பிராதெ
பிராதெ
பிராதெ எஸ்டேட் | |
---|---|
ஊர் | |
நாடு | ![]() |
கடல் கடந்த ஆட்புலம் | ![]() |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 391 |
நேர வலயம் | ஒசநே-4 (அத்திலாந்திக்கு) |
பிராதெ (Brades அல்லது Brades Estate) கிட்டத்தட்ட 1,000 பேர் மக்கள்தொகைஉள்ள சிற்றூராகும; இது கரிபியத் தீவான மொன்செராட்டின் நடைமுறைப்படியான தலைநகரமாக 1998 முதல் விளங்குகின்றது.[1]
வரலாறு
[தொகு]மொன்செராட் தீவின் தெற்கு பகுதியில் அலுவல்முறை தலைநகராக விளங்கிய பிளைமவுத் 1997இல் சூபிரெயே குன்றுகள் எரிமலை வெடிப்பினால் புதையுண்டதால் கைவிடப்பட்டது. தற்காலிக அரசுக் கட்டிடங்கள் பிராதெசில் கட்டப்பட்டு 1998 முதல் புதிய தலைநகரமாக மாறியது. இந்த செயற்பாடு துவக்கத்தில் தற்காலிகமானதாக திட்டமிடப்பட்டது; ஆனால் இது தீவின் நடைமுறைப்படியான தலைநகரமாகத் தொடர்கிறது.[2] லிட்டில் பே ஏரியாவில் புதியதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் தலைநகருக்கு பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. டயானா, வேல்ஸ் இளவரசி நினைவாக டயானா துறைமுகம் என்ற பெயரும் [3]மார்ச்சு 17ஆம் நாள் கிளர்ச்சியை நினைவுறுத்தும் வகையிலும் அயர்லாந்து-அமெரிக்க சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் புனித பேட்ரிக் என்ற பெயரும் இதில் அடங்கும். இலண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது பிராதெசு துவக்கப் பள்ளி மாணவர்கள் "சிறப்பு 'உலக அமைதி' திட்டத்தை" வெளிப்படுத்தினர்; இதில் அமைதியையும் மொன்செராட் கொடியையும் பதித்த மெத்தையை சமர்ப்பித்தனர்.[4]
புவியியல்
[தொகு]
பிராதெசு மொன்செராட்டின் வடமேற்கில் அமைந்துள்ளது. பங்கம் விரிகுடா, செயிண்ட் பீட்டர்சின் வடக்கில், கார் விரிகுடா மற்றும் லிட்டில் விரிகுடா அருகில், அமைந்துள்ளது. தீவின் முதன்மை சாலை கார் விரிகுடா வரை வடக்கில் சென்று பிறகு தென்கிழக்கில் திரும்பி தீவின் மையத்திலுள்ள வானூர்தி நிலையம் வழியே செல்கின்றது.[5] டேவி குன்றுகள் சிற்றூர் இச்சாலைக்கு அருகே வடகிழக்கில் உள்ளது; காலின்சு ஆறு இந்த குடியிருப்புகளின் ஊடாக சென்று லிட்டில் விரிகுடாவில் கலக்கிறது. பிராதெயின் வடகிழக்கில், தீவின் மையத்தில், மலைப்பாங்காக உள்ளது. இங்கு சில்வர் ஹில் என்ற சிகரம் 403 மீட்டர் உயரத்திற்கு உள்ளது.[6]
பொருளியல்நிலை
[தொகு]பிராம்மரின் கூற்றுப்படி பிரித்தானிய, பன்னாட்டு நிவாரண நிறுவனங்களின் கட்டமைப்பு குழுக்களின் வருகைகளுடன் தன்னம்பிக்கை, கூட்டுறவுடன் இச்சிறு சமுதாயம் தன்னை மீளமைத்து வருகின்றது.[7] பிராதெசில் பல சிறு அங்காடிகளும் வங்கி, கனேடியன் ராயல் வங்கியின் கிளை,[8] அரசு அலுவலகங்கள், அஞ்சலகம், நூலகம், மருந்தகம் உள்ளன.[9] காஸ் கிராண்ட் என்டர்பிரைசஸ், மொன்செராட் வான்சேவை நிறுவனம், மொன்செராட் சுற்றுலா வாரியம் அலுவலகங்கள் பிராதெயில் உள்ளன.[10] தலைமை அரசு வழக்கறிஞரின் அலுவலகம் 3 பராரா பிளாசாவில் உள்ளது.[11] லிட்டில் விரிகுடா கடற்கரையில் சோகா கபானா உணவகம் வெள்ளி இரவுகளில் ரெகே இசையுடன் கோழிக்கறி, மீன் உணவுகளை வழங்குகின்றது; பீப்பிள்சு பிளேசு, டினாசு ஆகியனவற்றில் சிங்க இறால் பர்கர்கள், வெள்ளைப்பூண்டு கூனிறால், தேங்காய் கிரீம் பை, ஜின்ஜர் பியர் சிறப்பு உணவுகளாகும்.[9]
லிட்டில் விரிகுடா அருகில் இசுகூபா மூழ்கல் முதன்மையான விளையாட்டாகும். இங்கு மூழ்குதல், இசுனோர்கெலிங் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.[12]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Leonard, T. M. (2005). Encyclopedia of the Developing World. Routledge. pp.1083. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57958-388-0
- ↑ Jonnard, M. Jonnard Claude M.; Jonnard, Claude M. (November 2009). Islands in the Wind: The Political Economy of the English East Caribbean. iUniverse. ISBN 978-1-4401-9426-9.
- ↑ "Montserrat Asks to Re-name Capital after Diana". BBC. Retrieved 20 September 2014.
- ↑ Booth, Trish (3 April 2014). LIVING MY DREAM: A Children's Wish for Peace. p. 231. ISBN 978-1-4918-8758-5.
- ↑ வார்ப்புரு:Google maps
- ↑ Druitt, Timothy H.; Kokelaar, B. Peter (2002). The Eruption of Soufrière Hills Volcano, Montserrat, from 1995 to 1999. Geological Society of London. p. 5. ISBN 978-1-86239-098-0.
- ↑ Frommer's (29 May 2012). AARP Caribbean. John Wiley & Sons. p. 90. ISBN 978-1-118-26665-6.
- ↑ Nash, KC. (15 April 2011). Antigua, Barbuda & Montserrat Travel Adventures. Hunter Publishing, Inc. p. 73. ISBN 978-1-58843-705-1.
- ↑ 9.0 9.1 Lonely Planet Antigua, Barbuda & Montserrat: Chapter from Caribbean Islands Travel Guide. Lonely Planet. 1 January 2012. p. 61. ISBN 978-1-74321-081-9.
- ↑ South America, Central America and the Caribbean 2002 (10 ed.). Psychology Press. 2001. p. 568. ISBN 978-1-85743-121-6.
- ↑ Nicholls, Clive; Montgomery, Clare; Knowles, Julian B.; Anand Doobay; Mark Summers (14 March 2013). Nicholls, Montgomery, and Knowles on The Law of Extradition and Mutual Assistance. Oxford University Press. p. 784. ISBN 978-0-19-969281-1.
- ↑ Lonely Planet Antigua, Barbuda & Montserrat: Chapter from Caribbean Islands Travel Guide. Lonely Planet. 1 January 2012. p. 60. ISBN 978-1-74321-081-9.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Brades தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.