பூவைபாளையம்
பூவைபாளையம் | |
---|---|
கிராமம் | |
பூவைபாளையம், திண்டுக்கல், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 10°31′51″N 77°53′55″E / 10.53083°N 77.89861°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
அரசு | |
• நிர்வாகம் | கிராமப் பஞ்சாயத்து |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 624710 |
தொலைபேசிக் குறியீடு | +914551****** |
பாலின விகிதம் | 55 percent/45 percent ♂/♀ |
இணையதளம் | https://instagram.com/poovai_uravugal_ |

பூவைபாளையம் ("சித்தக்காட்டூர்") என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.
இது அருகிலுள்ள நகரமான வேடசந்தூரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான திண்டுக்கல் நகரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
கிராமவாசிகள், முருங்கைக்காய், வெங்காயம், மிளகாய், நெல்லிக்காய், தக்காளி, கத்திரிக்காய், புகையிலை மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை முதன்மையாகப் பயிரிடும் விவசாயிகளாவர். கிராமவாசிகள் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பூவைபாளையமானது, ஒட்டன்சத்திரம் வட்டத்தின் கீழ் அதே தொகுதியில் உள்ளது.
புவியியல்
[தொகு]பூவைபாளையம் 10°31′51′′N, 77°53′55′′E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது, பூவைபாளயம், புது தில்லியிலிருந்து சுமார் 2,500 கி.மீ., மும்பையிலிருந்து 1,350 கி.மீ., சென்னையிலிருந்து 450 கி.மீ., பெங்களூரிலிருந்து 360 கி.மீ. மற்றும் கோயம்புத்தூரிலிருந்து 140 கி.மீ., மதுரையிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. இது மலைகளால் சூழப்பட்டுள்ளது.
மக்கள்தொகை
[தொகு]2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பூவைபாளையம் 700 பேர் மக்கள் தொகையைக் கொண்டிருந்தது.[1] மக்கள் தொகையில் ஆண்கள் 55 சதவீதமாகவும், பெண்கள் 45 சதவீதமாகவும் உள்ளனர். பூவைப்பாளையம் சராசரி கல்வியறிவு விகிதம் 71 சதவீதமாகும்; இது தேசிய சராசரியான 59.5 சதவீதத்தை விட அதிகமாகும். மக்கள்தொகையில் இரண்டு சதவீதம் பேர் ஆறு வயதிற்குட்பட்டவர்கள்.
போக்குவரத்து
[தொகு]பூவைபாளையத்தில் நேரடியாக இணைக்கும் பொதுப் போக்குவரத்து எதுவும் இல்லை, மக்கள் பொதுவாக கிராமத்திற்கு வெளியே பயணிக்க தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். அருகிலுள்ள பொதுப் போக்குவரத்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கோயில்கள்
[தொகு]இப்பகுதியில் பல இந்துக் கோயில்கள் உள்ளன.
- ஸ்ரீ விநாயகர் கோயில்
- ஸ்ரீ குப்பண்ணா சுவாமி கோயில்
- ஸ்ரீ கன்னிமார் கோயில்
- ஸ்ரீ கருமலை பெருமாள் கோயில் (கருமலை உச்சியில்)
- ஸ்ரீ கல்லம்பரை கன்னிமார் கோயில் (செங்காட்டுத் தோட்டம்).
வங்கிகள்
[தொகு]- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (சாலையூர் சந்திப்பு)
- பேங்க் ஆஃப் இந்தியா (புளியமரத்துகோட்டை)
- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (வேடசந்தூர்)
- தமிழ்நாடு வணிக வங்கி (வேடசந்தூர்)
- கனரா வங்கி (வேடசந்தூர்)
- கரூர் வைஸ்யா வங்கி (வேடசந்தூர்)
- இந்தியன் வங்கி (வேடசந்தூர்).
கல்வி
[தொகு]கிராமத்தில் ஒரு தொடக்கப் பள்ளி இருந்தது. ஆனால் குறைந்த மாணவர் சேர்க்கை காரணமாக அது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.