உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தமிழர் நெசவுக்கலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழர் நெசவுக்கலை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

குறிப்புகள்

[தொகு]

http://munaskhan.spaces.live.com/blog/cns!EE547136DF10B8CB!895.entry

இணைப்பு வார்ப்புரு ஏன் இடப்பட்டது என்று தெரியவில்லை

[தொகு]

தமிழர் நெசவுக்கலை என்பது பெரும் தலைப்பு. இதைத் பொதுக் கட்டுரையுடன் இணைப்பது பொருந்தாது. --Natkeeran (பேச்சு) 16:36, 26 மே 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் Natkeeran, இக்கட்டுரை சிறிய அளவில் இருப்பதினால், பொதுக் கட்டுரையுடன் இணைக்க பரிந்துரை செய்தேன், நீங்கள் இக்கட்டுரையை போதிய ஆதாரங்களுடன் விரிவுபடுத்தும் பட்சத்தில், இதனுடைய சிறு குறிப்பை பொது கட்டுரையில் சேர்க்கலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:42, 27 மே 2012 (UTC)[பதிலளி]
இணைப்பு வேண்டுகோள் பொதுவாகா ஒரே தலைப்புக் கொண்ட இரண்டு கட்டுரைகளுக்கே இடப்படும். குறுங்கட்டுரைகளின் நோக்கம் அவை விரித்து எழுதப்படலாம் என்பதுவே. தமிழர் மூங்கில்வேலை என்ற கட்டுரையைப் பார்க்கவும். குறுங்கட்டுரையாக இருந்து மிகவும் விரிவாக்கப்பட்டுள்ளது. சிலம்பமும் அப்படித்தான். இவ்வாறான எடுத்துக்காட்டுக்கள் பல. எனவே இணைப்பு வார்ப்புருவை சரியாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:56, 27 மே 2012 (UTC)[பதிலளி]
நான் அறிந்தவரை, ஒரே கருத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள் ஒன்றோடோன்று தொடர்புடையதாகக் கருதப்பட்டால், அங்கு இணைப்பு வேண்டுகோள் இடலாம். குறுங்கட்டுரையாக இருந்தால் விரித்து எழுதலாம் என்பது சரியே, ஆயினும் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இக்கட்டுரையை போதிய ஆதாரங்களுடன் விரிவுபடுத்தும் பட்சத்தில், இதனுடைய சிறுகுறிப்பை பொது கட்டுரையில் சேர்க்கலாமென்பதில் எந்தவொரு மாற்றமும் இல்லை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:07, 27 மே 2012 (UTC)[பதிலளி]
இது முறையன்று. இவை ஒரே கருத்தன்று. தமிழர் நெசவுக்கலை என்பது தனிக்கட்டுரையாக விரித்து எழுதப்பட்டத்தக்க ஒரு கட்டுரை. நெசவுக்கலை அல்லது நெசவுத் தொழில்நுட்பம் என்பது ஒரு பொதுக் கட்டுரை. இது வெவ்வேறு பட்டியல்களிலும் பகுப்புகளிலும் இடம்பெறும். போதிய ஆதாரங்களுடன் இல்லாத கட்டுரைகளை இணைக்க வேண்டும் என்று எல்லா இடங்களிலும் குறிக்க முடியாது. மேலும் படங்களும் வெளி இணைப்புகளும் கூட ஒரு வகையில் ஆதாரங்களே. --Natkeeran (பேச்சு) 14:32, 27 மே 2012 (UTC)[பதிலளி]
// இது முறையன்று. // நீங்கள் குறிப்பிடுவது எதனை ? நெசவுத் தொழில்நுட்பம் கட்டுரையை ஒரு முறை படிக்கவும், அக்கட்டுரையில், இது ஒரு பழந்தமிழர் தொழில்நுட்பம் ஆகும். பண்டைய காலந்தொட்டே தமிழர்களின் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. போன்ற வரிகள் இரு கட்டுரைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. அங்குள்ள படங்கள் இரு கட்டுரைகளுக்குமே பொருந்தும். தற்போது கட்டுரை விரிவு பெற்றதினால், இணைக்கும் வார்ப்புரு நீக்கப்பட்டது நன்றே. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:53, 28 மே 2012 (UTC)[பதிலளி]


இக் கட்டுரையை விரிவுபடுத்திய பார்வதிஸ்ரீ அவர்களுக்கு நன்றிகள். இதன் தொடக்க நிலையிலும் இது போன்ற கட்டுரைகளுக்கு இணைப்பு வார்ப்புரு பொருந்தாது. எ.கா விலங்குகள் பற்றி பல குறுங்க கட்டுரைகள் தொடங்கலாம். அவை வேண்டாம், விலங்கு என்ற கட்டுரையில் இணைத்து விடுங்கள் என்று வார்ப்புரு போடுவது தவறு. குறிப்பாக பொதுத் தகவல் கட்டுரைகளுக்கு. --Natkeeran (பேச்சு) 18:08, 27 மே 2012 (UTC)[பதிலளி]
//விலங்கு என்ற கட்டுரையில் இணைத்து விடுங்கள் என்று வார்ப்புரு போடுவது தவறு // இதில் தவறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை, இக்கட்டுரையை விரிவுபடுத்த முடியாவிட்டால், இணைத்து விடுங்கள் என்ற கருத்தையே வலியுறுத்துகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:53, 28 மே 2012 (UTC)[பதிலளி]
தினேசு, ஒரு வார்ப்புருவைப் போட்டு கட்டுரையை அருமையாக வளர்க்கத் தூண்டியதற்கு நன்றி :) மிகச் சிறப்பாக கட்டுரையை விரிவாக்கியுள்ள பார்வதிக்கு என் உளமார்ந்த பாராட்டுகள். மற்றபடி, இணைப்பு வார்ப்புருவைப் பயன்படுத்துவது தொடர்பாக நற்கீரன் கருத்துடன் உடன்படுகிறேன். தனிக்கட்டுரையாக இருக்கத் தேவை இல்லாத, வளர்த்து எழுத வாய்ப்பே இல்லாத கட்டுரைகளை மட்டும் பெரிய கட்டுரைகளுடன் இணைக்கக் கோருவது சரியாக இருக்கும்--இரவி (பேச்சு) 18:51, 27 மே 2012 (UTC)[பதிலளி]
இரவி இவ்வார்ப்புரு இட்டதின் நோக்கமே, இக்கட்டுரையைத் தொடங்கியவர் கண்டிப்பாக கட்டுரையை விரிவுபடுத்த முனைவார் என்பதற்காகவே. இணப்பு வார்ப்புரு குறித்து என்னுடைய கருத்துகளை மேலே தெரிவித்துள்ளேன். கட்டுரையை விரைந்து விரிவுபடுத்திய பார்வதிஸ்ரீ அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். இக்கட்டுரைக்கு என்னிடமும் சில ஆதாரங்கள் உள்ளது, விரைந்து அதனையும் சேர்த்துவிடுகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:53, 28 மே 2012 (UTC)[பதிலளி]
விரிவுபடக் கூடிய கட்டுரைகளை நீக்கி பட்டியலாக சேர்ப்பது தமிழ் விக்கிப்பீடியா வளரிச்சிக்குப் பாதகமானது. குறுங்கட்டுரைகள் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. இலகுவாக விரிவுபடுத்தக் கூடியன (புதுக் கட்டுரையைத் தொடங்குவதே பல புதுப் பயனர்களுக்கு சிக்கலானது.). ஆங்கில விக்கியில் இருந்து பயனர்களை ஈர்க்கும். உரையாடல் பக்கத்தில் குறிப்புகளைத் தொகுக்கலாம். கூகிள் தேடலில் மேலும் இலகுவாகக் கிட்டும். பட்டியல்களில், உள் இணைப்புகளாக, பகுப்புகளில் பயன்படுத்தப்படலாம். இணைப்பு வேண்டுகோளை பரந்து செய்ய வேண்டாம் என்று பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன். --Natkeeran (பேச்சு) 17:19, 28 மே 2012 (UTC)[பதிலளி]
தங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இணைப்பு வார்ப்புரு இடுவதை சற்றுத் தள்ளிப் போடுகிறேன். ஆனால், இது விக்கிப்பீடியாவை சீர்படுத்தவே செய்யப்படுகிறது. நீங்கள் கூறியது போல, ஆங்கில விக்கியில் இருந்து பயனர்கள் ஒரு முறை மிக சிறிய அளவில் உள்ள கட்டுரைக்கு வந்தால், அவர்கள் திரும்பவும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வருவார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே. இது முழுக்க முழுக்க என் சொந்த அனுபவம் :-( -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:08, 29 மே 2012 (UTC)[பதிலளி]

இலக்கியத்தில் நெசவுக்கலை பற்றிய குறிப்புகள்

[தொகு]

பின்வருவன வியக்க வைக்கும் தமிழர் அறிவிய நூலில் இருந்து தொகுக்கப்பட்டவை:

பருத்திச் செடி, அதில் நூல் நூற்றல்.

  • பருத்தி வேலிச் சீறூர் மன்னன். (புறம்: 299-1)
  • பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் (புறம்: 324-7)
  • கோடைப் பருத்தி வீடுநிறையப் பெய்த (புறம்: 393-12)
  • வில்லெறி பஞ்சியின் வெண்மளை தவழும் (அகம்: 133-6)

நெசவு

  • ஆளில் பெண்டிர் தாளின் செய்த நுணங்கு நுண்பனுவல் போலக் கணங்கொள (நற்றிணை: 353-1)
  • பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து (புறம்: 326 - 5)

துணிகள்

  • இழை மருங்கறியா நுழை நூற்கலிங்கம் (மலைபடுகடாம்ம் 565)
  • பாம்பு உரித்தன்ன வான்பூங் கலிங்கமொடி (புறம்: 397-15)

சிலப்பதிகாரம்

[தொகு]
பட்டினும் மயிரினும் பருத்து நூலினுங்
கட்டுனுண்வினைக் காருக ரிருக்கையும்
பாலாவி யன்ன ஆடை
கிழியினுங் கிடையினும் தொழில்பல பெருக்கியோர்

சிலப்பதிகாரம்

--Natkeeran (பேச்சு) 18:21, 27 மே 2012 (UTC)[பதிலளி]

நற்கீரன் மேற்கண்ட சான்றுகளை கட்டுரையில் இணைத்து விடுங்கள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:07, 27 மே 2012 (UTC)[பதிலளி]

தற்போது கட்டுரை விரிவாக்கப்படுவதால், ஒன்றிணைத்தல் வார்ப்புருவை நீக்கியுள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:05, 27 மே 2012 (UTC)[பதிலளி]