உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்/மணல்தொட்டி/முந்தைய உரையாடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரி பார்க்க

[தொகு]

எனது மணல் தொட்டியில் எழுதி முடித்த கட்டுரை சரியாக உள்ளதா? பொது வெளிக்கு நகர்த்தலாமா... இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 05:42, 30 அக்டோபர் 2023 (UTC)

நகர்த்தலாம்.--Booradleyp1 (பேச்சு) 04:40, 1 நவம்பர் 2023 (UTC)

பெரியசாமி தியாகராஜன்

[தொகு]

இ.வாஞ்சூர் முகைதீன், நீங்கள் இக்கட்டுரையை நகர்த்தலாம்.--Booradleyp1 (பேச்சு) 04:18, 5 நவம்பர் 2023 (UTC)

கே. டி. எம் அகமது இப்ராகிம் சாகிப் - கட்டுரை சரிபார்க்கப்பட்டது. நீங்கள் நகர்த்தலாம்.--Booradleyp1 (பேச்சு) 15:41, 6 நவம்பர் 2023 (UTC)
மன‌ மகிழச்சி மேம் நன்றி..... இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:57, 6 நவம்பர் 2023 (UTC)
எஸ். ஜான் ஜேக்கப் இந்த கட்டுரை யை‌ சரிபார்த்து உதவிட வேண்டுகிறேன் நன்றி இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 17:26, 6 நவம்பர் 2023 (UTC)
சரிபார்க்கப்பட்டது.--Booradleyp1 (பேச்சு) 13:57, 7 நவம்பர் 2023 (UTC)
மனhttps://ta.wikipedia.org/s/5jnn எனது மணல் தொட்டியில் உள்ள கட்டுரையை சரியாக உள்ளதா மேம் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 14:51, 9 நவம்பர் 2023 (UTC)
https://ta.wikipedia.org/s/5jnn எனது மணல் தொட்டியல் உள்ள கட்டுரை சரியாக உள்ளதா., இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 16:49, 18 நவம்பர் 2023 (UTC)

எம்.ஜி.சங்கர்

[தொகு]

எம்.ஜி.சங்கர் ரெட்டியாரின் வாழ்க்கைக் குறிப்புகளான மேற்கோள்கள் எதுவும் ஆவி கட்டுரையிலும் இல்லை. இணையத்தில் தேடினாலும் கிடைக்கவில்லை. ஆகவே கட்டுரையில் அவரது வாழ்க்கைக் குறிப்புகளை நீக்கிவிட்டு சுருக்கமாக அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விவரங்களை மட்டும் எழுதலாம் என நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 06:40, 10 நவம்பர் 2023 (UTC)

மதிப்பு மிக்க மேம் இக் கட்டுரை யில் தேவையற்ற பகுதியை நீக்கம் செய்து உதவிட வேண்டுகிறேன் நன்றி இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 17:07, 14 நவம்பர் 2023 (UTC)

சரி செய்திருக்கிறேன். நகர்த்தி விடுங்கள். ஒரு வேண்டுகோள். நீங்கள் என்னைத் தாரளமாகப் பெயரிட்டே (பூங்கோதை/Booradleyp) அழைக்கலாம்.--Booradleyp1 (பேச்சு) 04:45, 15 நவம்பர் 2023 (UTC)

வழிகாட்டல்

[தொகு]

ஆங்கில வாக்கியங்களின் இறுதியில் மேற்கோள்கள் இடப்பட்டுள்ளன அல்லவா? அவற்றை cut செய்து, தமிழ் வாக்கியங்களின் இறுதியில் paste செய்யுங்கள். அப்போதுதான் தமிழ்க் கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்தும்போது மேற்கோள்கள் தெரியும். கூடுதலாக விளக்கம் தேவையெனில், என் அலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:53, 15 நவம்பர் 2023 (UTC)

வழிகாட்டல்

[தொகு]

1. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள வாக்கியத்தை மொழிபெயருங்கள்.

2. உரிய பகுப்புகளை இடுங்கள்.

3. உதவிகள் தேவையெனில் இந்தப் பக்கத்தில் கேளுங்கள். உடன் பங்களிக்கும் பயனர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது உதவுவர்.

4. கைப்பேசியில் கட்டுரைகள் எழுதுவது மிகவும் கடினம் ஐயா. தரத்தை எட்ட இயலாது. கணினி வாயிலாக பங்களிக்க இயலுமா எனப் பாருங்கள். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:13, 1 திசம்பர் 2023 (UTC)

எனது மணல் தொட்டியல் உள்ள கட்டுரை சரியாக உள்ளதா., இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 01:56, 3 திசம்பர் 2023 (UTC)
எனது மணல் தொட்டியல் உள்ள கட்டுரை சரியாக உள்ளதா., இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 03:53, 3 திசம்பர் 2023 (UTC)
ஆங்கிலத்தில் உள்ள பகுப்புகள் யாவும் தமிழில் இருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழில் உள்ள பகுப்புகளை மட்டுமே சேர்க்க வேண்டும். மகாலிங்கம் இரெத்தினவேலு 16:02, 3 திசம்பர் 2023 (UTC)

துன்பேர்சியா பிராகரன்சு

[தொகு]

துன்பேர்சியா பிராகரன்சு என்பதை, உங்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப மேம்படுத்தி உள்ளேன். தற்போதுள்ள மொழிபெயர்ப்பு கருவியைக் கொண்டு அறிவியல் கட்டுரைகளை எழுதுதல் வீண். நான்கு வரி எழுதினாலும், அது ஆய்ந்து எழுதப்பட வேண்டும். கொடுக்கப்பட்ட இணைப்புகளினால், பின்னாளில் அக்கட்டுரையின் அறிவியல் ஆழம் விரிவப்பட வேண்டும். இது மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) என்பதிலுள்ள தாவரவியல் பெயர்களுக்கு, தமிழ்ப் பெயர்களை நானே அமைத்துள்ளேன். விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள் என்பதில் தாவரவியல் பெயரிடல் முறைமை உட்பட, பல உட்கூறுகளுக்கான ஆவணங்கள் உருவாக்கியுள்ளேன். அதனைக் கொண்டே பெயர் அமைக்கிறேன். மேலும், நேற்று ஏறத்தாழ இரண்டு மணி நேரம் உங்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். அப்பொழுது உருவாக்கப்பட்ட கட்டுரையைக் கொண்டு புதிய கட்டுரையை உருவாக்கவும். எனவே, மூலிகையின் தாவரவியல் பெயருக்கு ஒப்ப அதனை அடிப்படையாகக் கொண்டே வேறுபடும் தரவினை உரிய இடத்தில் மாற்ற வேண்டும். ஆங்கில விக்கிப்பீடியாவின் தரவுகளை எடுத்து, மொழிபெயர்ப்பு கருவியைக் கொண்டு, நீங்கள் செயற்பட்டால், உங்களுடன் இணைந்து செயற்படா நிலையே தோன்றும். மீண்டும் தொடர்வோம். நன்றி. உழவன் (உரை) 15:46, 5 பெப்பிரவரி 2024 (UTC)

தாவரவியல் கட்டுரைகளுக்கான வழிகாட்டல்

[தொகு]
  • பன்னாட்டு அறிஞர் ஆய்ந்து ஒரு வடிவத்தினை ஏற்படுத்தியுள்ளனர். எப்படி எனில், எடுத்துக்காட்டாக, கன்னிமாரா நூலகத்தில் ஒரு நூலினை உடனே நாம் எடுக்க கணினி வசதி உள்ளது போல. உலகில் எங்கு இருந்தாலும், உலகின் தாவர வளங்களை அறிய, 100 மேற்பட்ட பன்னாட்டு அறிஞர்கள் ஒன்று கூடி, 15க்கும் மேற்பட்ட ஆண்டுகள் உழைத்து, அவர்கள் ஆய்ந்த தரவுகளை, சில ஆண்டுகளுக்கு முன் பொதுஉரிமத்தில் வெளியிட்டுள்ளனர். காண்க: விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்
    • ஒரு தாவரத்தின் மரபின ஆராய்ச்சி உட்பட. அவை அனைத்தும் ஒரு கணித சூத்திரம் போல இருக்கும். நாம் தொடங்க வேண்டிய புள்ளி யாதெனில் IPNI தளம்.[1] அதனைப் புரிந்து கொள்ள சற்று தாவரவியல் அறிஞர்களின் அணுகமுறையை, வழிமுறையை நாம் கற்றல் வேண்டும். அது BHL, POWO, WFO ஆகிய தளங்களுக்கு வழிகட்டும். இந்த நான்கும் அடிப்படை. இது தவிர மேலும் சில அதிக ஆராய்ச்சி தரவுகள் தரும் இணையதளங்கள் உள்ளன.
  • அவற்றை எளிமை படுத்தியே இல்லாத கட்டுரையை, அதற்கொப்ப தொடங்கி வருகிறோம். அப்படி தொடங்கும் போதே உரிய இணைப்புகளைத் தந்தால்தான் பின்னாளில் நாம் விரிவாக்க இயலும். அதனைதான் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன். நீங்கள் அதனை மறந்து,
    • ஆங்கில விக்கிப்பீடியாவின் வடிவத்தினை ஓரளவு மொழிபெயர்ப்பு செய்து அதனை என்னைத் திருத்த சொல்கிறீர்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. பயிற்சிக்கு எடுத்த கட்டுரையின் வடிவத்தினை புரிந்து கொள்ளுங்கள். அதிலுள்ள தரவுகளைத் தான், மாற்ற வேண்டும். தொடர்ந்து நேற்று இரண்டு கட்டுரைகளை உருவாக்கி என்னை திருத்தச் சொல்கிறீர்கள். ஒன்றை கசடற கற்க வேண்டுகிறேன். தரவுகளை சரிபார்ப்பதில் மட்டுமே நான் உங்களுக்கு ஒத்துழைக்க முடியும். வடிவத்தை அல்ல.
      • நீங்கள், புள்ளி, அடைப்புக்குறிகள், வெற்றிடம்(white space), சான்று உரலி எந்த இடத்தில் இணைக்க வேண்டும் என்பதை, முதலில் நினைவில் கொள்ளவும். ஆங்கில விக்கிப்பீடியாவில் இருக்கும் அனைத்தையும், நாம் இங்கு தர வேண்டியதில்லை. ஏனெனில், அங்கு பல வகைப்பாட்டியல் தவறுகள் உள்ளன. அங்கு ஓரிரு மாற்றங்களை எடுத்துக் கூறினேன். திருத்தியுள்ளனர். (காண்க) தமிழில் மட்டுமே எனது பங்களிப்பு இருக்க விரும்புகிறேன். தொடர்ந்து இணைந்து இருங்கள்.
  • பன்னாட்டு சான்று மட்டுமே தருதல் மிக மிக நன்று. பக்கத்தினை நிரப்புவது நமது இலக்கு அல்ல. இன்று பிற்பகல் ஒரு கட்டுரையில் எப்படி புதிய தரவுகளை இடுதல் வேண்டும் என்று படப்பதிவு செய்து தருகிறேன். மற்றவை உங்களுக்கு விருப்பம் எனில், வினா எழுப்புங்கள். தொடர்வோம்.

உழவன் (உரை) 01:52, 6 பெப்பிரவரி 2024 (UTC)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Thunbergia fragrans". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Thunbergia fragrans". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.

தலைப்புகளுக்குரிய கலந்துரையாடல்கள்

[தொகு]
தலைப்பு 3 மற்றும் 4 அதாவது எனது மணல் தொட்டியில் இரண்டு தாவரவியல் கட்டுரைகள் சரி செய.து வழிகாட்டிட அன்புடன் விழைகிறேன் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 02:31, 6 பெப்பிரவரி 2024 (UTC)
மேற்கண்ட கடமைகள் செய்வன பற்றி அறிந்து கொண்டேன் ...... மன மகிழ்ச்சி இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 02:37, 6 பெப்பிரவரி 2024 (UTC)
நாம் பலருடன் இணைந்து, தமிழ்நாட்டு தாவரவளத் தரவுகளைப் பன்னாட்டுதரத்துடன் முதலில் தொடங்குவோம். பிறகு விரிவாக்குவோம். நீங்கள் தொடர்ந்து இணைந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. உழவன் (உரை) 04:36, 6 பெப்பிரவரி 2024 (UTC)