பெப்ரவரி 14
Appearance
(பிப்ரவரி 14 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 14 (February 14) கிரிகோரியன் ஆண்டின் 45 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 320 (நெட்டாண்டுகளில் 321) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 748 – அபாசிதுப் புரட்சி: அபூ குராசானி தலைமையில் அசிமியக் கிளர்ச்சியாளர்கள் உமையாது மாகாணமான குராசானின் தலைநகரைக் கைப்பற்றினர்.
- 1014 – திருத்தந்தை எட்டாம் பெனடிக்டு செருமனி, இத்தாலியின் மன்னர் இரண்டாம் என்றியை புனித உரோமைப் பேரரசராக்கினார்.
- 1076 – திருத்தந்தை ஏழாம் கிரகோரி புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியை மதவிலக்கம் செய்தார்.
- 1130 – இரண்டாம் இனசென்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1349 – பிரான்சின் ஸ்திராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
- 1400 – இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு இறந்தார். இவர் பட்டினியால் இறந்ததாக நம்பப்படுகிறது.
- 1556 – பேரரசர் அக்பர் முகலாயப் பேரரசராக முடிசூடினார்.
- 1779 – அவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டார்.
- 1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஜிப்ரால்ட்டர் அருகே இடம்பெற்ற கடல்சமரில் ஒரசியோ நெல்சன் தலைமையில் பிரித்தானியக் கடற்படை எசுப்பானியக் கடற்படையை வென்றது.
- 1804 – உதுமானியப் பேரரசுக்கு எதிரான செர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்சே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது.
- 1815 – கண்டிப் போர்கள்: கண்டி இராச்சியத்தைப் பிரித்தானியர் கைப்பற்றினர். கண்டி ஒப்பந்தம் மார்ச் 2 இல் கையெழுத்திடப்பட்டது.[1]
- 1859 – ஓரிகன் 33வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
- 1876 – எலீசா கிறே, அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர்.
- 1879 – சிலி இராணுவத்தினர் பொலிவியாவின் அன்டோபொகஸ்டா துறைமுக நகரைக் கைப்பற்றியதை அடுத்து பசிபிக் போர் வெடித்தது.
- 1899 – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அமெரிக்க நடுவண் தேர்தல்களில் பயன்படுத்துவதற்கு அமெரிக்க சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது.
- 1900 – தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன.
- 1912 – அரிசோனா 48வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
- 1918 – சோவியத் ஒன்றியம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய யூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1).
- 1919 – போலந்து-சோவியத் போர் ஆரம்பமானது.
- 1924 – ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.
- 1929 – சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று அல் கபோனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் சப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: உருசியாவில் ரசுத்தோவ் நகர் நாட்சிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: துனிசியப் போர்த்தொடர்: தூனிசியாவில் நேச நாடுகளின் நிலைகள் மீது தாக்குதல்கள் ஆரம்பித்தன.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய நீர்மூழ்கி ஒன்று மலாக்கா நீரிணையில் செருமனி-இத்தாலிய நீர்மூழ்கியத் தாக்கி மூழ்கடித்தது.
- 1946 – இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.
- 1949 – இசுரேலிய நாடாளுமன்றம் முதற்தடவையாகக் கூடியது.
- 1961 – 103வது தனிமம் இலாரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1966 – அவுஸ்திரேலியாவில் முன்னர் பயன்பாட்டில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1979 – ஆப்கானித்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்டு இறந்தார்.
- 1981 – டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 48 பேர் உயிரிழந்தனர்.
- 1987 – யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
- 1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1989 – ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.
- 1989 – யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் பேரழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.
- 1989 – சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ரூகொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார்.
- 1990 – பெங்களூரில் இந்தியன் ஏர்லைன்சு விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் உயிரிழந்தனர், 54 பேர் காயங்களுடன் தப்பினர்.
- 1990 – வொயேஜர் 1 விண்கலம் பூமியின் படம் ஒன்றை எடுத்தது. இப்படம் பின்னர் வெளிர் நீலப் புள்ளி எனப் பெயர்பெற்றது.
- 1998 – கமரூனில் யாவுண்டே நகரில் எண்ணெய்த் தாங்கித் தொடருந்து சரக்குத் தொடருந்துடன் மோதியதில் எரிநெய் கசிந்து வெடித்ததில், 120 பேர் உயிரிழந்தனர்.
- 1998 – கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.
- 2000 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 2004 – மாஸ்கோ அருகே பூங்கா ஒன்றின் கூரை உடைந்து வீழ்ந்ததில் 25 உயிரிழந்தனர்.
- 2005 – கல்லூரி மாணவர்கள் சிலரால் யூடியூப் முதன் முதலில் வெளியிடப்பட்டது.
- 2005 – லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் அரீரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 2005 – பிலிப்பீன்சில் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7 பேர் கொல்லப்பட்டு 151 பேர் காயமடைந்தனர்.
- 2011 – அரேபிய வசந்தம்: பகுரைன் எழுச்சி ஆரம்பமானது.
- 2017 – செயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, வி. கே. சசிகலா உட்பட நான்கு பேர் குற்றவாளிகள் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- 2018 – தென்னாப்பிரிக்காவின் அரசுத்தலைவர்பதவியில் இருந்து யாக்கோபு சூமா விலகினார்.
- 2018 – அமெரிக்காவில் மயாமியின் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.
- 2019 – புல்வாமா தாக்குதல்: இந்தியாவின், காசுமீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ஜெய்சு-இ-முகமது என்னும் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், மத்திய சேமக் காவல் படையைச் சேர்ந்த 45 பேர் கொல்லப்பட்டு, 35 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- 1483 – பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)
- 1745 – மாதவராவ், மராட்டியப் பேரரசின் நான்காம் தலைமை அமைச்சர் (இ. 1772)
- 1838 – மார்கரெட் ஈ. நைட், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1914)
- 1869 – சார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய இயற்பியலாளர் (இ. 1959)
- 1896 – ஆர்த்தர் மில்னி, பிரித்தானிய வானியற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1950)
- 1898 – பிரிட்சு சுவிக்கி, சுவிட்சர்லாந்து-அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1974)
- 1901 – பி. சாம்பமூர்த்தி, தமிழக இசையியல் அறிஞர் (இ. 1973)
- 1904 – போரிசு வொரந்த்சோவ்-வெல்யமினோவ், சோவியத்-உருசிய வானியற்பியலாளர் (இ. 1994)
- 1914 – இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி, தமிழக மிருதங்கக் கலைஞர் (இ. 1998)
- 1925 – மோகன் தாரியா, இந்திய அரசியல்வாதி, சமூகச் செயற்பாட்டாளர் (இ. 2013)
- 1929 – தேவேந்திரலால், இந்தியப் புவியியற்பியலாளர் (இ. 2012)
- 1933 – மதுபாலா, இந்திய நடிகை (இ. 1969)
- 1939 – யூஜின் ஃபாமா, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- 1943 – சங்கர் குஹா நியோகி, இந்தியத் தொழிற்சங்கத் தலைவர் (இ. 1991)
- 1952 – சுஷ்மா சுவராஜ், இந்திய அரசியல்வாதி (இ. 2019)
- 1990 – தீக்ஷா செத், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 269 – புனித வேலண்டைன், உரோமைக் கத்தோலிக்க ஆயர், புனிதர் (பி. 176)
- 1405 – தைமூர், துருக்கிய-மங்கோலியப் பேரரசர் (பி. 1336)
- 1779 – ஜேம்ஸ் குக், ஆங்கிலேயக் கப்பற் தளபதி, நாடுகாண் பயணி (பி. 1728)
- 1943 – டேவிடு இல்பேர்ட்டு, உருசிய-செருமானிய கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1862)
- 1950 – கார்ல் குதே யான்சுகி, அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1905)
- 1964 – வி. டி. கிருஷ்ணமாச்சாரி, இந்திய அரசியல்வாதி (பி. 1881)
- 1975 – பி. ஜி. வுட்ஹவுஸ், ஆங்கிலேயப் புதின எழுத்தாளர் (பி. 1881)
- 1968 – அ. ந. கந்தசாமி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1924)
- 1992 – எஸ். குலேந்திரன், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் (பி. 1900)
- 1995 – யு நூ, பர்மாவின் 1வது பிரதமர் (பி. 1907)
- 2018 – மோர்கன் சுவாங்கிராய், சிம்பாப்வேயின் 2வது பிரதமர் (பி. 1952)
சிறப்பு நாள்
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.