உள்ளடக்கத்துக்குச் செல்

பாதரச அங்குலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாதரச அங்குலம் (Inches of mercury, inHg) என்பது அழுத்தத்தின் ஓர் அலகாகும். இவ்வலகு ஐக்கிய அமெரிக்காவில் காலநிலை அறிக்கைகள், மற்றும் வானியல் போன்றவற்றில் வளிமண்டல அமுக்கத்தை அளக்க இப்போதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், ஏனைய நாடுகளில் இவ்வலகு இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.

செந்தர புவியீர்ப்பு முடுக்கத்தில் 32 ° (0 °செ) வெப்பநிலையில் ஓர் அங்குல நீள நிரல் பாதரசம் தரும் அழுத்தம் ஒரு பாதரச அங்குலம் என வரையறுக்கப்படுகிறது.

1 inHg = 3,386.389 பாசுக்கல், 0 °செ இல்.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதரச_அங்குலம்&oldid=2744967" இலிருந்து மீள்விக்கப்பட்டது