உள்ளடக்கத்துக்குச் செல்

பாலுறுப்பு ஹேர்பீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலுறுப்பு ஹேர்பீஸ் Herpes Simplex எனும் வைரசினால் ஏற்படும் பாலியல் நோயாகும். இந்த வைரஸ் உடலினுள் புகுந்தபின் நிரந்தரமாகத் தங்கி மீண்டும் மீண்டும் உயிர்ப்படைந்து நோயை ஏற்படுத்தும். யோனிவழி, குதவழி மற்றும் வாய்வழிப் பாலுறவால் இது பரவுகிறது.[1][2][3]

அறிகுறிகள்

[தொகு]
  • பாலுறுப்பில் சுண்டியிழுப்பது போன்ற உணர்வும் அரிப்பும் ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து சிறிய கொப்புளங்கள் தோன்றும்.
  • கொப்புளங்கள் வெடித்து வேதனை மிக்க புண்கள் தோன்றும்.

பிரசவம்

[தொகு]
  • இந்நோயுள்ள பெண்கள் பிரசவத்தின் போது பாலுறுப்பில் புண்கள் காணப்பட்டால் சிசேரியன் செய்து கொள்ள வேண்டும்.
  • இதன் மூலம் குழந்தைக்கு தொற்றுவதையும் தடுக்கலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ryan KJ, Ray CG, eds. (2004). Sherris Medical Microbiology (4th ed.). McGraw Hill. pp. 555–62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8385-8529-0.
  2. "Herpes simplex". Pediatr Rev 30 (4): 119–29; quiz 130. April 2009. doi:10.1542/pir.30-4-119. பப்மெட்:19339385. 
  3. "Herpes simplex virus". World Health Organization. 31 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலுறுப்பு_ஹேர்பீஸ்&oldid=4100722" இலிருந்து மீள்விக்கப்பட்டது