பெப்ரவரி 21
Appearance
(பெப்பிரவரி 21 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 21 (February 21) கிரிகோரியன் ஆண்டின் 52 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 313 (நெட்டாண்டுகளில் 314) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 362 – புனிதர் அத்தனாசியார் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார்.
- 1437 – இசுக்கொட்லாந்தின் முதலாம் யேம்சு மன்னர் படுகொலை செய்யப்பட்டார்.
- 1440 – புருசியக் கூட்டமைப்பு உருவானது.
- 1543 – எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம் படைகளைத் தோற்கடித்தன.
- 1613 – முதலாம் மிக்கையில் உருசியப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரொமானொவ் அரச வம்சம் ஆரம்பமானது.
- 1803 – கண்டிப் போர்கள்: கண்டி மீது பிரித்தானியர் போர் தொடுத்தனர்.[1]
- 1804 – நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.
- 1808 – உருசியப் படை பின்லாந்து எல்லையைத் தாண்டி சுவீடனை அடைந்தது. பின்லாந்துப் போர் ஆரம்பமானது. இப்போரில் சுவீடன் பின்லாந்தை உருசியாவுக்கு இழந்தது.
- 1842 – தையல் இயந்திரத்துக்கான 1-வது அமெரிக்கக் காப்புரிமத்தை யோன் கிரீனா பெற்றார்.
- 1848 – கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் எங்கெல்சும் பொதுவுடைமை அறிக்கையை வெளியிட்டனர்.
- 1878 – முதலாவது தொலைபேசி விபரக்கொத்து அமெரிக்காவில் கனெடிகட்டில் வெளியிடப்பட்டது.
- 1885 – வாசிங்டன் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது.
- 1907 – நெதர்லாந்தில் பெர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் உயிரிழந்தனர்.
- 1919 – செருமனிய சோசலிசவாதி கூர்ட் ஐசுனர் கொல்லப்பட்டார்.
- 1921 – ஈரானில் இடம்பெற்ற புரட்சியில் ரெசா ஷா தெகுரானைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
- 1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போரில் வெளிநாட்டு தேசிய தன்னார்வலர்களை உலக நாடுகள் சங்கம் தடை செய்தது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டையின் போது, சப்பானிய கமிக்காசு வானூர்திகள் அமெரிக்காவின் பிசுமார்க் சீ என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தன. சரட்டோகா கப்பல் சேதமடைந்தது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய முனையில் பிரேசிலிய\[ படைகள் செருமனியப் படைகளை மொண்டே காசுட்டெல்லோ சமரில் தோற்கடித்தன.
- 1947 – எட்வின் லாண்ட் பொலராய்டு என்ற முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார்.
- 1952 – வின்ஸ்டன் சர்ச்சிலின் பிரித்தானிய அரசு ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் அடையாள அட்டை முறையை நீக்கியது.
- 1952 – வங்காள மொழி இயக்கம்: கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழியை அதிகாரபூர்வ மொழியாக்கக் கோரி டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய எழுச்சிப் போராட்டம் ஒன்றின் போது காவற்துறையினர் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நாள் பின்னர் யுனெஸ்கோவினால் அனைத்துலக தாய்மொழி நாள் என அறிவிக்கப்பட்டது.
- 1960 – பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.
- 1965 – மல்கம் எக்ஸ் நியூயோர்க் நகரில் இசுலாமியத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1972 – சீன-அமெரிக்க உறவுகளை சீர் செய்யும் பொருட்டு அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சீனா சென்றார்.
- 1972 – சோவியத்தின் ஆளில்லா லூனா 20 சந்திரனில் இறங்கியது.
- 1973 – சினாய் பாலைவனத்தில் இசுரேல் போர் விமானம் லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
- 1974 – சூயெஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இசுரேலியப் படைகள் வெளியேறின.
- 1995 – இசுட்டீவ் பொசெட் என்பவர் அமைதிப் பெருங்கடலின் குறுக்கே வெப்பக்காற்று வாயுக்கூண்டில் பயணம் செய்த முதல் மனிதராக கனடாவின் லீடர் நகரில் தரையிறங்கினார்.
- 2013 – 2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள்: இந்தியாவின் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 20 மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1728 – மூன்றாம் பீட்டர், உருசியப் பேரரசர் (இ. 1762)
- 1801 – ஜான் ஹென்றி நியூமன், ஆங்கிலேயக் கருதினால் (இ. 1890)
- 1878 – மிரா அல்பாசா, பிரான்சிய-இந்திய மதத் தலைவர் (இ. 1973)
- 1894 – சாந்தி சுவரூப் பட்நாகர், இந்திய வேதியியலாளர் (இ. 1955)
- 1895 – என்ரிக் டாம், டென்மார்க்கிய உயிர் வேதியியலாளர் (இ. 1976)
- 1896 – நிராலா, இந்தியக் கவிஞர் (இ. 1961)
- 1910 – டக்ளஸ் பேடர், ஆங்கிலேய விமானி (இ. 1982)
- 1921 – ஜான் ரால்ஸ், அமெரிக்க மெய்யியலாளர் (இ. 2002)
- 1924 – இராபர்ட் முகாபே, சிம்பாப்வேயின் 2வது அரசுத்தலைவர் (இ. 2019)
- 1946 – அலன் ரிக்மான், ஆங்கிலேய நடிகர், இயக்குநர் (இ. 2016)
- 1958 – கிம் கோட்ஸ், கனடிய நடிகர்
- 1964 – ஸ்காட் கெல்லி, அமெரிக்க விண்வெளி வீரர்
- 1970 – கருணாஸ், தமிழக நடிகர், அரசியல்வாதி
- 1980 – ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக், பூட்டான் மன்னர்
- 1987 – எலன் பேஜ், கனடிய நடிகை
- 1988 – வேதிகா குமார், தென்னிந்திய நடிகை
இறப்புகள்
- 1829 – ராணி சென்னம்மா, இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1778)
- 1906 – வி. கனகசபைப் பிள்ளை, ஈழத்து-தமிழகத் தமிழறிஞர் (பி. 1855)
- 1926 – ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ், நோபல் பரிசு பெற்ற இடச்சு இயற்பியலாளர் (பி. 1853)
- 1938 – ஜார்ஜ் எல்லேரி ஏல், அமெரிக்க வானியலாளர் (பி. 1868)
- 1965 – மல்கம் எக்ஸ், அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1925)
- 1981 – ஏ. எஸ். ராஜா, இலங்கைத் திரைப்பட, நாடக நடிகர்
- 1984 – மிகயில் ஷோலகவ், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1905)
- 2001 – நரேன் சந்து பரசார், இந்திய மொழியியலாளர் (பி. 1934)
- 2001 – செர்கேய் அலெக்சாந்திரோவிச் செவாகின், உருசிய வானியலாளர் (பி. 1916)
- 2011 – திருச்சி பிரேமானந்தா, சர்ச்சைக்குரிய இந்திய மதகுரு (பி. 1951)
- 2012 – முத்துராஜா, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்
- 2018 – பில்லி கிரகாம், அமெரிக்க கிறித்தவ நற்செய்தியாளர் (பி. 1918)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.