விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்
தாவரங்களின் விக்கித் திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறோம். |
விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்/தேவைப்படும் கட்டுரைகள்/தொடக்க வடிவம்/இனம் என்பதற்கு சமூக ஒப்புதல் கிடைக்கும் வரை அதனடிப்படையில் கட்டுரைகளை உருவாக்க வேண்டாம். |
தாவரவியல் கட்டுரைகளை, பன்னாட்டு தரவுகளினால் விக்கியாக்கம் செய்வதே, இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். எனவே, பன்னாட்டு தாவரவியலாளர் பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்ட தாவரவியல் தரவுகளை, கட்டற்ற உரிமத்தில் தரும் அமைப்புகளின் செயற்பாடுகளை, நாம் அறிதல் தேவையாகிறது. அப்பொழுதே, தமிழரின் தனித்துவம் மிக்க சித்த மருத்துவத் தாவரங்களின் தனித்துவத்தை, நாம் அறிவியல் ஆய்வுகளினால் தெளிவாக புரிந்து கொள்ள இயலும். நம் சித்த மருத்துவ நுட்பங்களை வளர்ப்பதற்கான வழிமுறைகளும் தோன்றும். நம்பிக்கை அடிப்படையில் அல்லாமல், தெளிவான புரிதலை பொதுமக்களிடம் உருவாக்கினால் தான், தாவரவளம் எந்நாட்டிலும் பெருகம்; நிலைக்கும். ஏற்கனவே உள்ள தாவரவியல் கட்டுரைகளின், நிறைகுறைகளை அறிந்து கொண்டால் தான், புதிய கட்டுரைகளைச் சிறப்பாக உருவாக்க வழிவகைகள் தோன்றும். எனவே, எங்களை அணுகி, உங்கள் ஈடுபாட்டினையும், எண்ணங்களையும் தருக.
தாவரவியல் பெயரிடல் முறைமை
[தொகு]ஒரு தாவரத்தின் பொதுப்பெயரானது, இடத்திற்கு இடம், ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. எனவே, அறிவியல் கண்டுபிடிப்புகளை பகிரும் போது, குழப்பங்களைத் தவிரக்க, ஏறத்தாழ 300 ஆண்டுகளாக பன்னாட்டு தாவரவியலாளர்கள் தாவரவியல் பெயரிடல் முறைமைகளை வளர்த்தும், பின்பற்றியும் வருகின்றனர். எனவே, பன்னாட்டினரும் ஏற்றுக்கொண்டு அறிவித்த, தாவரவியல் பெயர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றின் தமிழ் பெயர்களையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அப்பொழுது ஏற்படும் பொருள் மயக்கத்தைத் தவிரக்கவும், அயல்நாட்டுத் தாவரங்களுக்கு பொருத்தமான தமிழ் பெயர்கள் இல்லாநிலை ஏற்படுமாயின், /பெயரிடல் வழிமுறை பக்கத்தினைக் காணவும். இப்பக்கத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறைகளையும், ஏற்படும் புதிய தேவைகளும், தொடர்புடைய நுட்பங்களும் ஒருங்கிணைக்கப் படுகின்றன.
கட்டுரைகளை மேம்படுத்துதல்
[தொகு]- ஏற்கனவே இருக்கும் தாவரவியல் கட்டுரைகளை, பன்னாட்டு தாவரவியல் தரவுகளினால் மேம்படுத்துதல். (எடுத்துக்காட்டு)
- ஆங்கிலச்சொற்களுக்குரிய உள் இணைப்புகளை நீக்குதல் / உரிய கட்டுரைகளோடு இணைத்தல். (எடுத்துக்காட்டு)
- தற்போதுள்ள தாவரவியலாளர் பெயர்சுருக்கங்கள் ஒரே பெயருக்கு, பலவாறு பன்னாட்டு தரமின்றி தரப்பட்டுள்ளன. எ-கா: லின்னேயஸ், லி, L, கார்ல் லின்னேயஸ் காரோல் லின்னேயசு
- அவற்றினை பன்னாட்டு சீர்தர பெயரோடு இணைத்தல். (எ-கா: பன்னாட்டு சீர்தரமுள்ள சுருக்கப்பெயர்)
- தாவரவியல் தகவற்பெட்டி இல்லாதவற்றிற்கு அப்பெட்டி, சான்றுகள் ஆகியவற்றால் விரிவாக்குதல். (எடுத்துக்காட்டு) (உதவி: Raphia farinifera)
- தகவற்பெட்டிக்கான துணை வார்ப்புருக்களையும் பிற மொழிகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்.
- எடுத்துக்காட்டு: Raphia farinifera {{Speciesbox உடன் /Raphia, /Lepidocaryeae, /Calamoideae ஆகிய துணை வார்ப்புருகளையும் உருவாக்க வேண்டியிருந்தது.
- பகுப்பு பேச்சு:தகவற்பெட்டி தேவைப்படும் தாவரவியல் கட்டுரைகள் என்பதனையும் எண்ணுக.
- தகவற்பெட்டிக்கான துணை வார்ப்புருக்களையும் பிற மொழிகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்.
- பொதுவக வார்ப்புருவில் இருக்கும் பொருத்தமில்லா இணைப்புகளை மேம்படுத்த வேண்டும். (எடுத்துக்காட்டு)
- தேவையற்ற வழிமாற்றுகளை நீக்குதல். எடுத்துக்காட்டு: எம்பிரியோபைட் என்பது நிலத்தாவரங்கள் என வழிமாற்று இன்றி நகர்த்தப்பட்டது.
- இதுபோல ஏற்கனவே ஒலிபெயர்ப்பில் சொல்லிருக்கும் பக்கங்களில் தமிழ் பெயர்களை மாற்றிய பிறகே வழிமாற்று இன்றி பக்கத்தினை நகர்த்த வேண்டும்.
- கிரந்த தலைப்பு நீக்க வேண்டும். அப்பொழுது ஏற்கனவே கிரந்த தலைப்பு உள்ள கட்டுரைகளிலும் மாற்றம் ஏற்படுத்தி வழிமாற்று இன்றி கிரந்தமற்ற தலைப்புக்கு நகர்த்த வேண்டும். எடுத்துகாட்டு: ஐஸோநேந்த்ரா லான்சியொலாட்டா
- பகுப்பு:விக்கித்தரவில்லாதவை என்பதனையும் மேம்படுத்தவும்.
- பகுப்பு:ஒன்றிணைக்க வேண்டிய தாவரவியல் கட்டுரைகள் என்பதில் பங்களிக்க இணைத்துள்ள வழிகாட்டுதல் திரைநிகழ்வுப்படத்தினைப் பயன்படுத்துக.
- பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-தாவரவியல் - இவை பெருங்கட்டுரைகளாக உள்ளன. முழுமையாக செய்ய வேண்டும் என்பது இலக்கு. எனினும், 5000 பைட்டுகள் உள்ள கட்டுரையாக முதலில் மாற்றுக. பிறகு விரிவுபடுத்துக.
புதிய கட்டுரைகளை உருவாக்குதல்
[தொகு]- புதிய கட்டுரைகளை, மேற்கூறிய சீர்மைகளோடு, உருவாக்குதல்
- en:w:Category:Articles with 'species' microformats என்பதன் ஆங்கிலக் குறுங்கட்டுரைகளை, தமிழில் உருவாக்குதல்.
- விக்கியினங்கள் திட்டத்தின் தாவரவியலாளர்களைப் படங்களோடு தமிழில் உருவாக்குதல்.
- தாவரக் கட்டுரைகளுக்குத் தொடர்புடைய, கட்டுரைப்பட்டியலை உருவாக்குதல். காண்க: /தேவைப்படும் கட்டுரைகள்
- புதிய சிற்றினமொன்றினை உருவாக்கத் தேவையான அடிப்படை வடிவம் /தேவைப்படும் கட்டுரைகள்/தொடக்க வடிவம்/இனம்
- பன்னாட்டுத் தாவரவியல் அமைப்புகளின் கட்டுரைகளை உருவாக்குதல். எடுத்துக்காட்டு: பனை இல்லம், கியூ தோட்டம்
- படங்கள் கட்டற்ற முறையில் பல பன்னாட்டுத் தாவரவியல் தளங்களில் இருக்கின்றன. (காண்க: இணையப்பக்கம். )
- பொதுவகத்தில் படங்கள் இல்லையென உறுதிசெய்த பிறகு, பொதுவகத்தில் ஏற்றுதல். (எடுத்துக்காட்டு: c:Category:Borassus heineanus என்ற பகுப்பும், படங்களும் இணைக்கப்பட்டன)
- பின், இணைப்பினை விக்கித்தரவுத் திட்டத்திலும் (இணைக்கப்பட்டன), தமிழ் விக்கியிலும் இணைத்தல். (இணைக்கப்பட்டன)
இலக்குகள்
[தொகு]- முதற்கட்டமாக பூக்கும் தாவரத் தொகுதிமரபு குழும முறைமை 4 இக்கட்டுரையை முழுமையாக வளர்த்தெடுத்தல். பின்பு, இதனை அடிப்படையாகக் கொண்டு, புதிய நுட்பங்கள், புதிய கட்டுரைகள், இதற்குமுன் அமைந்த கட்டுரைகளை இற்றைப்படுத்தவும் செய்தல் வேண்டும்.
- மல்லிகை இனங்களின் பட்டியலின் கட்டுரைகள் வெள்ளோட்டமாக உருவாகவுள்ளன.
- தற்போதுள்ள தாவரவியல் கட்டுரைகளிலுள்ள தாவரவியலாளர் பெயர்சுருக்கப் பயன்பாட்டில் சீர்மை இல்லை.
- ஒரு தாவரவியலாளர் பெயரை, பன்னாட்டு சீர்தர பெயரோடு இணைத்தல். (எ-கா: பன்னாட்டு சீர்தரமுள்ள சுருக்கப்பெயர்) இதுபோல, அனைத்து தாவரவியலாளர் பெயர்களை, தொடர்புடைய அனைத்து கட்டுரைகளிலும் இணைக்க வேண்டும்.
- விக்கித்தரவு அடிப்படையில் தகவற்பெட்டியை எளிமையாக பயன்படுத்த உதவி கோரப்பட்டுள்ளது. காண்க: d:Wikidata_talk:WikiProject_Taxonomy#Guidance_needed_for_Tamil_Wikipedia
- மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) பெயர்களுக்கு தமிழ்ப் பெயர்களைத் தருக. இதன் குடும்பங்களுக்கு அடிப்படைக் கட்டுரைகளை உருவாக்கல். பகுப்பு:தமிழ்நாட்டு மூலிகைக் குடும்பங்கள்
- மலைச்சுத்தி#வகைப்பாட்டியல் இதுபோல உருவாக்குதல், பன்னாட்டு தரவுகளோடு ஒப்பிடுதலுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நுட்பம்
[தொகு]- தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள தாவரவியல் கட்டுரைகளின் தலைப்புகளை, petscan வழியே எடுக்கலாம். பகுப்பு, துணைப்பகுப்பு, துணைப்பகுப்பின் உட்பகுப்பு என மூன்று கட்டகத்தினுள்ளும் சென்று தாவரப்பெயர்களை இந்த இணைப்பு தரும். இவற்றை அணித்தரவு கோப்பாக தரவிறக்கிக் கொள்ளுதல் நன்று.
- பன்னாட்டுத் தாவரப் பெயர்கள் குறிப்பேடு (IPNI) தளத்தில், தாவரயினத்தின் முக்கிய தரவுகளை, முதலில் அணித்தரவுக் கோப்பாக பதிவிறக்கம் செய்தல் நன்று. எ-கா. Jasminum officinale
- உலக தாவரவள இணைநிலை (World Flora Online = WFO) என்ற பன்னாட்டு திட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பகிர்ந்த கட்டற்றதரவுகளைப் பதிவிறக்கி, தரவு அறிவியல் கருவிகளால் ஆய்தல்.
- விக்கிநூல்கள் திட்டப்பகுதியில், பைத்தான்3 நுட்பத்தில் தமிழ்சொற்களைக் கொண்டு(as variable) எளிய நிரலாக்கங்களை உருவாக்குதல். இதனால் யாவரும் புரிந்து கொண்டு விரைந்து செயற்படசெய்தல்.
- இத்தளத்தின் API விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளிவர உள்ளதால் அதனை தொடர்ந்து கவனித்தல்.
- விக்கித்தரவு அடிப்படையில் தகவற்பெட்டியை உருவாக்குதல் எ-கா. கழுதைப்பிட்டி, மூலிகை
- d:Wikidata:WikiProject Taxonomy என்பதில், எளிமையாக ஒரே ஒரு விக்கித்தரவு வார்ப்புரு({{#invoke: Taxobox | taxobox | qid=Q34687| count=6 |lang=de }.}) இடுவதன் மூலம், தாவரத் தகவற்பெட்டியும், பத்துக்கும் மேற்பட்ட மேற்கோள்களோடும் காட்டுவதற்கான நுட்பம் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும், d:Template:Taxobox, fr:Rosanae என்பனவற்றையும் ஒருங்கிணைத்து, APG IV அடிப்படையில் தனி தகவற்பெட்டி அமைப்பது நன்று.
- படமொன்றை, விக்கித்தரவில் இணைக்கும் கருவி.
- விக்கித்தரவு திட்டத்தில் பைத்தான்3 பயன்பாடுகளுக்கான கற்றல் வளத்தினை தமிழில் உருவாக்குதல். காண்க: d:Category:Pywikibot tutorial
- கட்டற்ற நுட்பங்களை உரிய திரைப்பதிவுகளோடு (screencast) பகிர்தல்.
துணை நுட்பங்கள்
[தொகு]- தமிழ்பேசு இணையதளத்தின் இணையக்கருவி
- அணித்தரவுக்கோப்பு நுட்பங்களுக்காக விரிதாள் வசதிகள்.
- இணையத் தரவுகளைப் பிரித்தெடுக்க அழகு வடிச்சாறு நுட்பம்.
- வகைப்பாட்டியலுக்கு உலகத் தாவரங்கள் இணைநிலை (Plants of the World Online = POWO) கருவியைப் பயன்படுத்துதல்.
- மேலும், ஒவ்வொரு தாவரயினத்தின் வாழிட, ஒத்தப்பெயர்களை எடுக்க, பியூட்டிபுல் சூப் பயன்படுத்தி எடுக்கலாம்.
- உலக தாவரவள இணைநிலை தளத்தின் அணித்தரவுக்கோப்பு ஏறத்தாழ 1000 மெகாபைட்டு இருக்கிறது. ஏறத்தாழ 15 இலட்சம் வரிகள் உள்ளன. ஒரு தாவரத்திற்கு ஒரு வரி எனலாம். அத்தரவினை சிப்லிட்டு (
split
= en:split (Unix)) கொண்டு பிரித்தல். - பைன்டு (
find
, en:find (Unix)) ஒரு கோப்புரைக்குள் பல கோப்புகள் உள்ள போது. எடுத்துக்காட்டாக 100 கோப்புகள் உள்ளன. அவற்றில் இருந்து குறிப்பிட்ட பொதுவான பெயரினைக் கோப்புகளை மட்டும் (எ-கா. *-2powo-placesClean.txt) பிரித்தெடுக்க$ find . -name \*.xls -exec cp {} newDir \;
என்ற கட்டளையை பயன்படுத்தலாம்.[1] - உலக தாவரவள இணைநிலை இணையத்தின் அணித்தரவுக்கோப்பில் இருந்து, வேண்டிய தாவரயினத்தின் தரவுவரியைப் பிரித்தெடுக்கும் பைத்தான்3 நிரலாக்கம்.
நுட்பத் தேவைகள்
[தொகு]- நிலவியல் வரைப்படங்களில் குறிப்பிட்ட நாடுகளைக் காட்ட நுட்பம் தேவை. எடுத்துக்காட்டு, காட்டு மல்லியின் பல ஆப்பிரிக்க நாடுகளைக் (தாயகங்கள்) காட்ட இயலுமா? அங்குள்ள படம், கட்டற்ற உரிமத்தில் உள்ளதால், எளிமையாகப் பதிவிறக்கம் செய்ய பொதுவகத்தின் நுட்பத்தினை அறிக.
- விக்கியினங்கள் திட்டத்தில் {{image}} என்ற வார்ப்புருவை இட்டாலே, விக்கித்தரவில் இருந்து உரிய படத்தினை காட்டும் இலுவா(Lua) நுட்பத்தினை அமைத்துள்ளனர். எ-கா wikispecies:Aaron Aaronsohn = ஆரோன் ஆரோன்சோன் (w:Aaron Aaronsohn)
- மேற்கோள் வார்ப்புருக்களை இணைக்கும் போது, ஏறத்தாழ 80 வார்ப்புருக்களே இணைக்க இயலும். ஆனால் ஒரு தாவரக்குடும்பத்தில் அதற்கும் மேற்பட்ட இனங்கள் இருக்க வாய்ப்புண்டு. உரிய மேற்கோள் இணைப்புகளைக் கட்டுரைகள் உருவாக்கத்தின் போதே கொடுத்தால், பின்னாளில் கட்டுரை உருவாக்கத்திற்கு உதவியாக இருக்கும். எ-கா எண்பதிற்க்கும் மேற்பட்ட மேற்கோள்களைத் தரும் போது ஏற்பட்ட இடரும், தானியக்கப் பகுப்பும்..
பங்களிப்பாளர்
[தொகு]- --த♥உழவன் (உரை) 03:01, 8 நவம்பர் 2023 (UTC)
- --நேயக்கோ (பேச்சு) 04:28, 13 நவம்பர் 2023 (UTC)
- --NithyaSathiyaraj (பேச்சு) 13:06, 13 நவம்பர் 2023 (UTC)
- --KarunyaRanjith (பேச்சு) 07:43, 18 நவம்பர் 2023 (UTC)
- --Mythily Balakrishnan (பேச்சு) 07:54, 18 நவம்பர் 2023 (UTC)
- --கு. அருளரசன் (பேச்சு) 12:20, 18 நவம்பர் 2023 (UTC)
- --TVA ARUN (பேச்சு) 09:29, 1 திசம்பர் 2023 (UTC)
- --Rabiyathul (பேச்சு) 09:57, 7 திசம்பர் 2023 (UTC)