உள்ளடக்கத்துக்குச் செல்

புல்பட்டா

ஆள்கூறுகள்: 11°09′04″N 76°04′01″E / 11.15112°N 76.06693°E / 11.15112; 76.06693
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புல்பட்டா
Pulpatta
கிராமம்
வாலமங்கலம், புல்பட்டா
வாலமங்கலம், புல்பட்டா
ஆள்கூறுகள்: 11°09′04″N 76°04′01″E / 11.15112°N 76.06693°E / 11.15112; 76.06693
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்மலப்புரம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்35,093
மொழிகள்
 • அதிகாரப்பூர்வ மொழிகள்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
676123
வாகனப் பதிவுகேரளா-

புல்பட்டா அல்லது புல்பெட்டா (Pulpatta or Pulpetta) இந்திய நாட்டின் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், எரநாடு தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] இக்கிராமம் மஞ்சேரி என்ற ஊரிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இடம்

[தொகு]

புல்பட்டா இந்தியாவின் மலப்புரம் மாவட்டத்தில் மொங்கம், வள்ளுவம்பிரம் சந்திப்பு மற்றும் மஞ்சேரி ஆகியவற்றின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. உண்மையில் புல்பட்டா மஞ்சேரி - கிழிசேரி சாலையில் அமைந்துள்ளது

மக்கள்தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி புல்பட்டாவில் 21151 ஆண்கள், 21532 பெண்கள் என மொத்தம் 42683 மக்கள் வசித்தனர்.[2][1]

போக்குவரத்து

[தொகு]

புல்பட்டா கிராமம் மஞ்சேரி நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 பரப்பனங்காடி வழியாக செல்கிறது. வடக்குப் பகுதி கோவா மற்றும் மும்பை நகரங்களுடன் இணைகிறது. தெற்குப் பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரம் நகரங்களுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூர் நகரங்களுடன் இணைக்கிறது. அருகிலுள்ள விமான நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். திருர் இரயில் நிலையம் அருகிலுள்ள பெரிய ரயில் நிலையம் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Registrar General & Census Commissioner, India (ed.). "Census of India : Villages with population 5000 & above". பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. "Pulpatta Village Population - Ernad - Malappuram, Kerala".
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்பட்டா&oldid=3642770" இலிருந்து மீள்விக்கப்பட்டது