பஹாரி ஓவியப் பாணி
Appearance
வட இந்தியாவிலுள்ள, பஞ்சாப் பகுதியின், மலைப்பகுதி மாநிலங்களான ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வழங்கி வந்த, ராஜபுதனப் பாணி சார்ந்த ஓவியப் பாணி பஹாரி ஓவியப் பாணி (Pahari painting) எனப்படுகின்றது. பசோஹ்லி, குலு, குலெர், கங்ரா ஆகிய ஓவியப் பாணிகள் பஹாரிப் பாணியின் பிரிவுகளாகக் கருதப்படுகின்றன.
கலை இலக்கியத் துறைகளில் தேசிய உணர்வுகளின் எழுச்சியும், சமயத்துறையில், பக்தி வழியும், நாட்டுப்புற இலக்கியங்களும், பஹாரி ஓவியங்களுக்கான கருப்பொருட்களை வழங்கின. ராஜஸ்தான ஓவியங்கள் பெரும்பாலும் உருவப்படங்கள் மற்றும் அரசவைக் காட்சிகளை முதன்மைப் படுத்திய போது, பஹாரி ஓவியங்கள், காதல் மற்றும் பக்தி சார்ந்த கருப்பொருள்களை முதன்மைப் படுத்தின.[1][2][3]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- தஞ்சாவூர் ஓவியப் பாணி
- மதுபானி ஓவியப் பாணி
- முகலாய ஓவியம்
- ராஜபுதன ஓவியப் பாணி
- பசோஹ்லி ஓவியப் பாணி
- கங்ரா ஓவியப் பாணி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hindu Hill Kingdoms பரணிடப்பட்டது 30 மார்ச்சு 2010 at the வந்தவழி இயந்திரம் V&A Museum.
- ↑ Pahari பரணிடப்பட்டது 23 சூன் 2017 at the வந்தவழி இயந்திரம் Kamat.
- ↑ Arts of Asia (in ஆங்கிலம்). Vol. 14. Arts of Asia Publications. 1984. p. 57. Archived from the original on 12 August 2024. Retrieved 12 August 2024.