புனித பீட்டர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி
புனித பீட்டர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி | |
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2008 |
முதல்வர் | முனைவர் எஸ். செல்வன் |
அமைவிடம் | , , 13°6′32″N 80°7′15″E / 13.10889°N 80.12083°E |
வளாகம் | அரைநகர்ப்புறம் |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | spcet |
புனித பீட்டர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி (St. Peter's College of Engineering and Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின், அவடியில் அமைந்துள்ள ஒரு இருபாலர் பொறியியல் கல்லூரி ஆகும். [1] இக்கல்லூரி அன்னூர் தொடருந்து நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலும், ஆவடி தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]இந்த கல்லூரி 2008 ஆம் ஆண்டில் லட்சுமி சரஸ்வதி கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது, 1992 ஆம் ஆண்டில் இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்தக்கல்லூரியானது பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது. இது ஒரு சுய நிதியி பொறியியல் கல்லூரியாகும். இந்த கல்லூரி சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் (AICTE) ஒப்புதலைப் பெற்றுள்ளது.
படிப்புகள்
[தொகு]- பி.இ . கணினி அறிவியல் பொறியியல்
- மின் மற்றும் மின்னணு பொறியியல்
- பி.இ மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
- பி.இ இயந்திரப் பொறியியல்
- குடிசார் பொறியியல்
- பி.டெக். தகவல் தொழில்நுட்பம் [2]
- பி.டெக் வேதிப் பொறியியல்
- பி.இ வான்வெளிப் பொறியியல்
- பி.டெக். உயிரி தொழில்நுட்பம்
- பி.ஆர்க்
- எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- எம்.இ. பொறியியல் வடிவமைப்பு
- எம்.இ. அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்
- எம்.இ. கட்டமைப்பு பொறியியல்
- எம்பிஏ
குறிப்புகள்
[தொகு]- ↑ "St. Peter's College of Engineering and Technology, Chennai". Collegesintamilnadu.com. Retrieved 2012-10-29.
- ↑ "St. Peter'S College Engineering And Technology, Details". Studyguideindia.com. Retrieved 2012-10-29.