முகலாய ஓவியம்
Appearance

.
முகலாய ஓவியம் (Mughal painting) என்பது, 16 ஆம் நூற்றாண்டு தொடக்கம், 19 ஆம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் இருந்த முகலாயப் பேரரசுக் காலத்தில் உருவாகி வளர்ந்த ஒரு ஓவியப் பாணியாகும். இது பொதுவாகப் புத்தகங்களிலும், சிறு அளவினதாகவுமே வரையப்பட்டன.[1][2][3]
தோற்றம்
[தொகு]இரண்டாவது முகலாயப் பேரரசனான ஹுமாயூன், தப்ரீசில் இருந்தபோது, அவருக்குப் பாரசீக ஓவியங்கள் அறிமுகமானது. ஹுமாயூன் இந்தியா திரும்பியபோது, பாரசீக ஓவியப் பாணியில் திறமை பெற்ற இரண்டு ஓவியர்களையும் அழைத்து வந்தார். இவர்கள் மூலம் இந்தியாவுக்கு அறிமுகமான இப் பாணி, பின்னர் உள்ளூர்ப் பாணிகளுடனும் கலந்து முகலாயப் பாணி எனப்பட்ட புதிய பாணியொன்றை உருவாக்கியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Visite de Jahangir à l'ascète Jadrup, 1600, retrieved 2024-06-22
- ↑ Ali, Azmat; Sahni, Janmejay; Sharma, Mohit; Sharma, Prajjwal; Goel, Dr Priya (2019-11-12). IAS Mains Paper 1 Indian Heritage & Culture History & Geography of the world & Society 2020 (in ஆங்கிலம்). Arihant Publications India limited. ISBN 978-93-241-9210-3.
- ↑ "BBC - Religions - Islam: Mughal Empire (1500s, 1600s)". www.bbc.co.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2019-01-01.