உள்ளடக்கத்துக்குச் செல்

பெலோன்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலோன்தியா
மலாய் சீப்புவால் (பெ. ஹாசெல்டி)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
அனாபான்திபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
பெலோன்தியா

மையர்சு, 1923
மாதிரி இனம்
பாலியாகேந்தசு ஹசெல்டி
குவியர், 1831[1]

பெலோன்தியா, சில சமயங்களில் சீப்புவால் கெளராமி என்று குறிப்பிடப்படுகிறது. இது கெளராமி மீன் பேரினங்களுள் ஒன்றாகும். இது தென்கிழக்காசியா மற்றும் இலங்கையில் உள்ள நன்னீர் வாழ்விடங்களைப் பூர்வீகமாகக் கொண்ட பெலோன்தினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள ஒரே பேரினமாகும்.[2] இவை நடுத்தர அளவு முதல் பெரிய அளவில் வளரக்கூடிய கெளரமி மீன் ஆகும். இவை இவற்றின் ஆக்கிரமிப்பு மற்றும் நிறமின்றி காணப்படுவதால் காட்சி மீன்வளங்களில் அரிதாகவே காணப்படுகிறது.

சிற்றினங்கள்[தொகு]

பெலோன்தியா பேரினத்தில் தற்போது இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[2]

  • பெலோன்தியா ஹாசெல்டி (ஜி. குவியர், 1831)(மலாய் சீப்புவால்)
  • பெலோன்தியா சிக்னாட்டா (குந்தர், 1861)(இலங்கை சீப்புவால்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Synonyms of Belontia hasselti (Cuvier, 1831)". www.fishbase.se. பார்க்கப்பட்ட நாள் 2023-06-11.
  2. 2.0 2.1 Froese, Rainer, and Daniel Pauly, eds. (2014). Species of Belontia in FishBase. February 2014 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலோன்தியா&oldid=3735012" இலிருந்து மீள்விக்கப்பட்டது