உள்ளடக்கத்துக்குச் செல்

பிரகத்திர மௌரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரகத்திரன்
ஒன்பதாவது மற்றும் இறுதி மௌரியப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி.மு.187 - 180
முன்னையவர்சத்தாதன்வன்
பின்னையவர்புசியமித்திர சுங்கன் (சுங்க வம்ச நிறுவனர்)
அரசமரபுமௌரிய வம்சம்

பிரகத்திரன் (Brihadrathan), சத்தாதன்வனுக்குப் பின் கி.மு.187 முதல் 180 முடிய ஏறத்தாழ ஏழு மௌரியப் பேரரசின் மன்னராக இருந்தவர்.[1] இவர் மௌரிய பேரரசின் ஒன்பதாவது மற்றும் கடைசி பேரரசர் ஆவார். இவரது போர்ப்படைத் தலைவர் புசியமித்திர சுங்கன் பிரகத்திர மௌரியனை வென்று மௌரிய வம்சத்தை முடிவுக்கு கொண்டு வந்து சுங்கப் பேரரசை நிறுவினார்.[2] மௌரியப் பேரரசின் நிலப்பரப்பு, பிரகத்திரனின் ஆட்சிக் காலத்தில் மிகச் சுருங்கி, தலைநகர் பாடலிபுத்திரம் மற்றும் அதை சுற்றிய பகுதிகள் மட்டுமே எஞ்சி இருந்தன.

ஆட்சி

[தொகு]

பிரகத்திரன் சத்தாதன்வனுக்குப் பின் கி.மு.187 முதல் 180 முடிய ஏறத்தாழ ஏழு மௌரியப் பேரரசின் மன்னராக இருந்தவர். கி.மு. 180-இல் யவன மன்னர் முதலாம் தெமித்திரசு, மௌரியப் பேரரசின் வடமேற்கு பகுதிகளான தற்கால ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தான் பகுதிகளைத் தாக்கினார். யுக புராணத்தின் படி தெமித்திரசு, பிரகத்திரன் ஆண்ட மௌரியப் பேரரசின் பாஞ்சாலம், மதுரா மற்றும் சகேதம் பகுதிகளை கைப்பற்றி சிறிது காலம் ஆண்டார்.[3] பிரகத்திர மௌரியனின் தலைமைப் படைத்தலைவர் புசியமித்திர சுங்கன், கி.மு.180-இல் மௌரியப் பேரரசர் பிரகத்திரனைக் கொன்று, மகத நாட்டில் சுங்க வம்சத்தை நிறுவினார். பாணபட்டர் எழுதிய அர்ச சரித்திரம் எனும் வரலாற்று நூலில் இது பற்றிய விவரங்கள் உள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Brihadratha (Maurya Emperor)". Archived from the original on 26 February 2017. Retrieved 28 October 2017.
  2. Thapar, Romila (1998). Aśoka and the decline of the Mauryas : with new afterword, bibliography and index (2nd ed.). Delhi: Oxford University Press. p. 183. ISBN 0-19-564445-X.
  3. 3.0 3.1 Lahiri, B. (1974). Indigenous States of Northern India (Circa 200 B.C. to 320 A.D. University of Calcutta. p. 22, 24.
பிரகத்திர மௌரியன்
முன்னர் மௌரியப் பேரரசர் பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகத்திர_மௌரியன்&oldid=4058725" இலிருந்து மீள்விக்கப்பட்டது