பெண்ணேஸ்வர மடம்
பெண்ணேஸ்வரமடம் | |||
— சிற்றூர் — | |||
ஆள்கூறு | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | கிருஷ்ணகிரி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ம. சரயு, இ. ஆ. ப [3] | ||
ஊராட்சித் தலைவர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
பெண்ணேஸ்வரமடம் (Panneswaramadam) என்ற ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி வட்டத்தின், பெண்ணேஸ்வர மடம் ஊராட்சியைச் சேர்ந்த சிற்றூராகும். இந்த ஊர் பருகூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
பெயராய்வு
[தொகு]இந்த ஊரில் 33 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஊரின் பழைய பெயர் பெண்ணையாண்டார் மடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்ணையாண்டார் மடம் என்பது சமசுகிருதமயமாக்கலால் பெண்ணை ஈசுவரர் மடம் என்றும் பின்னர் பெண்ணேஸ்வர மடம் என்றும் படிப்படியாக மாறியுள்ளது தெரிய வருகிறது.[4]
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள்வகைப்பாடு
[தொகு]2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 663 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2,686 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1,352, பெண்களின் எண்ணிக்கை 1,334 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 59.31% என உள்ளது.[5] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
பெண்ணேசுவரர் கோயில்
[தொகு]இவ்வூரில் மிகப் பழமையான சிவன் கோயில் உள்ளது. கோயிலின் பெயர் பெண்ணேஸ்வரர் கோயில் ஆகும். கோயில் அருகே தென்பெண்ணை ஆறு பாய்கிறது. இந்த கோயில் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டது[6] . தமிழ் நாட்டிலேயே அதிகமான நவகண்டச் சிற்பங்களை கொண்டுள்ளது[சான்று தேவை]. மேலும் அருகே அதிகமான சிற்பங்களும் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 118.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "Panneswaramadam Village in Krishnagiri, Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
{{cite web}}
: Text "villageinfo.in" ignored (help) - ↑ dr.major syed shshabdeen (2009). தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்டக் கருத்தரங்க மலர். தருமபுரி: ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை. pp. 158–164.