உள்ளடக்கத்துக்குச் செல்

பிஜப்பூர் மாவட்டம், சத்தீஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிஜாப்பூர் மாவட்டம், சட்டீஸ்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிஜப்பூர்
Location of பிஜப்பூர்
நாடு இந்தியா
பகுதிமத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
கோட்டம்பஸ்தர் கோட்டம்
நிறுவப்பட்ட நாள்1 மே 2007[1]
தலைமையிடம்பிஜப்பூர்
வட்டங்கள்4[2]
அரசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்ஸ்ரீ ராஜேந்திர குமார் கட்டாரா
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்ஸ்ரீ திவ்யாங் குமார் படேல்
பரப்பளவு
 • மொத்தம்6,562.48 km2 (2,533.79 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்2,55,230
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
494 4xx (பிஜப்பூர்)[4]
தொலைபேசி குறியீடு+91
இணையதளம்bijapur.gov.in/en

பிஜப்பூர் மாவட்டம், சத்தீஸ்கர் (Bijapur district, Chhattisgarh) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும்.[5] பஸ்தர் கோட்டத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான பிஜப்பூர் நகரம், தந்தேவாடா மாவட்டத்திலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தந்தேவாடா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 1 மே 2007இல் புதிதாக இம்மாவட்டம் துவக்கப்பட்டது.

மாவட்ட எல்லைகள்

[தொகு]

சத்தீஸ்கர் மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில், பஸ்தர் கோட்டத்தில் அமைந்துள்ள இம்மாவட்டம், வடக்கில் நாராயண்பூர் மாவட்டம், கிழக்கில் தந்தேவாடா மாவட்டம் , தென்மேற்கில் ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கில் மகாராஷ்டிரம் மாநிலம் எல்லைகளாக கொண்டது.

புவியியல்

[தொகு]

8,530 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில் இந்திராவதி ஆறு பாய்கிறது. இம்மாவட்டம் 675 கிராமங்கள் கொண்டது.[6] மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் மலைக்காடுகளால் சூழ்ந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

பிஜப்பூர் மாவட்டம், பிஜப்பூர் மற்றும் போபால்பட்டினம் என இரண்டு உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் 4 வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], பிஜப்பூர், பைரம்கர், போபால்பட்டினம் மற்றும் உஸ்சூர் என நான்கு வட்டார வளர்ச்சி அலுவலகங்களை கொண்டுள்ளது. 696 கிராமங்களைக் கொண்ட இம்மாவட்டத்தில் 169 கிராமப் பஞ்சாயத்துக்களை கொண்டுள்ளது. பைரம்கர் மற்றும் போபால்பட்டினம் என இரண்டு நகரப்பஞ்சாயத்துக்களும் மற்றும் ஒரு பிஜப்பூர் நகராட்சி மன்றமும் கொண்டது. மாவட்டத்தில் பதினெட்டு காவல் நிலையங்கள் உள்ளது.

அரசியல்

[தொகு]

பிஜப்பூர் மாவட்டம் பஸ்தர் மக்களவை தொகுதியிலும் (பழங்குடி மக்கள்-ST), பிஜப்பூர் சட்டமன்ற தொகுதியிலும் அமைந்துள்ளது.

போக்குவரத்து

[தொகு]

இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரமான பிஜப்பூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 16, நாட்டின் பெரும்பான்மையான நகரங்களை தரை வழியாக இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 63 பிஜப்பூரையும், வாரங்கல் மற்றும் ஹைதராபாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 202 உடன் இணைக்கிறது.

அருகில் உள்ள தொடருந்து நிலையம் தந்தேவாடா நகரத்திலும், அருகில் உள்ள விமான நிலையம் ராய்ப்பூர் நகரத்திலும் மற்றும் விசாகப்பட்டினம் நகரத்திலும் அமைந்துள்ளது.

காடுகளும் காட்டுயிரகளும்

[தொகு]

8,530 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் வறண்ட பகுதிகளும், தெற்கு பகுதிகள் அடர்ந்த மலைக்காடுகளும் கொண்டது. காட்டுப்பகுதிகளில் புலிகளும் சிறுத்தைகளும், வேங்கைகள் அதிகம் கொண்டது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்டத்திற்கு அடுத்து மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் இரண்டாம் இடத்தில் இம்மாவட்டம் உள்ளது.

மேலும் இந்தியாவில் மிகக் குறைந்த படிப்பறிவு கொண்ட மாவட்டங்களில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்திற்கு அடுத்து இம்மாவட்டம் 41.58 விழுக்காட்டுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.[7]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,55,230 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 128,663 மற்றும் பெண்கள் 126,567 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 984 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 30 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 40.86% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 50.46% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 31.11% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 42,495 ஆக உள்ளது.[8]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 245,151 (96.05 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 1,617 ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 2,709 ஆகவும், பௌத்த சமயத்தவர் 1,649 ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் 228 ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை கணிசமாக உள்ளது.

மாவட்ட பிரச்சனைகள்

[தொகு]

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[9][10][11][12] இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 https://bijapur.gov.in/en/demography/
  2. https://bijapur.gov.in/en/tehsil/
  3. https://bijapur.gov.in/en/whos-who/
  4. Bijapur
  5. "Chhattisgarh carves out nine more districts". The Times Of India. 2012-01-01 இம் மூலத்தில் இருந்து 2014-11-16 அன்று. பரணிடப்பட்டது.. https://wayback.archive-it.org/all/20141116014703/http://articles.timesofindia.indiatimes.com/2012-01-01/india/30578413_1_new-districts-bastar-chhattisgarh. 
  6. "2 new districts formed in Chhattisgarh". April 20, 2010.
  7. "Bijapur District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
  8. http://www.census2011.co.in/census/district/502-bijapur.html
  9. Agarwal, Ajay. "Revelations from the red corridor". Archived from the original on 20 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  11. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. Archived from the original on 2006-06-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  12. "83 districts under the Security Related Expenditure Scheme". IntelliBriefs. 2009-12-11. Archived from the original on 2011-10-27. பார்க்கப்பட்ட நாள் 2011-09-17.

வெளி இணைப்புகள்

[தொகு]