புனர்பாபா ஆறு
புனர்பாபா ஆறு Punarbhaba River | |
---|---|
![]() கங்கரம்பூர் ரயில் நிலையம் அருகிலிருந்து புனர்பாபா நதியின் காட்சி | |
அமைவு | |
நாடுகள் | இந்தியா மற்றும் வங்காளதேசம் |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
கோட்டங்கள் | ராஜசாகி மற்றும் இரங்க்பூர் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | தீபா ஆறு |
⁃ அமைவு | தினச்பூர், தினஜ்பூர் மாவட்டம், வங்காளதேசம், ரங்க்பூர் கோட்டம், வங்காளதேசம் |
முகத்துவாரம் | மகாநந்தா ஆறு |
⁃ அமைவு | கோமோசுதபூர் துணை மாவட்டம், சபாய் நவாப்கஞ்ச் மாவட்டம், ராஜசாகி கோட்டம், வங்காளதேசம் |
⁃ ஆள்கூறுகள் | 24°49′42″N 88°18′18″E / 24.8283°N 88.3051°E |
நீளம் | 160 km (99 mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | பத்மா ஆறு |
புனர்பாபா ஆறு (Punarbhaba River) என்பது வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பாயும் ஒரு ஆறு ஆகும். பூனோர்வாபா ஆறு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. இதன் மொத்த நீளம் 160 கிலோமீட்டர்கள் (99 மைல்) ஆகும். அகலம் 3 முதல் 8 கிலோமீட்டர்கள் வரையிலும் (1 முதல் 5 மைல்) சராசரி ஆழம் 1.96 மீட்டர் (6.4 அடி ) ஆகவும் உள்ளது. வங்காளதேசத்தின் தாகூர்கான் மாவட்டத்தின் தாழ்நிலங்களில் இருந்து ஆறு உருவாகிறது. ஆற்றின் மேல் பகுதி அத்ராய் ஆற்றுக்கு மேற்கே சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வங்காளதேசத்தின் தினச்பூர் நகரம் ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இது மேற்கு வங்காளத்தின் தெற்கு தினச்பூர் மாவட்டத்தின் கங்கராம்பூர் மற்றும் தபன் கிராமம் சமூக மேம்பாட்டு தொகுதிகள் வழியாக பாய்கிறது.[1] தெற்கே பாய்ந்த பிறகு, இந்த நதி தேபா நதியுடன் இணைகிறது. இறுதியில் ஆறு கங்கையில் கலக்கிறது .[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dakshin Dinajpur". Rivers. District administration. Retrieved 2009-05-30.
- ↑ Chowdhury, Masud Hasan (2012). "Punarbhaba River". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.