உள்ளடக்கத்துக்குச் செல்

புனித ஜார்ஜ் சிரோ மலபார் கத்தோலிக்க போரேன் தேவாலயம், அருவிந்தர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித ஜார்ஜ் போரேன் தேவாலயம் அருவிந்தர

அருவிந்தர தேவாலயம் (Aruvithura Church) என்பது சீரோ மலபார் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் எராட்டுப்பேட்டாவின் அருவிந்தராவில் அமைந்துள்ளது. [1]

இராபெலி (இப்போது அருவித்தர) தேவாலயத்தின் முதல் நீள்மாடக்கூடம் இந்து கோவில்களின் முறையில் கருங் கற்களால் ஆனது. மலபாரின் முக்கியமான மற்றும் பிரபலமான கிராமங்களில் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்ப தென்னிந்தியாவுக்கு வந்தார் திருத்தூதர் புனித தாமஸ் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. புனித தாமஸ் இரப்பேலியை பார்வையிட்டு முக்கிய குடும்பங்களை கிறிஸ்தவ சமயத்துக்கு மாற்றி மீனச்சிலாற்றின் கரையில் ஒரு சிலுவையை நாட்டினார் என்று நம்பப்படுகிறது. உள்ளூர் மரபுகளும் இந்த நம்பிக்கையை ஆதரிக்கின்றன. இது பாலாய் மறைமாவட்டத்தின் முதல் தேவாலயம், முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. புனித தாமஸ் அங்கே ஏழரை தேவாலயங்களை நிறுவினார். (ஈராபோலியில் ஒரு சிலுவையை நாட்டி ஈராபெலியில் தேவாலயத்தை அரை தேவாலயமாக மாற்றினார். ) தேவாலயம் 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ஒன்று அல்லது இரண்டு முறை புனரமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டைய தேவாலயங்கள் 16 ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் உள்ள முக்கிய குடும்பங்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முக்கிய குடும்பங்களால் கல்லரக்கல் கதனார் தலைமையில் ஒரு புதிய தேவாலயம் கட்டப்பட்டது.

தேவாலயம் முதன்முதலில் கன்னித் தாய்க்கு அர்ப்பணிக்கப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டில் நிலக்கல் தேவாலயம் அல்லது புனித தாமஸ் நிறுவிய சாயல் தேவாலயம் அழிக்கப்பட்டபோது, பல குடும்பங்கள் இராபெலிக்கு குடிபெயர்ந்தன. அப்போது அவர்கள் புனித ஜார்ஜ் சிலையை கொண்டு வந்தனர். சிலை வந்ததிலிருந்து, மக்கள் புனிதர் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருக்கத் தொடங்கினர். மேலும் அவர் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு உதவிகளை வழங்கி நன்மை பயக்கிறார் என மக்கள் நம்பினர். புனிதரின் பரிந்துரையின் மூலம் பெறப்பட்ட ஏராளமான உதவிகள் காரணமாக, 16 ஆம் நூற்றாண்டில், தேவாலயம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் அவரது சிலை பிரதான பலிபீடத்தின் மேலே உள்ள மைய இடத்தில் வைக்கப்பட்டது. இதன் விளைவாக, செயின்ட் மேரி தேவாலயம் ஈராபெலி புனித ஜார்ஜ் தேவாலயம் ஈரபெலி என்று அழைக்கபட்டது.

16 ஆம் நூற்றாண்டின் தேவாலயம் 1951 ஆம் ஆண்டில் இடிக்கபட்டது. இந்த தேவாலயம் கோதிக் கட்டிடக்கலையிலான சிலுவை கட்டிடமாகும். இது மேற்கில் ஜெருசலேம் நோக்கியதாக உள்ளது. இதன் புதிய கட்டுமானப் பணிகள் 1952 இல் நிறைவடைந்தன. [2]

இந்த தேவாலயம் பரங்கங்கம் புனித அல்போன்சா கல்லறையிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இரண்டு தேவாலயங்களும் முதன்மைச் சாலை ஓரத்தில் உள்ளன. பேருந்து வசதி நன்கு உள்ளது. இரண்டு தேவாலய வளாகங்களிலும் நல்ல தரிப்பிட (பார்க்கிங்) வசதிகள் உள்ளன.

ஆலயத்தின் ஆண்டு விழாவானது ஆண்டுதோறும் ஏப்பிரல் மாதம் 22, 23, 24 ஆகிய நாட்களில் நடக்கிறது.

அணுகல்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "St. George Forane Church, Aruvithura". www.aruvithurapally.com. பார்க்கப்பட்ட நாள் 6 January 2015.
  2. ""Aruvithura Palli"-The Historical Church of Kerala... [PART-1]". You Tube: JOMS DigiMedia. பார்க்கப்பட்ட நாள் 6 January 2015.