உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிய பழங்குடியினர் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரதிய பழங்குடியினர் கட்சி
சுருக்கக்குறிபாபக
தலைவர்சோட்டுபாய் வாசவா
நிறுவனர்மகேஷ்பாய் வாசவா
தொடக்கம்2017
தலைமையகம்குசராத்து
கொள்கைபழங்குடியினர் மேம்பாடு
பிலிஸ்தான் மாநிலம்[1][2]
நிறங்கள்சிகப்பு     
கூட்டணிஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) (2018-2020)
ஆம் ஆத்மி கட்சி (ஏப்ரல் 2022-செப்டம்பர்2022)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(குசராத்து)
0 / 182
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(ராஜஸ்தான்)
2 / 200
இணையதளம்
bharatiyatribalparty.org
இந்தியா அரசியல்

பாரதிய பழங்குடியினர் கட்சி (Bharatiya Tribal Party) என்பது இந்தியாவின் குசராத்தை தளமாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சியானது 2017ஆம் ஆண்டு ஜகாடியா சட்டமன்ற உறுப்பினர் சோட்டுபாய் வாசவா மற்றும் மகேசுபாய் வாசவா (ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்) ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது.[3] இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு ஆட்டோ ரிக்சா சின்னத்தை ஒதுக்கியது.[4][5][6]

வரலாறு

[தொகு]

குசராத்து

[தொகு]

2017 குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பாரதிய பழங்குடியினர் கட்சி ஜகாடியா சட்டமன்றத் தொகுதி மற்றும் தெடியாபாடா சட்டமன்றத் தொகுதி என் 2 இடங்களில் வெற்றி பெற்றது.

2022 குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்கியது. ஆனால் ஏப்ரல் 2022-ல், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது.[7][8] ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 2022-ல் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியை முடித்துக்கொண்டது.

ராஜஸ்தான்

[தொகு]

2018 ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய பழங்குடியினர் கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே போட்டியிட்டு அந்த இரண்டு இடங்களையும் வென்றது.[9] இக்கட்சி இந்தியத் தேசிய காங்கிரசு அரசாங்கத்தில் இணைந்தது. ஆனால் 2020-ல் இதன் ஆதரவைத் திரும்பப் பெற்றது.[10]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'White House' to be centre of Bhilistan movement!". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/surat/White-House-to-be-centre-of-Bhilistan-movement/articleshow/12642136.cms. 
  2. "Clamour for separate Saurashtra, Bhilistan to get louder". dna. 2013-08-01. http://www.dnaindia.com/ahmedabad/report-clamour-for-separate-saurashtra-bhilistan-to-get-louder-1868566. 
  3. "Partywise Result". eciresults.nic.in. Archived from the original on 18 டிசம்பர் 2014. Retrieved 7 September 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Election Commission of India letter" (PDF). The Election Commission of India.
  5. "Gujarat: Bharatiya Tribal Party to oppose AAP nationwide". Mid-day (in ஆங்கிலம்). 2022-09-14. Retrieved 2022-09-14.
  6. "'No alliance with topiwallas': Gujarat BTP leader Vasava stings AAP on alliance". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-09-12. Retrieved 2022-09-14.
  7. "Bharatiya Tribal Party ends ties with AAP for Gujarat polls". The Indian Express (in ஆங்கிலம்). 2022-09-13. Retrieved 2022-09-14.
  8. "Arvind Kejriwal's AAP may seal first Gujarat alliance with Chhotu Vasava's BTP". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-04-05. Retrieved 2022-04-10.
  9. "राजस्थान चुनाव 2018 बी टी पी उम्मीदवारों की सूची: विजेता-उपविजेता उम्मीदवारों, निर्वाचन क्षेत्रों और मतों की पूरी सूची". www.oneindia.com (in இந்தி). Retrieved 2022-04-10.
  10. "Why Chhotubhai Vasava’s Bharatiya Tribal Party withdrew support to Congress govt in Rajasthan". http://www.dnaindia.com/ahmedabad/report-clamour-for-separate-saurashtra-bhilistan-to-get-louder-1868566. 

வெளி இணைப்புகள்

[தொகு]