஆகும்.
எனவே basilica என்பதைத் தமிழில் “பெருங்கோவில்” எனப் பெயர்ப்பது பொருந்தும். cathedral என்பதை ”(மறைமாவட்டத்) தலைமைக் கோவில்” என்பது சரியாக இருக்கும். --பவுல்-Paul (பேச்சு) 19:48, 11 மார்ச் 2014 (UTC)
பவுல், உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி. நான் எழுதிய கட்டுரைகளில் உரிய மாற்றங்களைச் செய்துவிடுகிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 14:07, 12 மார்ச் 2014 (UTC)
வணக்கம், பவுல். நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் எசுப்பானிய மாதங்கள் கட்டுரையை விரிவாக்கி உதவ முடியுமா? இது உங்கள் ஆர்வம் / அறிவுப் புலத்துக்குள் வரும் என்ற அடிப்படையில் இவ்வேண்டுகோளை வைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:38, 21 மே 2014 (UTC)[பதிலளி]
கிறித்தவம் கட்டுரையை சீரமைத்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி ! இந்த முதன்மைக் கட்டுரையை 1,00,000 பைட்டுகளுக்கு மேலாகக் கொண்டு செல்ல ஆசை. அதற்கு உங்கள் தொடர்ந்த ஆதரவை நல்க வேண்டுகின்றேன். மீண்டும் மிக முனைப்பாக பங்களிக்கத் துவங்கியிருப்பதைக் காண மகிழ்ச்சி !! --மணியன் (பேச்சு) 04:46, 9 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
மணியன், கிறித்தவம் கட்டுரையில் இறையியல் சார்ந்த பல கலைச்சொற்கள் உளவாதலால் ஓரளவு தரப்படுத்தும் பணியும் நிகழவேண்டும் என்று கருதுகிறேன். முதலில் கிறித்தவத்தின் பிரிவுகள் பற்றிப் பேசலாம். கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம், சீர்திருத்தத் திருச்சபை ஆகிய பதிவுகள் த.வி.யில் இடுகை செய்யப்பட்டுள்ளன. கிழக்கத்திய கிறித்தவம் (Eastern Christianity) என்ற பதிவும் உள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் Eastern, Oriental என்று இரு அடைமொழிகள் உள்ளன. இவற்றுள் முந்தியதை “கிழக்கு” என்றும் பிந்தியதை “கிழக்கத்திய” என்றும் கூறலாம். எனவே, Eastern Orthodox Church கிழக்கு மரபுவழி திருச்சபை எனவும், Oriental Orthodox Church கிழக்கத்திய மரபுவழி திருச்சபை எனவும் வரலாம். பல இடங்களில் நானே “கீழை” என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளேன். அதைத் தவிர்ப்பது நல்லது என்றும் இப்போது உணர்கிறேன்.
மேற்கூறியதைத் தொடர்ந்து, கிறித்தவம் கட்டுரையில் கிறித்தவத்தின் பிரிவுகளை சரியாகக் குறிப்பது முதல் படி என நினைக்கிறேன். அப்பிரிவுகளைக் காட்டுகின்ற படிமம் த.வி. ஒன்றும் ஆ.வி.யில் சற்றே வேறுபட்டும் இருப்பதைப் பார்க்கலாம். ஆங்கில விக்கியில் உள்ள படிமம் அதிகப் பொருத்தமாகவும் விளக்கமுடையதாகவும் உள்ளது. எனவே அதைத் தமிழாக்கினால் நல்லது. முதல் படிமத்தில் தமிழ் இடுகை செய்தது சோடாபாட்டிலா மாதரசன் ஜெயரத்தினாவா என்று தெரியவில்லை. ஆங்கில விக்கி படிமத்தையொட்டி கீழ்வரும் வகையில் தமிழில் இடலாம்:
மிக்க நன்றி பவுல் ! உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன். இறையியல் கலைச்சொற்கள் குறித்து அறியாதபோதும் உங்களைப் போன்றவர்களின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையாலேயே இப்பணியை எடுத்துள்ளேன் ! ஆங்கிலக் கட்டுரையின் உள்ளடக்கத்தை ஒட்டி மொழிமாற்றப்படுவதால் ஏதேனும் தவறான புரிதல்களையும் களைய வேண்டுகின்றேன்.
கனக்சு, படிமங்களில் தமிழாக்கத்திற்கு உதவ ஓர் விக்கிப்பீடியா வெளிப் பக்கம் இருந்ததே, அதன் இணைப்புக் கிடைக்கவில்லை. அங்கும் இந்தக் கோரிக்கையை இடலாம்.
வணக்கம் George46!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
தமிழ் விவிலியத்தின் இணையப்பதிப்புகளில் உள்ள எழுத்துப் பிழைகளைக் கூட்டு முயற்சியாகக் களைய ஒரு திட்டம் தொடங்கியிருக்கின்றேன். நீங்கள் விக்கி மூலத்தில் பதிவேற்றிய விவிலியத்தின் மூலத்தை என்னோடு பகிர்ந்து கொள்ள இயலுமா? (விக்கி மூலத்திலிருந்து API கொண்டு எடுப்பது சிறமமாக உள்ளது)
அதோடு விவிலியத்தில் உள்ள சில சிக்கல்கள் கலையப்பட்டு புதியப்பதிப்பாக விவிலியம் வெளியிடப்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டேன், இது குறித்து ஏதேனும் உங்களுக்கு தெரியுமா? அப்பதிப்பை எங்கே பெறுவது?
[பி.கு சிக்கல்கள் என நான் குறிப்பது, அச்சுப்பிழைகளே அன்றி, இறையியல்/மொழிபெயர்ப்பு சிக்கல்கள் அல்ல]
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு தவறான பொருள் தருவது போல் உள்ளது. குழந்தைத் தொழிலாளரை எதிர்ப்பதில்லை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம். எனவே, "குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள்" என்று கட்டுரைத் தலைப்பை மாற்றியமைக்கலாம். நன்றி.பவுல்-Paul (பேச்சு)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.