பேச்சு:இந்திய மூக்குக்கொம்பன்
Appearance
நீரிலும் மணிக்கு 40 கிமீ நீந்தவல்லதா? கட்டுரையில் ஓடக்கூடிய விரைவும் நீந்தும் திறனுடன் கூறப்படுவதால் குழப்பமாக உள்ளது. கார்த்திக் இதனைத் திருத்த வேண்டுகிறேன்.--செல்வா 18:07, 16 ஏப்ரல் 2009 (UTC)-
- சரி செல்வா:) செஞ்சுடலாம்--கார்த்திக் 18:22, 16 ஏப்ரல் 2009 (UTC)
நல்ல கட்டுரை. இன்னும் ஓரிரு முறை மெய்ப்பார்த்து எழுத்துப்பிழைகளைத் திருத்தி, உரைதிருத்திவிட்டால், முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 08:32, 18 ஏப்ரல் 2009 (UTC)
- இந்தியக் காண்டாமிருகம் என்றுதானே வரவேண்டும்?--Kanags \பேச்சு 21:48, 24 ஏப்ரல் 2009 (UTC)
- ஆம் கனகு, நானும் மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். இந்தியக் காண்டாமிருகம் என்றுதான் வரவேண்டும். ஒரேயொரு சிக்கல். காண்டாமிருகம் என்று முதல் எழுத்தை வலித்து ஒலிக்க வேண்டும். ஆனால் வடமொழியாக இருந்தால் வல்லினம் மிகாது. காண்டாமிருகம் என்பதை Gandamirugam என்று கொள்வதானால், வல்லினம் மிகாது. வேற்றுமொழிச் சொற்களால் வரும் சிக்கல்களில் இதுவும் ஒன்று. எனவே இந்தியக் காண்டாமிருகம் என்று கூறுவதே நல்லது. முதல் ககரத்தை வலித்தே ஒலிக்கலாம். ஆகவே க் வந்தாலும் வராவிட்டாலும் அமைதி கூறலாம். --செல்வா 23:15, 24 ஏப்ரல் 2009 (UTC)