பயனர் பேச்சு:Rasnaboy
வாருங்கள்!
வாருங்கள், Rasnaboy, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:37, 22 அக்டோபர் 2011 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
[தொகு]சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
[தொகு]Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
"பெரிய கலயம்புத்தூர்" பக்க உருவாக்கம்
[தொகு]"பெரிய கலயம்புத்தூர்" புதிய பக்கத்தை இரு தினங்களுக்கு முன்னர் உருவாக்கினேன். ஆனால் அது ஏற்கனவே உள்ளது என்பதால் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஏற்கனவே இருக்கும் பக்கத்தைத் தேட இயலவில்லை. இப்பக்கத்தை அடைய ஏதேனும் வழியுள்ளதா? நன்றி. Bhagya sri113 (பேச்சு) 14:25, 24 செப்டம்பர் 2021 (UTC)
ஆம். என்னாலும் அப்பக்கத்தைக் காண இயலவில்லை. அதை நீக்கியவரிடம் கேட்டுப்பார்க்கலாம் என்று கருதுகிறேன்.Rasnaboy (பேச்சு) 07:54, 30 செப்டம்பர் 2021 (UTC)- பெரிய கலையம்புத்தூர் என்ற பக்கம் ஏற்கனவே இருந்திருக்கிறது. நீக்கப்பட்ட புதிய பக்கம் "பெரிய கலயம்புத்தூர்" என்று எழுத்துப்பிடையோடு இருந்திருக்கிறது. திருக்குறள் பக்கத்தில் இதைத் திருத்திவிட்டேன். நன்றி. Rasnaboy (பேச்சு) 10:46, 15 அக்டோபர் 2021 (UTC)
கவனிக்க
[தொகு]உலங்கு வானூர்தி கட்டுரையில் நான் செய்துள்ள திருத்தத்தைப் பாருங்கள். ஆங்கிலப் பெயர் எழுதும் போது அது ஆங்கில மொழிக்கு இணைப்புக் கொடுக்க வேண்டாம். ஆங்கிலமல்லாத மொழிகளுக்கு மட்டுமே அந்தந்த மொழிகளைக் குறிப்பிடுங்கள். ஆங்கிலத்துக்குத் தேவையில்லை. அது பொதுவான இரண்டாம் மொழி. எனவே அவ்வாறு எழுதுவதைத் தவிர்த்தல் நல்லது.--Kanags \உரையாடுக 09:01, 25 பெப்ரவரி 2022 (UTC)
- புரிந்தது, நண்பரே. அப்படியே செய்கிறேன். மிக்க நன்றி. Rasnaboy (பேச்சு) 10:58, 25 பெப்ரவரி 2022 (UTC)
மொழிமுதல் எழுத்துக்கள்
[தொகு]மொழிமுதல் எழுத்துக்கள் என்பதைக் கவனியுங்கள். தமிங்கிலம், இலக்கண மீறல் தவிர்ப்பது நன்று. --AntanO (பேச்சு) 09:52, 29 மார்ச் 2022 (UTC)
- அலசிப்பார்த்ததில் தாங்கள் எனது எந்த மாற்றத்தைப் பற்றிக் சுட்டுகிறீர்கள் என்பது விளங்கவில்லை, ஐயா. சற்றே விளக்க வேண்டுகிறேன். முடிந்தால் எந்தக் கட்டுரையில் எந்தச் சொல் என்பதையும் தெரிவிக்க இயலுமாயின் நன்று. நன்றி, ஐயா. Rasnaboy (பேச்சு) 13:18, 30 மார்ச் 2022 (UTC)
- கிட்டத்தட்ட நீங்கள் தொகுக்கும் கட்டுரைகளை அணைத்தையும் கவனித்துப்பாருங்கள். எ.கா: மால்சிக் கட்டுரையில் பல பிழைகள் உள்ளன. ரஷ்யன், மாடலிங், ஃபேஷன், கம்பாஷன் என்பன தமிழ்ச்சொல்களல்ல. --AntanO (பேச்சு) 07:33, 31 மார்ச் 2022 (UTC)
- புரிந்தது, ஐயா. மால்சிக் கட்டுரையில் "கம்பாஷன்" என்ற சொல்லை முதலில் "இறக்கம்" என்றே எழுத முனைந்தேன். பின்னரே அது அச்சிலையைக் குறிக்கும் ("வாட்ஸ்அப்", "சாம்சங்" போன்ற) பெயர்ச்சொல் என்பது புரியவந்ததும் அது மாற்றப்படக்கூடாதது என்றுணர்ந்தேன். மாடலிங், ஃபேஷன் ஆகியவற்றின் சரியான, அவ்விடத்திற்குப் பொருந்தும் நடைமுறைத் தமிழ்ச்சொல்லை நான் அறியாததால் தற்போதைக்கு இச்சொற்களைத் தற்காலிகமாகப் போட்டுள்ளேன். அறிந்த பயனர் யாரேனும் மாற்றினால் செய்யட்டும். அல்லது சரியான சொல்லைத் தேடிக்கண்டவுடன் நானே மாற்றிவிடுகிறேன். நன்றி. Rasnaboy (பேச்சு) 08:34, 31 மார்ச் 2022 (UTC)
March 2022
[தொகு]வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 10:15, 29 மார்ச் 2022 (UTC)
வணக்கம், Rasnaboy!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:
- கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருத்தல். காண்க: {{விக்கியாக்கம்}}, விக்கிப்பீடியா:நடைக் கையேடு (எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, தமிங்கிலம் தவிர்த்து எழுதுதல்)
- தகுந்த ஆதாரம் (மேற்கோள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல், விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
- மூன்று வரிக்கு (வாக்கியங்கள்) அதிகமான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் (3 வரிக்குக் (வாக்கியங்கள்) குறைவான கட்டுரைகள் நீக்கப்படும்)
- சரியான பகுப்பு(கள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம், விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும்
- பிறமொழி விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அதனை சரியான விக்கித்தரவில் இணைத்தல். காண்க: விக்கிப்பீடியா:விக்கித்தரவு
மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--AntanO (பேச்சு) 10:15, 29 மார்ச் 2022 (UTC)
- வார்ப்புருக்களுடன் தொடர்படைய பகுப்புகள் உருவாக்கம்போது கவனம். விளங்காவிட்டால் உதவிப்பக்கத்தில் உதவி கேளுங்கள். விக்கித்திட்டங்களைச் சேர்ப்பதையும் தானியங்கி கொண்டு செய்யலாம். --AntanO (பேச்சு) 10:25, 29 மார்ச் 2022 (UTC)
- தமிழ் இலக்கியம், இந்தியா, தமிழ்நாடு, மதங்கள், அறிவியல், சமூகவியல், மனித உரிமை, விலங்குரிமை எனத் தனித்தனி விக்கி வலைவாசல்களையும் அவை தொடர்பான வார்ப்புருக்களும் பகுப்புகளும் உருவாக்க எண்ணியுள்ளேன். நிச்சயம் கவனமாக இருக்க முயல்கிறேன், ஐயா. தானியங்கியை இதுவரை நான் பயன்படுத்தியதில்லை. தகவலுக்கு நன்றி. Rasnaboy (பேச்சு) 15:28, 29 மார்ச் 2022 (UTC)
- வலைவாசல்களை உருவாக்குதல் பற்றி ஆலமரத்தடியில் கலந்துரையாடுங்கள். தற்போதைய சூழலில் அவை எந்தளவிற்கு த.வி.யில் முக்கியத்துவம் மிக்கன என ஆராய்தல் அவசியம். பல தானியங்கிகள் இங்குள்ளன. அங்கு தேவையை விளக்கி தானியங்கி இயக்குபவர்களினால் குறித்தை வேலையைச் செய்யலாம். --AntanO (பேச்சு) 07:39, 31 மார்ச் 2022 (UTC)
பயனர் அறிமுகம் வேண்டல்
[தொகு]வணக்கம், பத்தாண்டுகளுக்கும் மேலாக விக்கித்திட்டங்களில் பங்களித்தும் கடந்த இரு ஆண்டுகளாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் முனைப்பாகப் பங்களித்தும் வருகிறீர்கள். தொடர் பங்களிப்பாளர்களை முதல் பக்கத்தில் அறிமுகம் செய்து வருகிறோம். அதன்படி உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களுக்கு அதில் ஆர்வமுள்ளதா? -நீச்சல்காரன் (பேச்சு) 06:47, 9 ஏப்ரல் 2022 (UTC)
- என்னைக் கருத்தில் கொண்டமைக்கு மிக்க நன்றி, ஐயா. இதை ஒரு பெரும் ஊக்கமாகவும் எனக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் கருதுகிறேன். முதற்பக்க அறிமுகத்தில் எனக்குப் பெரிதாக ஆர்வமேதும் இல்லை. எனினும் இது அவசியம் செய்யப்பட வேண்டும் என்று தாங்கள் கருதினால் அவ்வாறே செய்கிறேன். Rasnaboy (பேச்சு) 14:40, 11 ஏப்ரல் 2022 (UTC)
- உங்கள் பயனர் பக்கம் காலியாக இருந்ததால் தான் உங்களிடம் அறிமுகக் குறிப்பு கேட்க ஒரு தயக்கமிருந்தது. கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. ஒளிப்படத்துடன் உங்களது அறிமுகத்தை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/உங்கள்பெயர் இட்டு உருவாக்குங்கள். விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். உங்களது அறிமுகம் பலருக்கும் ஊக்கமாக இருக்கும். நன்றி. -நீச்சல்காரன் (பேச்சு) 20:34, 11 ஏப்ரல் 2022 (UTC)
வலைவாசல் உருவாக்கம்
[தொகு]விலங்குரிமை வலைவாசல் ஒன்றை உருவாக்க எண்ணி முயன்றுள்ளேன். தங்கள் பார்வைக்கு இதோ அதன் இணைப்பு: வலைவாசல்:விலங்குரிமை. Bhagya sri113 (பேச்சு) 12:13, 30 ஏப்ரல் 2022 (UTC)
- உருவாக்கியமைக்கு நன்றி. இதைப் பார்த்தவுடன் மேலும் சில பக்கங்கள் உருவாக்க வேண்டியுள்ளது தெரிய வருகிறது. நானும் முயல்கிறேன். Rasnaboy (பேச்சு) 17:49, 30 ஏப்ரல் 2022 (UTC)
குறிப்பு
[தொகு]ஏற்கெனவேயுள்ள மொழிமுதல் எழுத்துக்கள், பகுப்பு பற்றிய குறிப்புக்களைக் கவனியுங்கள். மீண்டும் மீண்டும் அறிவுறுத்திக் கொண்டிருக்க முடியாது. உங்கள் தொகுப்பும் பயனர் Bhagya sri113 தொகுப்பும் ஒரேவிதமாகவுள்ளன. இரு கணக்கிற்கும் ஏதாவது தொடர்பு இருந்தால் தெரியப்படுத்தவும். AntanO (பேச்சு) 16:58, 28 சூன் 2022 (UTC)
June 2022
[தொகு]வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு தங்களை வரவேற்கிறோம் உங்களது பங்களிப்புகளுக்கு நன்றிகள். உங்களது தொகுக்கும் பாங்கு நீங்கள் விக்கிப்பீடியாவில் பல பயனர் கணக்குகளை வைத்துள்ளீர்கள் அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறீர்கள் எனத் தெரிகிறது. பல பயனர் கணக்குகளை வைத்திருப்பது இங்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், அவ்வாறு பல பயனர் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தடை செய்யப்படலாம். எனவே நீங்கள் பல பயனர் கணக்குகளை வைத்திருந்தாலோ அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டாலோ அதனை நிறுத்திக்கொள்ளவும். நன்றி AntanO (பேச்சு) 16:58, 28 சூன் 2022 (UTC)
- வணக்கம் ஐயா. தாங்கள் எதைக் குறித்துக் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் Rasnaboy என்ற கணக்கை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். விக்கியில் (குறிப்பாக ஆங்கில விக்கியில்) பல பயனருடன் அந்தந்தத் துறையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறேன். அதில் Challengethelimits, Bhagya_sri113 போன்ற சிலர் எனக்கு நிஜ வாழ்விலும் அறிமுகமானவர்கள் என்பதால் பல கட்டுரைகளில் (நானறிந்த மட்டும் ஆக்கபூர்வமாக) ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறேன். நாங்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிய கட்டுரைகள் ஆங்கில விக்கியில் பல உண்டு (குறிப்பாக Challengethelimits அவர்களோடு சென்னை, தமிழகம் தொடர்பான பல கட்டுரைகள்). தமிழில் குறிப்பாக தமிழிலக்கியம், திருக்குறள், விலங்கியல், சமூகவியல், விலங்குரிமை, மெய்யியல் ஆகியவற்றை கடந்த சில மாதங்களாக நானும் Bhagya_sri113 அவர்களும் முயன்று வருகிறோம். தரவற்ற தவறான தகவல்களையும் நம்பகத்தன்மையற்ற தகவல்களையும் தவிர்த்து "reliable source" தகவல்களை மட்டுமே சேர்த்து வருகிறோம் (எ.கா. [1]). குறிப்பாக ஆங்கிலத்தில் நம்பகமான தரவுகளுடன் கூடிய கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சியினை ஒருங்கே செய்து வருகிறோம். எங்கள் முயற்சியினை நாங்கள் பங்களிக்க முயலும் கட்டுரையிலும் அவற்றின் பேச்சுப் பக்கத்திலும் தாங்கள் காணலாம். இருப்பினும் ஏதேனும் தவறு நிகழ்ந்து இருப்பின் தெரியப்படுத்தவும். திருத்திக் கொள்கிறேன். நன்றி. Rasnaboy (பேச்சு) 17:43, 28 சூன் 2022 (UTC)
தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு
[தொகு]வணக்கம்!
ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!
- விழா ஏற்பாட்டுக் குழு
தினம் - நாள்
[தொகு]வணக்கம்.. (உலக மீன்பிடி ஒழிப்பு தினம்) - தினம் என்று சொல்லுக்கு பதிலாக நாள் என்ற சொல்லைப் பயன்படுத்தி எழுதுங்கள். நன்றி. --சா. அருணாசலம் (பேச்சு) 10:36, 27 சூலை 2022 (UTC)
- சரி, ஐயா. முதலில் அப்படித்தான் எழுதினேன். பிறகு ஏனோ அதை "தினம்" என்று மாற்றவேண்டியதாயிற்று (வேறு ஏதே தினத்தைப் பார்த்த நினைவு). மாற்றியதற்கு நன்றி. Rasnaboy (பேச்சு) 14:57, 27 சூலை 2022 (UTC)
- மேலும் கவனியுங்கள். அனைத்துலக நாட்கள். -- சா. அருணாசலம் (பேச்சு) 15:31, 27 சூலை 2022 (UTC)
== July 2022 ==
[தொகு]தயவு செய்து விக்கிபீடியாவின் பெயரிடும் மரபுகள் அல்லது ஒருமித்த கருத்துக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்தல் வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு எதிரானதும், அனுமதிக்கப்படாததும் ஆகும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக் கூடாது. உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 03:30, 31 சூலை 2022 (UTC)
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
[தொகு]வணக்கம்!
செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.
இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
[தொகு]வணக்கம்!
செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.
இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
கட்டுரையாக்க அடிப்படை
[தொகு]வணக்கம், Rasnaboy!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:
- கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருத்தல். காண்க: {{விக்கியாக்கம்}}, விக்கிப்பீடியா:நடைக் கையேடு (எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, தமிங்கிலம் தவிர்த்து எழுதுதல்)
- தகுந்த ஆதாரம் (மேற்கோள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல், விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
- மூன்று வரிக்கு (வாக்கியங்கள்) அதிகமான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் (3 வரிக்குக் (வாக்கியங்கள்) குறைவான கட்டுரைகள் நீக்கப்படும்)
- சரியான பகுப்பு(கள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம், விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும்
- பிறமொழி விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அதனை சரியான விக்கித்தரவில் இணைத்தல். காண்க: விக்கிப்பீடியா:விக்கித்தரவு
மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--AntanO (பேச்சு) 08:17, 27 ஆகத்து 2022 (UTC)
விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு
[தொகு]வணக்கம்!
செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
தொகுப்பு பற்றிய கருத்து
[தொகு]அலகுத் திருத்தம், விக்கித்திட்டத்தைச் சேர்த்தல் ஆகியவற்றை தானியங்கி உதவியுடன் செய்யலாம். தானியங்கி செயற்படுத்து முன் மற்றவர்களின் கருத்தையும் அறியவும். நிற்க, பொ.ஊ. என்பது மட்டும்தான் தமிழ் சூழலில் முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதையும் கவனிக்க வேண்டும். AntanO (பேச்சு) 17:22, 4 அக்டோபர் 2022 (UTC)
- நன்றி, ஐயா. பொது ஊழி விக்கிக் கட்டுரையின் அடிப்படையில் செய்யப்பட்ட திருத்தம் அது. "பொ.மு.", "பொ.பி." உள்ளிட்ட மேலும் சில முறைகளும் அங்கு கூறப்பட்டுள்ளன (அந்தக் கட்டுரையிலேயே இவற்றை தரவுகளோடு மேலும் சற்று செம்மைப்படுத்திய பின்னரே இந்த அலகினைப் பயன்படுத்தத் துவங்கினேன்). சில பயனர்கள் கூடுதலாக ஒன்றையும் பயன்படுத்துவதைக் காணமுடிந்தது (அந்த அலகு நினைவிலில்லை). ஆனால் அதற்கு தரவுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்றதால் இதையே சீராகப் பயன்படுத்தி வருகிறேன். அந்தக் கட்டுரையிலேயே தாங்கள் கூறியதுபோல் இது குறித்து விவாதத்தைத் துவங்குகிறேன். நன்றி. Rasnaboy (பேச்சு) 03:55, 5 அக்டோபர் 2022 (UTC)
- ஐயா போன்று அல்லாமல் பெயர் சொல்லியோ அல்லது நீங்கள் என்றோ அழைக்கலாம். \\அந்தக் கட்டுரையிலேயே தாங்கள் கூறியதுபோல் இது குறித்து விவாதத்தைத் துவங்குகிறேன்\\ நன்றி AntanO (பேச்சு) 04:05, 5 அக்டோபர் 2022 (UTC)
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
[தொகு]Dear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Help us organize!
[தொகு]Dear Wikimedian,
You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.
If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
[தொகு]Dear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.
விக்கித்திட்டம் விலங்குரிமையில் மாற்றங்கள்
[தொகு]விக்கித்திட்டம் விலங்குரிமையில் ஆங்கிலப் பக்கத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்துள்ளேன். மேலும் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. பங்களிப்பாளர்களின் பெயர் பட்டியலில் இணைந்த தேதி நேரத்தையும் சேர்த்து விட்டேன். உங்கள் பெயரிலும் முடிந்தால் இத்தகவல்களைச் சேர்க்கவும். நன்றி. Bhagya sri113 (பேச்சு) 07:55, 12 திசம்பர் 2022 (UTC)
- நன்றி. அவ்வாறே செய்கிறேன். Rasnaboy (பேச்சு) 13:17, 12 திசம்பர் 2022 (UTC)
ஐயம்
[தொகு]வணக்கம். பேச்சுப் பக்கங்களில் விக்கித் திட்டங்களை சேர்த்து வருகிறீர்கள். இதன் மூலமாக எவ்வகையான முன்னேற்றத்தை தமிழ் விக்கிப்பீடியாவில் காண இருக்கிறோம்? ஏனெனில் விக்கித் திட்டங்களில் எவரின் பங்களிப்பையும் காண இயலவில்லை. அவ்வாறிருக்கையில் வேறு ஏதாவது பயன்தரும் தொகுப்புகளைச் செய்யலாம் என்பது எனது கருத்து. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:26, 15 திசம்பர் 2022 (UTC)
- வணக்கம், நண்பரே. பேச்சுப் பக்கங்களில் விக்கித் திட்டங்களை இடுவது என்பது அவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஒன்று. உதாரணமாக, சென்னையைச் சார்ந்த கட்டுரைகள் அனைத்தும் "விக்கித்திட்டம் சென்னை" என்பதற்குள் வந்துவிடும். ஆங்கில விக்கிப்பீடியாவோடு ஒப்பிடும் போது தமிழில் இன்றுவரை பயனர்கள் அதிகமில்லாததால் இதன் பயன் தற்போதைக்கு பெரிதாகத் தெரிவதற்கில்லை. அவ்வளவே. விக்கித்திட்டம், வலைவாசல், பகுப்புகள், வார்ப்புரு போன்றவையனைத்தும் இந்நோக்கத்துடனே உருவாக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் கட்டுரைகள் ஒருங்கே அமைய இவை உதவும். இந்திய மாநிலங்கள், நகரங்கள், நிறுவனங்கள், நபர்கள் என எண்ணற்ற கட்டுரைகள் தமிழில் உள்ளபோதும் "விக்கித்திட்டம் இந்தியா" என்று ஒன்று இன்னும் உருவாக்கப்படாமல் உள்ளதால் இவையனைத்தும் சிதறினாற்போல் உள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகள், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், தமிழ் உள்ளிட்ட மொழிகள், இயற்பியல், வேதியியல், சமூகவியல், என அனைத்து கல்வித் துறைகள் என அனைத்துமே தமிழில் இன்னும் உருவாக்கப் படவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. இவையாவும் வெகுவிரைவில் உருவாக்கப்பட வேண்டியவை. ஆங்கில் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் மிகவும் செம்மையாகவும் ஒருங்கிணைந்தும் இருக்க இவையே காரணமாகும். தமிழில் இன்னும் பயனர்கள் பெரிதளவில் முன்வரவில்லை, அவ்வளவே. தனிப்பட்ட வகையில் நான் விக்கித்திட்டங்களில் மட்டுமின்றி கட்டுரைகளை உருவாக்கி மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறேன். நன்றி. Rasnaboy (பேச்சு) 12:17, 15 திசம்பர் 2022 (UTC)
எதிர்காலத்தில் உதவும் என நீங்கள் கருதினால், தொடருங்கள்; நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:26, 16 திசம்பர் 2022 (UTC)
WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022
[தொகு]Dear Wikimedian,
As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.
- [WCI 2023] Open Community Call
- Date: 18 December 2022
- Time: 1900-2000 [7 pm to 8 pm] (IST)
- Google Link: https://meet.google.com/wpm-ofpx-vei
Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:11, 18 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Organizing team
தொடர்-தொகுப்பு 2023 நிகழ்வுகளுக்கான பயிற்சியாளர் அழைப்பு
[தொகு]வணக்கம். புதுப் பயனர்களுக்கு விக்கிப்பீடியா குறித்த பயிற்சிகளை 2023 ஆம் ஆண்டில் தருவதற்காக திட்டமிட்டு வருகிறோம். தொடர்-தொகுப்பு எனும் பெயரில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும். புதுப் பயனர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு புதுப் பயனர்களுக்கு பயிற்சி தர, விக்கிப்பீடியாவில் அனுபவமுள்ள பயனர்கள் தேவைப்படுகிறார்கள். நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், ஒருங்கிணைக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.
பயிற்சியாளராக பங்களிக்க, ஏற்பாடு செய்ய அல்லது ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள் தமது விருப்பத்தை இங்கு குறிப்பிடுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
சிக்கலான, முடிவு எட்டப்படாத திருத்தம்
[தொகு]இது போன்ற சிக்கலான, முடிவு எட்டப்படாத திருத்தங்களைத்தவிர்ப்பது நல்லது. முன்பும் இது தொடர்பில் கருத்திட்டுள்ளேன். AntanO (பேச்சு) 03:16, 17 சனவரி 2023 (UTC)
- இல்லை, நண்பரே. தாங்கள் முன்பு கூறியது போல் இதை அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கலந்தாலோசிக்கப் பதிவு செய்து அதன் பின்னர் எட்டப்பட்ட முடிவின் வாயிலாகவே இத்திருத்தங்களைச் செய்து வருகிறேன். தாங்களும் பயனர் Kanags அவர்களும் கூறிய வழிமுறையின் படி இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது ஊழி என்கிற பக்கத்திற்கு வாசிப்பவர்கள் இணைத்து வைக்கப்படுகிறார்கள். அதன் பின்னர் வாசகர்கள் அதை அலசுவர் என்பதால். நன்றி. Rasnaboy (பேச்சு) 03:49, 17 சனவரி 2023 (UTC)
- நான் அப்பேச்சுப்பக்கத்தில் கருத்திடவில்லை. மேலுள்ள திருத்ததில் நீங்கள் பயன்படுத்தியிருப்பது பொ.பி. நிற்க, இது சிக்கலான விடயமாகவுள்ளதால் பிற பயனர்களும் கருத்திட்டு, பொது முடிவுக்கு வருதல் நன்று. --AntanO (பேச்சு) 03:58, 17 சனவரி 2023 (UTC)
- சரி, நண்பரே. அப்படியே செய்கிறேன். "பொ.பி" (பொது ஊழிக்குப் பின்) என்பது அந்தக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பொது ஊழிக் குறியீடுகளில் ஒன்று. மேலும் அதை நான் மாற்றவில்லை. முதலிலேயே அக்கட்டுரையில் அது "பொ.பி." என்றிருந்ததால் அதை அப்படியே "பொது ஊழி" பக்கத்திற்கு விக்கியிணைப்பு செய்துவிட்டேன். இனி பயனர் Kanags கூறியது போல் "பொ.ஊ." மற்றும் "பொ.ஊ.மு." என்பதை மட்டும் பயன்படுத்துகிறேன். தாங்கள் கூறுவது போல் பிற பயனர்களும் கருத்திட்டால் நலம். நன்றி. Rasnaboy (பேச்சு) 04:07, 17 சனவரி 2023 (UTC)
பகுப்பு சேர்த்தல்
[தொகு]வணக்கம் கட்டுரைகளில் தாங்கள் பகுப்பு சேர்த்துவருவது மகிழ்ச்சி. ஒரு கட்டுரையை திறந்து அதில் பகுப்பை இட்டு சேமிப்பதைவிட விரைவுப்பகுப்பி கருவி வழியாக விரைவாகவும் எளிதாகவும் பகுப்புகளை சேர்க்கவோ, திருத்தவோ செய்யலாம் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 10:25, 25 மார்ச் 2023 (UTC)
"BCE"தமிழாக்கம் எப்படி செய்வது
[தொகு]"BCE" தமிழாக்கம் எப்படி செய்வது. பொ.ஊ.மு அதாவது பொது ஊழிக்கு முன் என்ற எண்ணுகிறேன்? தாங்கள் இதை இதைக் குறித்து விளக்கங்கள் Rasnaboy அவர்களே. நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 06:08, 8 ஏப்ரல் 2023 (UTC)
- இது குறித்துப் பொது ஊழி பக்கத்தில் விரிவாகக் காணலாம். BCE என்பதற்கு பொதுவாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவது "பொ.ஊ.மு." (அதாவது "பொது ஊழிக்கு முன்"). அதே போல் CE என்பதற்கு "பொ.ஊ." (அதாவது "பொது ஊழி) என்று பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக 3000 BCE என்பதைத் தமிழில் "பொ.ஊ.மு. 3000" என்றும் 2008 CE என்பதைத் தமிழில் "பொ.ஊ. 2008" எனவும் வழங்கலாம். நன்றி. Rasnaboy (பேச்சு) 07:15, 9 ஏப்ரல் 2023 (UTC)
- மிக்க நன்றி Rasnaboy அவர்களே, நான் சிறிது நாட்களாக இந்த விக்கி திட்டத்தில் பங்களித்துக் கொண்டு வருகிறேன். உதாரணமாக இந்தியா என்னும் கட்டுரையை உருவாக்கியுள்ளேன். அதில் பொ.ஊ.மு. என்பதை பொது ஊழிக்கு முன் என்றே குறிப்பிட்டுள்ளேன். எனக்கு ஐயம் எழுந்தது, ஆதலால் உங்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டேன். மேலும் தங்கள் விரும்பப்படும் கட்டுரைகளை பேச்சுக் கட்டுரையாக (Spoken Wikipedia) உருவாக்க கட்டுரையின் தலைப்பை இந்த அட்டவணையில் சேருங்கள். நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 18:46, 9 ஏப்ரல் 2023 (UTC)
- மிக்க மகிழ்ச்சி, நண்பரே. அப்படியே செய்கிறேன். நன்றி. Rasnaboy (பேச்சு) 09:10, 11 ஏப்ரல் 2023 (UTC)
- மிக்க மகிழ்ச்சி, நீங்கள் அட்டவணையில் சேர்ப்பதின் மூலம் நான் உங்களுக்கு அந்தப் பேச்சு கட்டுரை உருவாக்குவேன். இப்பொழுது இந்த திட்டத்தில் நான் மட்டுமே பங்களித்து வருகிறேன். கடந்த பத்து வருடங்களாக இந்தத் திட்டத்தில் எவரும் பங்களிக்கவில்லை. நன்றாக பேசுவீர்கள் எனில் நீங்கள் கூட இதை திட்டத்தில் பங்களிக்கலாம். நீங்கள் இந்த திட்டத்தில் பங்களிப்பீர்கள் எனில் தெரிவியுங்கள் நாம் இணைந்து பங்களிக்கலாம்! ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 19:23, 11 ஏப்ரல் 2023 (UTC)
- மிக்க மகிழ்ச்சி, நண்பரே. அப்படியே செய்கிறேன். நன்றி. Rasnaboy (பேச்சு) 09:10, 11 ஏப்ரல் 2023 (UTC)
- மிக்க நன்றி Rasnaboy அவர்களே, நான் சிறிது நாட்களாக இந்த விக்கி திட்டத்தில் பங்களித்துக் கொண்டு வருகிறேன். உதாரணமாக இந்தியா என்னும் கட்டுரையை உருவாக்கியுள்ளேன். அதில் பொ.ஊ.மு. என்பதை பொது ஊழிக்கு முன் என்றே குறிப்பிட்டுள்ளேன். எனக்கு ஐயம் எழுந்தது, ஆதலால் உங்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டேன். மேலும் தங்கள் விரும்பப்படும் கட்டுரைகளை பேச்சுக் கட்டுரையாக (Spoken Wikipedia) உருவாக்க கட்டுரையின் தலைப்பை இந்த அட்டவணையில் சேருங்கள். நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 18:46, 9 ஏப்ரல் 2023 (UTC)
செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு
[தொகு]வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G
விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு
[தொகு]வணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.
இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு
[தொகு]வணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.
நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)
- ஒருங்கிணைப்புக் குழு
உரையாடல் பக்கங்களில் விக்கித் திட்டம் குறித்த வார்ப்புருகள்
[தொகு]வணக்கம். கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் விக்கித் திட்டங்களை சேர்த்து வருவதைக் குறித்து உங்களிடம் முன்பு கேட்டு, பதிலும் பெற்றேன். மீண்டும் அதே கேள்வியை முன்வைக்கிறேன்.
- பகுப்புகள், வார்ப்புரு ஆகியவற்றை விக்கித் திட்டம், வலைவாசல் ஆகியவற்றோடு ஒப்பிடுதல் சரியானது அன்று. ஒவ்வொன்றிற்கும் இருக்கும் பயன்கள், முக்கியத்துவம் பெருமளவில் வேறுபடுகின்றன.
- எதிர்காலத்தில் ஒருங்கமையும் என்கிறீர்கள். அது எப்போது என்பதை உங்களால் கணித்துக் கூற இயலுமா?
- தமிழில் இன்னும் பயனர்கள் பெரிதளவில் முன்வரவில்லை என நீங்களே சொல்கிறீர்கள். அவ்விதமிருக்க, விக்கித்திட்டம் போன்றவற்றில் யார் வேலை செய்யப்போகிறார்கள்?
- ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளின் ஒருங்கிணைப்பை தமிழ் விக்கிப்பீடியாவில் ஒருங்கிணைப்புடன் ஒப்பிடுதலும் சரியானதன்று. பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை மலைக்கும் மடுவுக்கும் இடையேயுள்ள வேறுபாடாகும். தவிர, இங்கு முதன்மையாக செய்யப்படவேண்டிய செம்மைப்படுத்துதல் பணிகள் ஏராளமாக உள்ளன.
- குறிப்பிடத்தக்க மாற்றத்தை அண்மைக் காலத்தில் ஏற்படுத்த வாய்ப்பில்லாத தொகுப்புகளைச் செய்வது எந்த அளவிற்கு உதவும் எனத் தெரியவில்லை.
- இந்தத் தொகுப்புகளை தானியங்கு அணுக்கம் உள்ள ஒருவரின் உதவிகொண்டு செய்ய இயலுமா எனப் பாருங்கள். உங்களின் தொகுப்புகளால் அண்மைய மாற்றங்கள் பக்கங்களை கவனித்து வருவது கடினமாக உள்ளது. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:00, 25 செப்டம்பர் 2023 (UTC)
- வணக்கம், நண்பரே. விக்கித்திட்டமும் வலைவாசலும் அடிமட்டத்தில் பெரிதாகப் பயன்படுவது போல் தெரியாவிட்டாலும் உயர்மட்டத்தில் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் விடயங்களாகும். தமிழ் விக்கியில் பயனர்கள் அதிகம் முன்வருவது எப்போது என்று யாராலும் கணிக்க இயலாதுதான். அது காலத்தின் கையில் உள்ளது. என்றாலும் அதற்கான கட்டமைப்பை உருவாக்கித் தருவதே நமது முதற்கண் கடமை (பின்னாளில் மனித சமூகத்தில் வாகனங்களின் தாக்கம் என்ன என்பதை அறியாத காலத்திலேயே சக்கரத்தைக் கண்டுபிடித்தவரது செயலைப் போல்). விக்கித்திட்டமோ வலைவாசலோ, முதன் முதலில் ஒன்று உருவாவது தான் காலதாமதமாகும். ஒன்றை உருவாக்கிவிட்ட பின்னர் அதன் வழியில் அடுத்தடுத்து மற்றவை வெகுவிரைவில் உருவாகிவிடும். தமிழில் முதன்மையாகச் செய்யப்படுவது கட்டுரைகளை உருவாக்கி மேம்படுத்துவது. நானும் இதைச் செய்து வருகிறேன் (இதுவரை சுமார் 90க்கும் மேற்பட்ட புதிய கட்டுரைகளை உருவாக்கியுள்ளேன்). அதற்கு ஒத்தாற்போல் ஒருங்கிணைக்கும் செயலும் முக்கியம் என்பதை உணர்ந்தே அதையும் கூடவே செய்து வருகிறேன். விக்கித்திட்டங்களின் ஒரு பகுதியாகவே கட்டுரைகளின் தர நிர்ணயம் உள்ளது. நான் பார்த்த வரை "விக்கித்திட்டம் இசுலாம்" என்பதில் மட்டுமே தற்போது இது (ஓரளவுக்கு) உள்ளது. அதன் வழியில் மற்றவற்றிலும் அதைக் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு கட்டுரையையும் தரம் நிர்ணயிக்க இயலும். பெரும்பாலான தமிழ் விக்கிக் கட்டுரைகள் தற்போது தரவுகளின்றி வெறும் கருத்தாக்க ரீதியில் மட்டுமே உள்ளன (rhetoric rather than factual) என்பது வருந்தத்தக்கது. விக்கித்திட்டங்களின் ஒருங்கிணைப்பின் மூலமும் தர நிர்ணயம் மூலமும் இவற்றை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும். ஆங்கில விக்கியை விட தமிழ் விக்கியில் பயனர்கள் குறைவு என்பதற்காக வெறும் தமிழ்/தமிழகம் தொடர்பான கட்டுரைகள் என்ற அளவில் மட்டும் நாம் இருந்துவிட முடியாது என்பதை உணர்கிறேன். ஒரு கலைக்களஞ்சியம் என்பதாக ஆங்கில விக்கியைப் போல் உலகின் அனைத்து விடயங்களைப் பற்றியும் தமிழ் விக்கிக் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்பதை நான் ஆதரிக்கிறேன். அதற்கான கட்டமைப்பை (framework) உருவாக்கி விட்டால் அது தன்னால் நிகழ்ந்து விடும் என்பதே எனது கருத்து.
- அண்மை மாற்றங்கள் குறித்து தாங்கள் கூறுவது உண்மைதான். தமிழ் விக்கியில் மட்டுமின்றி பராமரிப்புத் தொகுப்புகளால் அண்மை மாற்றங்களை கவனிப்பது தடைபடுவதென்பது ஆங்கில விக்கியிலும் அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வு. பாட் (bot) செயலியின் மூலம் பராமரிப்பு நிகழ்வுகள் நடக்கும் போதெல்லாம் அடிக்கடி அங்கு இது நிகழ்வதுண்டு. தாங்கள் கூறுவது போல் இதைத் தானியங்கு முறையில் செயற்படுத்தலாம் என்று மற்ற பயனர்களும் கூறியுள்ளனர். இதைக் குறித்து நான் அறியாததால் அதை இன்னும் செயற்படுத்தவில்லை. இனி அனைத்துப் பக்கங்களிலும் மாற்றம் செய்வதற்கு முன்னர் அண்மை மாற்றங்களை சரிபார்த்து விட்டுச் செயல்படுவதை கவனத்தில் கொள்கிறேன். நன்றி. Rasnaboy (பேச்சு) 03:56, 26 செப்டம்பர் 2023 (UTC)
தங்களின் பதிலுரைக்கு நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:12, 3 அக்டோபர் 2023 (UTC)
விக்கித்தானுலவி மூலம் விக்கித்திட்டம்
[தொகு]வணக்கம் @Rasnaboy:, விக்கித்திட்டங்களை விக்கித்தானுலவி மூலமாக (அரைத்தானியங்கி) கட்டுரைகளின் உரையாடல் பக்கத்தில் சேர்க்க உள்ளேன். இதில் அனுபவமுள்ள உங்களின் ஆலோசனைகள் இருந்தாலும் அறியத் தாருங்கள் .நன்றி --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:07, 17 மே 2024 (UTC)
- வணக்கம், நண்பரே. மிக்க மகிழ்ச்சி. அப்படியே செய்யலாம். என்னால் இயன்ற உதவியைச் செய்யத் தயாராக உள்ளேன். எனினும் தானியங்கி குறித்த அனுபவம் எனக்கு இல்லை. இதுவரை இருக்கும் விக்கித்திட்டங்களை நான் எதிர்கொள்ளும் கட்டுரைகளிலும் அவற்றில் காணப்படும் இணைப்பு வாயிலாக நான் பார்க்கும் கட்டுரைகளிலும் இட்டுக் கொண்டு வருகிறேன். தானியங்கி குறித்து இனிதான் நான் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முன்னதாக இன்னும் உருவாக்கப்பட வேண்டிய விக்கித்திட்டங்களும் ஏராளம் உள்ளன. தற்போது வரை அவை தமிழில் குறைவாகவே உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விடயங்களுக்கும் தனித்தனியாக உருவாக்க வேண்டியுள்ளது (எ.கா., தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்கள்; அரசியல், கல்வி, மருத்துவம், அறிவியல், இலக்கியம், வரலாறு முதலான தனித்தனித் துறைகளுக்கான விக்கித்திட்டங்கள் போன்றவை). அவற்றையும் உருவாக்க முயல்கிறேன். நன்றி. Rasnaboy (பேச்சு) 10:01, 17 மே 2024 (UTC)
நல்ல கட்டுரை- அழைப்பு
[தொகு]வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,68,974 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)
வேட்டை முறியடிப்பு
[தொகு]வணக்கம். குறைந்தது 3 வரிகளாவது ஒரு கட்டுரையில் இருக்க வேண்டும் என்ற கொள்கையின்படி, வேட்டை முறியடிப்பு என்னும் கட்டுரை நீக்கப்பட்டுள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 08:02, 2 ஆகத்து 2024 (UTC)
- @நந்தகுமார் வணக்கம், நண்பரே. அக்கட்டுரை இன்னும் எழுதி முடிக்கப்படவில்லை. முதற்கட்டமாக கட்டுரையின் எலும்புக்கூடான அறிமுகப் பத்தியும் பிற்பகுதிகளும் எழுதப்பட்டுள்ளன. ஆங்கில விக்கியின் அறிமுகப்பத்தி ஒரு வரியில் மட்டும் உள்ளதால் இது அவ்வாறு காணப்படுகிறது. தற்போது எழுதிக்கொண்டு வருகிறேன். இன்னும் சிறிது நேரத்தில் மேலும் தகவல்கள் சேர்க்கப்படும். அதை மீட்டெடுத்துத் தர இயலுமா? அக்கட்டுரையை முழுமையாக்குகிறேன். நன்றி. Rasnaboy (பேச்சு) 08:38, 2 ஆகத்து 2024 (UTC)
- வணக்கம். மீட்டெடுத்துள்ளேன். Underconstruction வார்ப்புரு இட்டுவிட்டு, தொகுத்தல் பணியைச் செய்தல் நல்ல செயல்முறை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:43, 2 ஆகத்து 2024 (UTC)
- மிக்க நன்றி. அப்படியே செய்துவிட்டேன். Rasnaboy (பேச்சு) 08:50, 2 ஆகத்து 2024 (UTC)
- வணக்கம். மீட்டெடுத்துள்ளேன். Underconstruction வார்ப்புரு இட்டுவிட்டு, தொகுத்தல் பணியைச் செய்தல் நல்ல செயல்முறை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:43, 2 ஆகத்து 2024 (UTC)
தொடர்-தொகுப்பு 2024
[தொகு]வணக்கம்!
தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்-தொகுப்பு நிகழ்வு (Edit-a-thon) ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு நகரில், செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்!
நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்த இணைப்பின் வழியாகச் சென்று விண்ணப்பியுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு