பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00
பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00 | |
---|---|
இயக்கம் | எம். அன்பு |
தயாரிப்பு | சாலை மைத்திரி |
இசை | ஜான் பீட்டர் |
நடிப்பு | சுரேஷ் கல்யாணி |
ஒளிப்பதிவு | சாலை சகாதேவன் |
படத்தொகுப்பு | குமார் |
கலையகம் | விசன் 21 |
வெளியீடு | நவம்பர் 17, 2006 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00 (Prathi Gnayiru 9.30 to 10.00) என்பது 2006ஆம் ஆண்டு வெளியான தென்னிந்திய தமிழ் திரைப்படம் ஆகும்.[1] இப்படமானது ராஜா கி ஆயேகி பாரத் என்ற இந்தி படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[2]
கதை
[தொகு]பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00 திரைப்படமானது சுரேஷ் (ரமேஷ்), ரெமோ ( கருணாஸ் ), முருகன் (பாலாஜி), சீதாராமன் (ரவி) ஆகிய நான்கு கல்லூரி மாணவர்களின் வாழ்கையைப் பற்றியதாக உள்ளது. ஒரு விடுமுறை காலப் பயணத்தின்போது போது கல்யாணியை ( கல்யாணி ) ஒரு பாலியல் தொழிலாளியாக தவறாகக் கருதி, இந்த மாணவர் கும்பல் அவளை பாலியல் வண்புணர்வு செய்கிறது. அவர்கள் தாங்கள் செய்த தவறை அறிந்து, அவசரமாக சென்னைக்குத் திரும்புகிறார்கள்.
சுரேஷை அவரது தந்தையின் (டெல்லி கணேஷ்) வற்புறுத்தலின் பேரில் தூரத்து உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகுதான், அவரது மனைவி கல்யாணியைப் போலவே இருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரிகிறது. இது ரமேஷின் நண்பர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
இதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளானது கல்யாணி தன் கணவனின் நண்பர்களைப் பழிவாங்குவதாக ஆகிறது. அவர்கள் செய்த தவறை அவர்கள் உணர்ந்தார்களா என்பது மீதமுள்ள கதையோட்டமாக உள்ளது. இறுதியில் கல்யாணி சுரேஷை மிளகாய் புகையை சுவாசிக்க வைத்து கொன்றுவிடுகிறாள்.
நடிகர்கள்
[தொகு]- ரமேஷ் சுரேஷாக
- கல்யாணியாக கல்யாணி
- கருணாஸ் ரெமோவாக
- பாலாஜி
- ரவி
- வையபுரி
- டெல்லி கணேஷ்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- குயிலி