உள்ளடக்கத்துக்குச் செல்

சி. வி. சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. வி. சந்திரசேகர்
பிறப்பு(1935-05-22)மே 22, 1935
சிம்லா, இமாசலப் பிரதேசம், இந்தியா
இறப்புசூன் 19, 2024(2024-06-19) (அகவை 89)
சென்னை, தமிழ்நாடு
பணிநடனக் கலைஞர், கல்வியாளர், நடன இயக்குநர்,
செயற்பாட்டுக்
காலம்
1947–நடப்பு[1]
வலைத்தளம்
www.nrityashree.com/home.htm

சி. வி. சந்திரசேகர் (C. V. Chandrasekhar, 22 மே 1935 – 19 சூன் 2024) பரதக் கலைஞர், ஆசிரியர், இசையமைப்பாளர், நடன அமைப்பாளர், கல்வியாளர் எனப் பன்முகத் தன்மையுள்ளவர். சிம்லாவில் பிறந்தாலும் பூர்வீகம் தமிழகமே. தமிழகக் கலையான பரதத்தை கற்றுத் தேர்ந்தவர் இவர். 24 நாடுகளில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

கல்வி[தொகு]

புதுதில்லி எம்.இ.ஏ. உயர்நிலைப்பள்ளியிலும், சென்னை பெசன்ட் தியாசாபிகல் உயர்நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பு படித்தார். விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டமும், காசி இந்து பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும், கலாசேத்ரா கல்லூரியில் பரதநாட்டியத்தில் முதுநிலைப் பட்டயமும் பெற்றார்.

விருதுகள்[தொகு]

  • இந்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது
  • குஜராத் அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது
  • உத்திரப்பிரதேச அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது
  • பரோடா திரிவேணி கலைக்கூட விருது[2]
  • இந்திய அரசின் பத்ம பூசண் விருது -2011[3]

இறப்பு[தொகு]

பேராசிரியர் சி. வி. சந்திரசேகர் 2024 சூன் 19 அன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தனது 89-ஆவது அகவையில் இறந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._வி._சந்திரசேகர்&oldid=4015093" இலிருந்து மீள்விக்கப்பட்டது