உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்யிரேனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெர்யிரேனேட்டு (Perrhenate) என்பது ReO
4
என்ற மூலக்கூற்று வாய்பாட்டைக் கொண்ட ஓர் எதிர்மின் அயனியாகும் அல்லது இந்த அயனியைப் பெற்றுள்ள ஒரு சேர்மமாகும். பெர்யிரேனேட்டு அயனியானது ஒரு நான்முகி வடிவ அயனியாகும். இதன் அளவும் வடிவமும் பெர்குளோரேட்டு அயனியை ஒத்திருக்கிறது. இணைதிறன் அளவில் பெர்மாங்கனேட்டு அயனியை ஒத்த எலக்ட்ரான் எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது. பெர்யிரேனேட்டு அயனி ஒரு பரந்த pH வரம்பில் நிலைப்புத்தன்மை கொண்டிருக்கும். கரிம நேர்மின் அயனிகளைப் பயன்படுத்தி கரைசல்களிலிருந்து இதை வீழ்படிவாக்கலாம். சாதாரண pH வரம்பில் பெர்யிரேனேட்டு மெட்டாபெர்யிரேனேட்டாகவும் ReO
4
உயர் pH வரம்பில் மீசோபெர்யிரேனேட்டாகவும் (ReO3−
5
) இரண்டு வடிவங்களில் உள்ளது. பெர்யிரேனேட்டு இதன் இணை அமிலமான பெர்யிரேனிக் அமிலம் போல இரேனியம் d0 எலக்ட்ரான் உள்ளமைவுடன் +7 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள அயனியாகும். திண்ம பெர்யிரேனேட்டு உப்புகள் நேர்மின் அயனியின் நிறத்தைக் கொண்டிருக்கின்றன.[1]

தயாரிப்பு[தொகு]

வழக்கமான பெர்யிரேனேட்டு உப்புகள் கார உலோக வழிப்பெறுதிகள் மற்றும் அம்மோனியம் பெர்யிரேனேட்டு உப்பும் ஆகும். இந்த உப்புகள் நைட்ரிக் அமிலத்துடன் இரேனியம் சேர்மங்களைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்தும், இதைத் தொடர்ந்து விளைந்த பெர்யிரேனிக்கு அமிலத்தை நடுநிலையாக்குதல் வினைக்கு உட்படுத்தியும் தயாரிக்கப்படுகின்றன.[2][3][4] சோடியம் பெர்யிரேனேட்டின் நீரிய கரைசலுடன் டெட்ராபியூட்டைலமோனியம் குளோரைடு சேர்ப்பதால் டெட்ராபியூட்டைலமோனியம் பெர்யிரேனேட்டு உருவாகிறது. இது கரிம கரைப்பான்களில் கரையக்கூடியதாகும்.[5]

பெர்யிரேனேட்டின் வினைகள்[தொகு]

காரம்[தொகு]

பெர்யிரேனேட்டு எதிர்மின் அயனி Cl- அல்லது Br- அயனிகளைக்காட்டிலும் வலிமை குறைந்த ஒரு காரமாகும். ஆனால் ClO
4
அல்லது BF
4
அயனிகளைக்காட்டிலும் இது வலிமை மிக்கது. வெள்ளிபெர்யிரேனேட்டு மும்மெத்தில்சிலில் குளோரைடுடன் வினைபுரிந்து (CH3)3SiOReO3.[6] என்ற சிலில் எசுத்தரைக் கொடுக்கிறது.

ஒடுக்கம்[தொகு]

பெர்யிரேனேட்டு எதிர்மின் அயனி ஒடுக்க வினைக்கு உட்படுகிறது. இதனால் சிறிய இரேனியம் பாலியாக்சோமெட்டலேட்டு Re4O2−
15
[7] உருவாகிறது. இதன் கட்டமைப்பில் நடுவிலுள்ள இரேனியம் மட்டும் எண்முக ஆக்சிசன் ஒருங்கிணைப்புடனும் இதர மூன்று இரேனியம் அணுக்களும் நான்முகி ஒருங்கிணைப்பையும் கொண்டுள்ளன.

சல்பைடுடன் வினை[தொகு]

ஐதரசன் சல்பைடு போன்ற சல்பைடு மூலங்களுடன் பெர்யிரேனேட்டு வினைபுரிகையில் இது டெட்ராதயோபெர்யிரேனேட்டு ReS
4
அயனியாக மாற்றமடைகிறது. இவ்வினையில் [ReO3S].[8] ஓர் இடைநிலையாகத் தோன்றுகிறது.

சல்பைடுடன் வினை[தொகு]

தொடர்புடைய பெர்மாங்கனேட்டைப் போலல்லாமல், பெர்யிரேனேட்டு ஆக்சிசனேற்றம் செய்யாது. இருப்பினும் சில ஆக்சோ ஈந்தணைவிகளை மாற்றுவது ஆக்சிசனேற்ற ஒடுக்கத்தைத் தூண்டுகிறது. இவ்வாறு பெர்யிரேனேட்டு அயனி சயனைடுடன் வினைபுரிந்து 'மறுபக்க'-[ReO2(CN)4]3− சேர்மத்தைக் கொடுக்கிறது. மும்மெத்தில்சிலில் குளோரைடுடன் டெட்ராபியூட்டைலமோனியம் பெர்யிரேனேட்டைச் சேர்த்து சூடுபடுத்தும்போது Re(V) ஆக்சிகுளோரைடு உருவாகிறது.

Bu4N[ReO4] + 6 Me3SiCl → Bu4N[ReOCl4] + 3 (Me3Si)2O + Cl2

பெர்டெக்னிடேட்டு நிரப்பி[தொகு]

பெர்யிரேனேட்டு அயனியின் வேதியியல் பெர்டெக்னிடேட்டு அயனியைப் TcO
4
போன்றதாகும். இந்த காரணத்திற்காக, பெர்யிரேனேட்டு சில சமயங்களில் பெர்டெக்னிடேட்டின் சுவடு நிலை பயன்பாடுகளுக்கான கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. அணுமருத்துவ அலகிடும் நடைமுறைகளில் பயன்படுவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அணுக்கழிவு கண்ணாடியாக்கல் அதாவது ஆவியாகும் தன்மை [9]அல்லது திண்மப்பொருட்களில் உறைபொதியாக்க[10] ஆய்வுகளுக்கு பெர்டெக்னிடேட்டிற்கு பாதுகாப்பான மாற்றாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. O. Glemser "Rhenium" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1476-85.
  3. Richard J. Thompson (1966). "Ammonium Perrhenate". Inorganic Syntheses. Vol. 8. pp. 171–173. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132395.ch44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132395.
  4. Wm. T. Smith, S. Harmon Long (1948). "The Salts of Perrhenic Acid. I. The Alkali Metals and Ammonium". Journal of the American Chemical Society 70 (1): 354–356. doi:10.1021/ja01181a110. 
  5. Dilworth, J. R.; Hussain, W.; Hutson, A. J.; Jones, C. J.; McQuillan, F. S. (1997). "Tetrahalo Oxorhenate Anions". Inorganic Syntheses. pp. 257–262. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132623.ch42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132623.
  6. Kühn, Fritz E.; Santos, Ana M.; Herrmann, Wolfgang A. (2005). "Organorhenium(VII) and Organomolybdenum(VI) Oxides: Syntheses and Application in Olefin Epoxidation". Dalton Transactions (15): 2483–91. doi:10.1039/b504523a. பப்மெட்:16025165. 
  7. Volkov, Mikhail A.; Novikov, Anton P.; Borisova, Nataliya E.; Grigoriev, Mikhail S.; German, Konstantin E. (2023-08-21). "Intramolecular Re···O Nonvalent Interactions as a Stabilizer of the Polyoxorhenate(VII)" (in en). Inorganic Chemistry 62 (33): 13485–13494. doi:10.1021/acs.inorgchem.3c01863. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/10.1021/acs.inorgchem.3c01863. 
  8. Goodman, J. T.; Rauchfuss, T. B. (2002). "Useful Reagents and Ligands". Inorganic Syntheses. Vol. 33. pp. 107–110. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/0471224502.ch2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471208259.
  9. Kim, Dongsang; Kruger, Albert (2018). "Volatile species of technetium and rhenium during waste vitrification". Journal of Non-Crystalline Solids 481: 41–50. doi:10.1016/j.jnoncrysol.2017.10.013. Bibcode: 2018JNCS..481...41K. 
  10. Luksic, Steven; Riley, Brian; Parker, Kent; Hrma, Pavel (2016). "Sodalite as a vehicle to increase Re retention in waste glass simulant during vitrification". Journal of Nuclear Materials 479: 331–337. doi:10.1016/j.jnucmat.2016.07.002. Bibcode: 2016JNuM..479..331L. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்யிரேனேட்டு&oldid=4014241" இலிருந்து மீள்விக்கப்பட்டது