பி. நர்சிங் ராவ்
பி. நர்சிங் ராவ் | |
---|---|
2015இல் ராவ் | |
பிறப்பு | போங்கு நர்சிங் ராவ் 26 திசம்பர் 1946 பிரக்னாப்பூர், ஐதராபாத் இராச்சியம் (நவீன தெலங்காணா, இந்தியா) |
படித்த கல்வி நிறுவனங்கள் | உசுமானியா பல்கலைக்கழகம் |
பணி | இயக்குநர், நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
விருதுகள் | சர்வதேச விருதுகள் தேசிய திரைப்பட விருதுகள் நந்தி விருது |
போங்கு நர்சிங் ராவ் (Bongu Narsing Rao) (பிறப்பு 1946) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை ஆசிரியரும் எழுத்தாளரும் இசையமைப்பாளரும் கவிஞரும் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகரும் மற்றும் ஓவியரும் ஆவார். இவர் முக்கியமாகத் தெலுங்குத் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் பணியாற்றுகிறார்.[1][2] ராவ் ஐந்து தேசிய திரைப்பட விருதுகள், மூன்று நந்தி விருதுகள், பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், பல்வேறு ஆசிய திரைப்பட விழாக்களில் நடுவர் குழுவில் பணியாற்றியுள்ளார்.[3][4][5] 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் முறையே 16 மற்றும் 17 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற தாசி மற்றும் மட்டி மனுசுலு ஆகிய படங்களை இவர் இயக்கினார்.[6]
சொந்த வாழ்க்கை.
[தொகு]இவர் ஐதராபாத் இராச்சியத்திலிருந்த மேதக் மாவட்டத்தின் பிரக்னாபூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.[7] நரசிங்க ராவ் திருமணமானவர். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் மற்றும் ஏழு பேரக்குழந்தைகள் உள்ளனர்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Passion For Possession". Channel6 Magazine. Archived from the original on 15 October 2014. பார்க்கப்பட்ட நாள் 31 May 2013.
- ↑ "Meet the cultural icons of Telangana, India's newest state - Mission Telangana". 16 June 2014.
- ↑ "39th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 27 February 2012.
- ↑ "B.Narsing Rao - "The classic director"". reachouthyderabad.com. பார்க்கப்பட்ட நாள் 10 April 2010.
- ↑ "News Archives". தி இந்து. 2011-05-15. Archived from the original on 2011-08-19.
- ↑ "100 Years of Indian Cinema: The 100 greatest Indian films of all time". IBNLive. Archived from the original on 2013-04-24.
- ↑ Metro India (2016-09-28). "Censorship curbing freedom of speech". Metroindia.com. Archived from the original on 7 September 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-09-07.
- ↑ ABN Telugu (7 January 2018). "Director B Narsing Rao About his Films - Open Heart With RK - ABN Telugu". Archived from the original on 2023-12-23. பார்க்கப்பட்ட நாள் 2024-04-07 – via YouTube.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link)