பாகலூர்
பாகலூர் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி மாவட்டம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 7,519 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
பாகலூர் (Bagalur) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1].[2][3]
வலாறு
[தொகு]பாகலூரானது பாகலூர் பாளையத்தின் தலைநகராக இருந்தது. பகலூரில் அகழியுடன் கூடிய கோட்டை ஒன்று காணப்படுகிறது. இந்தக் கோட்டை இரண்டாம் ஏரி எர்ரப்பா என்பவரால் கட்டப்பட்டது எனப்படுகிறது. பாளையக்காரர்களின் குல தெய்வமான சூடநாதர் கோயில் ஒன்றும் இங்குள்ளது. கோட்டையின் மேற் புறத்தில் பாளையக்காரர்கள் வாழ்ந்த அரண்மனையும் சேதமுற்ற தடையங்களும் காணப்படுகின்றன. பெண்ணையாற்றில் பழைய சேதமுற்ற பாலம் ஒன்று உள்ளது. இப்பாலத்தின் கீழ் ஏரிகளுக்கு தண்ணீர் விட பயன்படுத்தபட்ட பழைய அணை ஒன்று உள்ளது. [4]
அமைவிடம்
[தொகு]இந்த ஊர் ஒசூர்-மாலூர் சாலையில், ஒசூரிலிருந்து ஏழு கல் தொலைவில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2001 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி, பாகலூரில் 7519 பேர் வசிக்கின்றனர் அவர்களில் 3852 பேர் ஆண்கள், 3667 பேர் பெண்களாவர்.[2]
பாகலூரின் வெப்பநிலைக்கு ஏற்றுமதிக்கு உகந்த ரோஜா மலர்கள் சாகுபடி செய்து ஏற்றுமதி செய்கின்றனர்.
தொழிற்சாலைகள்
[தொகு]- பிரிமியர் மில்
- செஸ்லெண்ட் டெக்ஸ்டைல்ஸ்
- ஏசியன் பேரிங்ஸ்
ஆகிய தொழிற்சாலைகள் இங்கு உள்ளன.
வங்கிகள்
[தொகு]- இந்தியன் வங்கி
- டிடிசி கார்பரேசன் வங்கி
- ஸ்டேட் பேங் ஆப் மைசூர்
ஆகிய வங்கிகள் இங்கு உள்ளன.
மேற்கோள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-06-25.
- ↑ 2.0 2.1 Village code= 2048000 "Census of India : Villages with population 5000 & above". Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
{{cite web}}
:|first=
missing|last=
(help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Yahoomaps India :". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. Bagalur, Tamil Nadu
- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். pp. 12–127.
{{cite book}}
: Check date values in:|year=
(help)