பில் கேட்ஸ்
பில் கேட்ஸ் | |
---|---|
பிறப்பு | வில்லியம் ஹென்றி கேட்ஸ் III அக்டோபர் 28, 1955 சியாட்டில், வாஷிங்டன், அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கன் |
பணி | மைக்ரோசாஃப்ட் தலைவர் கார்பிஸ் தலைவர் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணை தலைவர் பெர்க்ஷையர் ஹாத்வே இயக்குநர் தொடர் முதலீடு நிர்வாக இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1975–தற்போது |
சொத்து மதிப்பு | US$131பில்லியன் (2021 )[1] |
வாழ்க்கைத் துணை | மெலிண்டா கேட்ஸ் (தி. 1994) |
பிள்ளைகள் | 3 |
கையொப்பம் | |
வலைத்தளம் | |
Bill Gates |
வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.
சிறு வயது வாழ்க்கை
[தொகு]வில்லியம் ஹென்றி கேட்ஸ் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் வில்லியம் ஹெச். கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது குடும்பம் இயற்கையாகவே நல்ல வளம் மிக்கதாகவும், இவரது தந்தை போற்றத்தகுந்த வழக்குரைஞராகவும் இருந்தார். இவரது தாய் யுனைடெட் வே மற்றும் இண்டர்ஸ்டேட் பேங்க் ச்ய்ச்டேமின் இயக்குநர் வாரியத்தில் பணியாற்றினார், மேலும் அவரது தாய் வழி தாத்தா நேஷனல் வங்கியின் தலைவராக இருந்தார். கேட்ஸ் தன் பாலகர் படிப்பில் கணிதத்திலும், அறிவியலிலும் நல்ல முறையில் தேர்வானார். பின்னர், தன் பதி்ன்மூன்றாவது வயதில் சியாட்டிலில் பேர் வாய்ந்த, லேக்சைட் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
இவர் எட்டாம் வகுப்பு பயிலும் போது, லேக்சைட் பள்ளியில் ஒரு கணினி (உண்மையில் அது ஒரு டெலிப்ரிண்டர் வகையை சேர்ந்தது ஆகும்) மற்றும் தினசரி சில மணி நேர கணினி (இது General Electric நிறுவனத்தின் கணினி ஆகும்) பயன்பாட்டுக்காக வாங்க பட்டது. மாணவர்களுக்கு கணினி பயன்று கொள்ள வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும். கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். பில் கேட்ஸ் தனது முதல் கணினி நிரலை டிக்-டக்-டே விளையாட்டுக்காக எழுதினார், அது பயனாளர்களை கணினிக்கு எதிராக விளையாட வழி வகுத்தது. அவர் கணினியின்பால் பெரிதும் கவர்ந்து இழுக்கப்பட்டார். இவரது ஆர்வத்தை பார்த்து பள்ளி இவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது, அதன் மூலம் இவரால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது. ஆனால், கேட்ஸ் மற்றும் இதர மாணவர்கள் கணினியின் இயங்கு தளத்தில் (Operating System) உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி அதிகக் கணினி நேரத்தை உபயோகித்ததாக குறை கூறி தினசரி சில மணி நேர கணினி பயன்பாட்டு திட்டம் பயன்படுத்த தடை செய்யப்பட்டது.
வாழ்க்கை
[தொகு]இளமை
[தொகு]பில்கேட்ஸ் தனது பள்ளிப் படிப்பை ஒரு தொடக்கப் பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலேயே அவருக்கு நிரலாக்கத்தில் (programming) ஆர்வமிருந்ததால், தனது 13ஆம் வயதிலேயே நிரல்கள்(program) எழுதத் தொடங்கினார். பிறகு 1973ல் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். அங்கு அவரது நண்பர் ஸ்டீவ் பால்மரின் வீட்டில் தங்கியிருந்தார்.தனது படிப்பை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்த பிறகு, தனது பால்ய வயது சிநேகிதன் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975ல் துவங்கினார். கணிப்பொறி பிற்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கின்ற நம்பிக்கை அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இருந்தது. இதனால் அவர்கள் கணிப்பொறிக்குத் தேவையான மென்பொருள்களை எழுதத் துவங்கினர். அவருடைய இந்தத் தொலை தூர நோக்கம் தான் இன்று அவரும் அவருடைய நிறுவனத்துக்கும் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தரலானது. இவருடைய தலைமையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நோக்கமானது, நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியும், கணினி உபயோகிப்போருக்கு பூரண மன திருப்தியையும் ஏற்பட வேண்டும் என்பதே ஆகும். இக்காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் நவம்பர் 20, 1985 இல் மைக்ரோசாப்ட் விண்டோஸின் முதல் சில்லறை விற்பனை பதிப்பு வெளியிடப்பட்டது. மற்றும் ஆகஸ்டில் OS/2 என்ற ஐபிஎம் காண தனி இயங்குதள உருவாக்க ஒப்பந்தம் செய்தனர். பல சிக்கல்களுக்கு பின்னர் OS/2 வின் பதிப்பு 1991 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.
திருமணம் /குடும்பம்
[தொகு]பில் கேட்ஸ் ஜனவரி 1, 1994 ஆம் வருடம் மெலிண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஜெனிபர் காதரின் , போஃப் அடேல் என்று இரு மகள்களும் ரோடி ஜான் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
பிற துறைகள்
[தொகு]எழுத்து / திரைப்படம்
[தொகு]இதுவரை பில் கேட்ஸ் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 1995 ஆம் வருடம் நவம்பர் மாதம் வெளியான "தி ரோடு அஹெட்" என்ற புத்தகத்தை இவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும் , பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர்.அதில் தனி நபர் கணினி பயன்பாட்டில் ஏற்பட்ட புரட்சியைப் பற்றியும் உலகத்தில் அதிவேக தகவல் தொடர்பின் வரவு எதிர்காலத்தை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது . பில் கேட்ஸின் “த ரோட் அகெட்'எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில், தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "பிசினஸ் @ தி ஸ்பீட் ஆப் தாட் " என்ற நூலில் வியாபாரமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் , தொழில்நுட்பக் கட்டமைப்புகளும் தகவல் வளையங்களும் எப்படி போட்டி நிறைந்த வியாபார உலகில் கைகொடுக்கும் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.
2010 இல் எடுக்கப்பட்ட "வெயிட்டிங் பார் தி சூப்பர்மேன் " , பிபிசி தயாரித்த ஆவணப்படமான "தி வர்ச்சுவல் ரெவலுஷன்" உட்பட பல ஆவணப்படங்களில் பில் கேட்ஸ் தோன்றியுள்ளார்.
1999 ஆம் வருடம் வெளியான "பைரேட்ஸ் ஆப் தி சிலிகான் வேளி" என்ற திரைப்படத்தில் "ஆப்பிள்" மற்றும் "மைக்ரோசாப்ட்" நிறுவனங்களின் வளர்ச்சியே கதை கருவாக இருந்தது. இப்படத்தில் பில் கேட்ஸ் வேடத்தில் "அண்டோனி மைகேல் ஹால் " என்ற நடிகர் நடித்தார்.
பிற நிறுவன முதலீடுகள்
[தொகு]- காஸ்கட் இன்வெஸ்ட்மென்ட் எல்எல்சி- வாஷிங்டன் நகரில் தலைமையிடத்தை கொண்ட ஒரு தனியார் முதலீடு நிறுவனம் இது பில் கேட்ஸினை கட்டுப்பாட்டில் இயங்குகிறது
- பி.ஜி.சி 3-பில் கேட்ஸால் நிறுவப்பட்ட புதிய சிந்தனை ஆலோசனை (think-tank) நிறுவனம்.
- கோர்பீஸ்- டிஜிட்டல் பட உரிமம் மற்றும் சேவைகள் நிறுவனம்.
- டெர்ராபவர்-அணு உலை வடிவமைப்பு நிறுவனம்.
- ரிசர்ச் கேட்-$35 மில்லியன் முதலீட்டில் உருவாக்கப்பட்ட விஞ்ஞானிகளுக்கான சமூக வலைப்பின்னல் தளமாகும்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bill Gates topic page. Forbes.com. Retrieved September 2010.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Bill & Melinda Gates Foundation
- Profile at மைக்ரோசாப்ட்
- Profile at ஃபோர்ப்ஸ்
- Appearances on C-SPAN
- வார்ப்புரு:Charlie Rose view
- வார்ப்புரு:TED
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பில் கேட்ஸ்
- வார்ப்புரு:Guardiantopic
- வார்ப்புரு:NYTtopic
- வார்ப்புரு:WSJtopic
- வார்ப்புரு:Bloombergtopic
- பில் கேட்ஸ் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- Works by பில் கேட்ஸ் at திற நூலகம்
- வார்ப்புரு:Nndb
- How I Work: Bill Gates, Fortune, March 30, 2006.
- The Forbes 400, 2008‐9‐16
{{citation}}
: Check date values in:|date=
(help).