பரணி (இசையமைப்பாளர்)
பரணி | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | குணசேகரன் |
பிறப்பு | 19 சூன் 1971[1] அருந்தவபுரம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், பாடகர் |
இசைத்துறையில் | 1993 – நடப்பு |
பரணி (Bharani,பிறப்பு:19 சூன் 1971) என்பவர் ஒரு இந்தியத் திரைப்படத்துறை இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படம் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சொந்தக் குரலில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]பரணி தஞ்சாவூர் அருகில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். மூன்று சகோதரர்களுடன் இவரது குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். இவரது பள்ளி நாட்களில் பாடல்கள் இயற்றுவதில் தீவிரமாகச் செயற்பட்டார். 1989இல் வாய்ப்பு தேடிச் சென்னைக்கு வந்தார். இவரது இயற்பெயர் குணசேகரன்.
பணி
[தொகு]இவர் தொடக்கத்தில் பாடலாசிரியராக வாய்ப்பு கிடைத்ததும் விஜய் நடித்த நாளைய தீர்ப்பு (1992)[2] திரைப்படத்திற்கு பாடல் எழுதியுள்ளார். பரணி இசையமைப்பாளராக பெரியண்ணா (1999) படத்தில் எஸ். ஏ. சந்திரசேகரால் அறிமுகப்படுத்தப்பட்டார். பார்வை ஒன்றே போதுமே (2001), சார்லி சாப்ளின் (2002) போன்ற படங்களில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இவரது 25வது திரைப்படம் வெளுத்து கட்டு (2010)[3]
இசைத்தொகுப்பு
[தொகு]ஆண்டு | திரைப்படம் | குறிப்பு |
---|---|---|
1999 | பெரியண்ணா | |
2001 | பார்வை ஒன்றே போதுமே | |
2002 | சார்லி சாப்ளின் | |
2002 | பேசாத கண்ணும் பேசுமே | |
2002 | சுந்தரா டிராவல்ஸ் | |
2002 | ஜெயா | |
2002 | முத்தம் | |
2002 | ஸ்டைல் | |
2003 | எஸ் மேடம் | |
2003 | சிந்தாமல் சிதறாமல் | |
2004 | மீசை மாதவன் | |
2005 | காற்று உள்ளவரை | |
2005 | திருடிய இதயத்தை | |
2005 | அலையாடிக்கூத்து | |
2006 | ஒரு காதல் செய்வீர் | |
2008 | தரகு | |
2009 | ஒரு காதலன் ஒரு காதலி | |
2010 | வெளுத்துக்கட்டு | |
2011 | கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை | |
2011 | வெங்காயம் | |
2014 | சுற்றுலா | |
2015 | வைரன் | |
2017 | ஒண்டிக்கட்டை | இயக்குநராகவும் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Profile of Music Director Bharani - | Lakshman Sruthi - 100% Manual Orchestra |". www.lakshmansruthi.com. Archived from the original on 24 May 2012.
- ↑ http://www.behindwoods.com/features/Interviews/Interview4/bharani/tamil-cinema-interview-bharani.html
- ↑ http://www.thehindu.com/features/cinema/grill-mill-music-director-bharani/article505936.ece