உள்ளடக்கத்துக்குச் செல்

பூ. சா. கோ. சர்வஜன மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. எஸ். ஜி. சர்வஜன மேல்நிலைப்பள்ளி
வகைஅரசு உதவி பெறும் பள்ளி
உருவாக்கம்1924
அமைவிடம், ,

பூ. சா. கோ. சர்வஜன மேல்நிலைப்பள்ளி என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், பீளமேட்டில் செயற்பட்டுவரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகும். இங்கு 12 ஆம் வகுப்புவரை வகுப்புகள் உள்ளன. இப்பள்ளியானது 1929 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளி ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1929 ஆம் ஆண்டு தமிழ்வழிக் கல்வியைச் செயல்படுத்துய முதல் பள்ளி இதுவாகும். இப்பள்ளிக்கு சர்.சி.வி.ராமன், மறைமலை அடிகள், சுத்தானந்த பாரதியார், சி. இராசகோபாலாச்சாரியார், முன்னாள் குடியரசு தலைவர்களான இராசேந்திர பிரசாத், அப்துல் கலாம் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இப்பளியில் உள்ள மாணவர் இல்லத்தில் தாய்தந்தை என இருவரையும் இழந்த அல்லது ஒருவரை இழந்த மாணர்களுக்கு கல்வி, உணவு, தங்கும் வசதி, மருத்துவ வசதி, எழுதுபொருட்கள் என கல்லூரி படிப்புவரை இலவசமாக வழங்கப்படுகிறது.[1]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பி.எஸ்.ஜி. அறநிலைய மாணவர் இல்லத்தில் சேர விண்ணப்பிக்கலாம்". செய்தி. தினமணி. 22 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)