உள்ளடக்கத்துக்குச் செல்

புரோடாக்டினியம் டெட்ராபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோடாக்டினியம் டெட்ராபுளோரைடு
Protactinium tetrafluoride
இனங்காட்டிகள்
61716-26-5 Y
InChI
  • InChI=1S/4FH.Pa/h4*1H;/q;;;;+4/p-4
    Key: CRDGDRUMLTUCQA-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
  • [Pa+4].[F-].[F-].[F-].[F-]
பண்புகள்
F4Pa
வாய்ப்பாட்டு எடை 307.03 g·mol−1
தோற்றம் அடர் பழுப்பு நிறப் படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புரோடாக்டினியம் டெட்ராபுளோரைடு (Protactinium tetrafluoride) என்பது PaF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோடாக்டினியம் உலோகமும் புளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு

[தொகு]

600 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஐதரசன் புளோரைடு/ஐதரசன் கலவையுடன் புரோடாக்டினியம்(IV) ஆக்சைடை சேர்மத்தை வினைபுரியச் செய்து புளோரினேற்றம் செய்வதன் மூலம் புரோடாக்டினியம் டெட்ராபுளோரைடைத் தயாரிக்கலாம்:

PaO2 + 4HF -> PaF4 + 2H2O

ஐதரசன் புளோரைடு மற்றும் ஐதரசனை புரோடாக்டினியம்(V) ஆக்சைடு சேர்மத்தின் மீது செலுத்தினாலும் புரோடாக்டினியம் டெட்ராபுளோரைடைத் தயாரிக்கலாம்:

Pa2O5 + 8HF + H2 -> 2PaF4 + 5H2O

இயற்பியல் பண்புகள்

[தொகு]

a = 1.27 நானோமீட்டர், b = 1.07 நானோமீட்டர், c = 0.842 நானோமீட்டர், β = 126.3° என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் புரோடாக்டினியம் டெட்ராபுளோரைடு UF4 கட்டமைப்பின் அடர் பழுப்பு நிறத்தில் ஒற்றைகச்சரிவச்சு, ஊசி போன்ற படிகங்களாக உருவாக்கிறது.[2][3]

நீர்த்த அமோனியம் புளோரைடு கரைசலில் புரோடாக்டினியம் டெட்ராபுளோரைடு கரையும்.[4]

வேதிப் பண்புகள்

[தொகு]

புரோடாக்டினியம் டெட்ராபுளோரைடு ஆக்சிசன் மற்றும் புளோரினுடன் வினையில் ஈடுபடுகிறது.:[2]

2PaF4 + F2 -> 2PaF5
4PaF4 + O2 -> 2Pa2OF8

காரங்களுடன் புரோடாக்டினியம் டெட்ராபுளோரைடு வினைபுரிகிறது:

PaF4 + 4NaOH -> PaO2 + 4NaF + 2H2O

புரோடாக்டினியம் டெட்ராபுளோரைடு உப்பிலிருந்து உலோகத்தை பேரியம் இடப்பெயர்ச்சி செய்கிறது.

PaF4 + 2Ba -> Pa + 2BaF2

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hawkins, Donald T. (6 December 2012). Binary Fluorides: Free Molecular Structures and Force Fields A Bibliography (1957–1975) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4684-6147-3. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
  2. 2.0 2.1 Proceedings of the Protactinium Chemistry Symposium: Gatlinburg, Tennessee, April 25-26, 1963 : Sessions 1-111 (in ஆங்கிலம்). United States Atomic Energy Commission, Technical Information Service Extension. 1964. p. 57. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
  3. Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. 28 February 1970. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-057861-3. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
  4. Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. 28 February 1970. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-057861-3. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.