உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அரசன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசன் என்பது தமிழ்ச் சொல் என்று தேவநேயப் பாவணர் நிறுவியுள்ளார். அரையன் > அரசன். அரசன், அரசி, அரசு, அரசோச்சுதல், அரசாட்சி எல்லாம் தமிழ். --C.R.Selvakumar 15:31, 4 ஜூன் 2006 (UTC)செல்வா

பாவாணர் அவர்கள் விரிவாக இதைப்பற்றி எழுதி உள்ளார். royal, regal என எல்லா மேற்காரிய மொழிச் சொற்களையும் திறம்பட (நூற்றுக்கணக்கான மொழிகளுடனும், கிளை மொழிகளுடனும் இணைத்தும் ஒப்பிட்டும்) எழுதியுள்ளார். அரசன், மன்னன், காவலன், வேந்தன் என பல சொற்களையும் வேறுபடுத்தியும் காட்ட வேண்டும். அரசனுடைய காவல் மரம் (இது பற்றிய மரபுகள்), கொடி, அரண் இப்படி அரசன் பற்றிய ப்ல செய்திகளை தொடர்பு படுத்தி விரிவாக்க வேண்டும்.

செல்வா, நீங்கள் அறிந்தவற்றைக் கட்டுரையிலேயே சேர்த்துவிடுங்கள். தேவநேயப் பாவாணரின் நூல்கள் சிலவற்றைப் பல வருடங்களுக்கு முன் வாசித்திருக்கிறேன். தற்காலத்து அறிஞர்களால் வடமொழியிலிருந்து பெறப்பட்டதாகக் கருதப்படும் பல சொற்கள் தமிழ்ச் சொற்களே என அவர் நிறுவ முயன்றிருக்கிறார். Mayooranathan 18:52, 4 ஜூன் 2006 (UTC)

Start a discussion about அரசன்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அரசன்&oldid=3961426" இலிருந்து மீள்விக்கப்பட்டது